அன்புமணி, திருமா, சீமானுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்ன விஜய்.. கமலை கண்டுக்கவேயில்லை கவனிச்சீங்களா?
சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் இன்று பிறந்தநாள் காண்கிறார். இதை அடுத்து அவருக்கு பல்வேறு தரப்பினரும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில் நடிகரும் தவெக தலைவருமான விஜய் சீமான் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி, திருமாவளவன், அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பலருக்கும் வாழ்த்து கூறிய விஜய், நேற்று பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் கமலஹாசனுக்கு மட்டும் வாழ்த்து தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் இயக்குனர் அரசியல்வாதி என பன்முகங்கள் கொண்டவர் சீமான். நரம்புத் தெறிக்க, அரங்கம் அதிர அவரது பேச்சு இளைஞர்களை வெகுவாக கவர்ந்தது. திரைப்படத்தை போலவே அரசியலிலும் அதிரடியாக செயல்படுபவர்.

எதிரில் நிற்பது யாராக இருந்தாலும் அவர்களை ஒரேடியாக திட்டி தீர்த்து விடுவதும், இல்லையேல் ஒரேடியாக புகழ்ந்து தள்ளுவதும் சீமானின் வாடிக்கை. அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு விஜயை மிகக் கடுமையாக விமர்சித்தார் நடிகர் சீமான்.
அந்த வகையில் பிரபல நடிகராக தமிழ் சினிமாவில் அறியப்பட்ட விஜய், தமிழக வெற்றி கழகம் எனும் அரசியல் கட்சியை ஆரம்பித்தார். கடந்த சில நாட்களுக்கு முன் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் அவரது கட்சி அதிகாரப்பூர்வமாக தமிழகத்தில் கால் பதித்தது. அதில் பேசிய நடிகர் விஜய் தமிழ் தேசியமும் திராவிடமும் தனது இரு கண்கள் எனக் கூறியிருந்தார். இதற்கு கடுமையான கண்டனம் தெரிவித்ததோடு விஜயை மிகக் கடுமையாக விமர்சித்திருந்தார் நாம் தமிழர் கட்சியின் சீமான்.
மேலும், சாலையில் ஓரமாக நிற்க வேண்டும் நடுவில் நின்றால் அடிபட்டு செத்துப் போய் விடுவாய் என சீமான் விமர்சித்தது விஜய் ரசிகர்களை கொந்தளிப்பில் ஆழ்த்தியது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே தமிழக வெற்றிக்கழகத் தொண்டர்களும் நாம் தமிழர் தொண்டர்களும் மோதல் போக்கில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் இன்று சீமான் தனது 58 வது பிறந்த நாளை கொண்டாடும் நிலையில் அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் சீமானுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் நடிகர் விஜய். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்," நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் 'சகோதரர்' சீமான் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் கூறியிருந்தார்.
சீமான் பிறந்தநாள் அன்று விஜய் வாழ்த்து தெரிவித்திருப்பது அரசியல் ஆரோக்கியம் என்று பார்க்கப்படுகிறது. விஜய்யை மிகக் கடுமையாக விமர்சித்த சீமானுக்கு அவர் வாழ்த்து தெரிவித்திருப்பதை நாம் தமிழர் கட்சியினர் கூட பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில் விஜய் சீமானுக்கு வாழ்த்து தெரிவித்ததில் மற்றொரு அரசியலும் இருக்கிறது என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள். கடந்த நாட்களில் பிறந்த நாள் கொண்டாடிய பிரதமர் நரேந்திர மோடி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பலருக்கும் நடிகர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். அதற்கு முன்பாகவும் பலருக்கும் பிறந்தநாள் வாழ்த்து கூறி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.
அந்த வகையில் தான் இன்று சீமான் பிறந்த நாளுக்கும் அவர் வாழ்த்து கூறினார். ஆனால் தமிழ் திரையுலகில் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக இருக்கும் நடிகரும் தற்போது அரசியல்வாதியாக விஜய்க்கு சீனியராக இருக்கும் கமல்ஹாசனுக்கு விஜய் வாழ்த்து தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று வரை தன்னை கடுமையாக விமர்சித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள விஜய், தன்னை தொடர்ந்து பல இடங்களில் பாராட்டி வந்திருக்கும் கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவிக்காதது ஏன் என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.
அதே நேரத்தில் 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணியை மனதில் வைத்து சீமான், திருமாவளவன், அன்புமணி உள்ளிட்டோருக்கு விஜய் வாழ்த்து சொன்னதாகவும், திமுக கூட்டணியில் இருக்கும் கமலஹாசனுக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது, மேலும் தன்னை பாராட்டிய கமலஹாசனுக்கு வாழ்த்து தெரிவிக்காமல் விமர்சித்த விஜய், விமர்சித்த சீமானுக்கு வாழ்த்து தெரிவித்திருப்பது கவனிக்கத்தக்கது.
-
தவெக கூட்டத்துக்கு அனுமதி மறுப்பா? நாளை கூட்டம் என இன்று எழுதி தந்தா போதாது.. குமரகுருபரன் விளக்கம் -
விஜய் படங்களை ஹிட்டாக்க செய்த வில்லங்க வேலை.. அம்பலப்படுத்திய பிரபலம்.. கடுப்பில் ரசிகர்கள் -
தவெக வேட்பாளர் அறிமுக கூட்டம் திடீர் ரத்து.. தேர்தல் ஆணைய அனுமதி கிடைக்காததால் ஒத்திவைப்பு! -
பெண்கள் குறித்த பொன்ராஜ் பேச்சுக்கு விஜய் கடும் கண்டனம்.. திமுகவையும் காட்டமாக விமர்சித்த விஜய்! -
பெரம்பூர் தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டது விஜய்க்கு சாதகமா? கள நிலவரம் என்ன? டேட்டாவை பாருங்க -
உங்க விஜய் நான் வறேன்.. களத்தில் இறங்கிட்டாரு விஜய்! ஒரே நாளில் 5 இடத்தில் பரப்புரை! எங்கே? எப்போது? -
அன்று 3 சீட்டை திருப்பி தந்த சரத்.. இன்று மொத்த சீட்டையும் விட்டு தந்த கமல் - டார்ச் லைட் பவர் என்ன? -
0.43% பிரேமலதாவுக்கு 10+1..3% கமலுக்கு 0! இன்னொரு மதிமுக மநீம? நீங்க சினிமாவுக்கே போயிருங்க ஆண்டவரே! -
தலைமை செயலகத்திற்கு திடீர் விசிட் வந்த செங்கோட்டையன்.. தேர்தல் அதிகாரியிடம் மனு -
டிவில கூட விஜய் படத்தை போடக் கூடாது.. அவசர கடிதத்தை தேர்தல் அதிகாரிக்கு எழுதிய காங்கிரஸ் -
பெரம்பூரில் களமிறங்கும் விஜய்.. ஏசி அலுவலகம் ரெடி.. மார்ச் 28 முதல் பிரச்சாரம் -
கமல்ஹாசனின் மநீம தேர்தலில் போட்டியிட வேண்டும்.. ஸ்டாலினுக்கு வேண்டுகோள் வைத்த திருமாவளவன்!











Click it and Unblock the Notifications