விஜய் தான் சிஎம்? தவெக 40% சாத்தியமா? இபிஎஸ்-ஸின் சரிவு விஜய்க்கு லாபமா? சில மணித்துளிகளில் முடிவு
சென்னை: விஜய்யின் அரசியல் நகர்வு நாளுக்கு நாள் உற்றுநோக்கப்பட்டு வருகிறது.. சட்டமன்ற தேர்தலாகட்டும, அதற்குப் பிந்தைய அரசியல் நகர்வுகளும் தமிழக அரசியலில் ஒரு புதிய விவாதத்தைக் கிளப்பியுள்ளன. குறிப்பாக எக்ஸிட் போல் முடிவுகள் வெளிவந்ததில் இருந்தே, சினிமா, மற்றும் அரசியல் வட்டாரங்களில் திடீரென விஜய்க்கான ஆதரவு அதிகரிக்க துவங்கியிருப்பதை நம்மால் கவனிக்க முடிகிறது.. இதற்கு என்ன காரணம்? அதைப் பற்றி இங்கே சுருக்கமாகப் பார்ப்போம்.
கடந்த பல வருடங்களாகவே திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு துருவங்களைச் சுற்றியே தமிழக அரசியல் சுழன்று வந்துள்ளது. இடையில் விஜயகாந்த் போன்றவர்கள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முயன்றாலும், இப்போது விஜய்க்கு கிடைத்துள்ள வரவேற்பு சற்று உற்றுநோக்கத்தக்கது.
குறிப்பாக, முதல்முறை வாக்காளர்கள், இளைஞர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் விஜய்க்கு இருக்கும் செல்வாக்கு ஒரு முக்கியக் காரணியாகக் கருதப்படுகிறது.

எக்ஸிட் போல் முடிவு
நடந்து முடிந்த தேர்தலில் 233 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்ட தவெக, பாரம்பரியக் கட்சிகளின் வாக்கு வங்கியில் எந்த அளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதைப் பொறுத்தே அதன் எதிர்காலம் அமையும். இது வெறும் ரசிகர் மன்ற பலமா அல்லது மாற்றத்தை எதிர்பார்க்கும் பொதுமக்களின் பிரதிபலிப்பா என்ற விவாதம் தற்போது சோஷியல் மீடியாவில் எழுந்துள்ளது.
சமீபத்தில் வெளியான எக்ஸிட் போல் முடிவுகளில், தவெக 20 முதல் 40 சதவீத வாக்குகளைப் பெற வாய்ப்புள்ளதாக வெவ்வேறு விதமாகக் கணிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, வைகோ போன்ற மூத்த தலைவர்கள் சுட்டிக்காட்டியபடி, மாணவர் சமுதாயத்தின் ஆதரவு விஜய்க்கு சாதகமாக திரும்பினால் அது தேர்தல் முடிவுகளில் ஆச்சரியமான மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காங்கிரஸின் மாணிக்கம் தாகூர் போன்றவர்கள், அதிமுகவின் தற்போதைய நிலைப்பாடும், பிற அரசியல் சூழல்களும் மறைமுகமாக விஜய்க்கு சில வாக்குகளைப் பெற்றுத் தரக்கூடும் என்று கருத்து தெரிவித்துள்ளனர். அதேநேரம், ஆளுங்கட்சியான திமுகவின் வாக்கு வங்கியை இந்தத் தாக்கம் எந்தளவுக்குப் பாதிக்கும் என்பதும் உன்னிப்பாகக் கவனிக்கப்படுகிறது.
சினிமா பிரமுகர்களின் திடீர் ஆதரவு
விஜயையும் அவரது ஆதரவாளர்களையும் விமர்சிப்பவர்களுக்கு டி.ராஜேந்தர் மற்றும் ராதாரவி போன்ற மூத்த கலைஞர்கள் அளித்துள்ள பதில் இங்கு கவனிக்கத்தக்கது. குறிப்பாக டி.ராஜேந்தர், "படித்தவர்கள் அதிகம் இருக்கும் கட்சி தவெக" என்று குறிப்பிட்டது, அக்கட்சிக்கு அறிவுசார் தளத்திலும் ஆதரவு இருப்பதைச் சுட்டிக்காட்டுவதாக அவரது ஆதரவாளர்கள் கருதுகிறார்கள்..
ராதாரவி தனது பாணியில், சினிமாவிலிருந்து வந்த ஒரு சகோதரர் பெரும் இயக்கங்களுக்குப் போட்டியாக நிற்பதை அங்கீகரித்திருக்கிறார்.
அதாவது, சினிமாவை சேர்ந்தவர்கள் என்பதால் மட்டுமே இவர்கள் விஜய்க்கு ஆதரவு அளிக்கவில்லை, மாறாக, எக்ஸிட் போல் முடிவுகள் வெளியாகி விஜய்யின் அரசியல் வருகை ஒரு பேசுபொருளாக மாறியுள்ள சூழலில், அந்த அதிர்வலைகளை உணர்ந்தே இத்தகைய கருத்துக்களை முன்வைப்பதாகத் தெரிகிறது.
திமுக கூட்டணியில் எழும் குரல்கள்
எக்ஸிட் போல் முடிவுகள் தவெக ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுக்க வாய்ப்புள்ளதாகக் காட்டிய பிறகு, எதிர்கால அரசியல் கணக்குகளை கருத்தில் கொண்டு இத்தகைய கருத்துக்கள் முன்வைக்கப்படலாம் என அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.. இது தற்போதைய கூட்டணிக்குள் இருக்கும் சில முரண்பாடுகளை வெளிப்படுத்துவதாகவும் அல்லது விஜய்யின் வளர்ச்சியை மற்ற கட்சிகள் அங்கீகரிக்க வேண்டிய கட்டாயத்தைச் சுட்டிக்காட்டுவதாகவும் பார்க்கப்படுகிறது.
விஜய்யின் அரசியல் பயணம் வெறும் சினிமா கவர்ச்சியால் மட்டும் பயணிக்கிறதா அல்லது வலுவான கொள்கை சார்ந்து இருக்கிறதா என்பது தேர்தல் முடிவுகளுக்குப் பிறகே தெளிவாகும்.
வாக்கு வங்கியாக மாறுமா
திமுகவை நேரடியாக எதிர்ப்பது, தனித்து போட்டியிடுவது போன்ற முடிவுகள் அவரை ஒரு தீவிர அரசியல் களத்தில் நிறுத்தியுள்ளன. இந்த அரசியல் சூழலைப் பொறுத்தவரை, விஜய்யின் எழுச்சி வெறும் தனிநபர் ஆதரவாக பார்க்கப்படுவதற்கு பதிலாக, தமிழக அரசியலில் உருவாகிக் கொண்டிருக்கும் மாற்ற மனநிலையின் ஒரு அறிகுறியாகவும் சிலர் கருதுகிறார்கள்.
இருந்தாலும், இந்த ஆதரவு நிலையான அரசியல் வாக்கு வங்கியாக மாறுமா அல்லது தற்காலிக அலைவாகவே இருந்து விடுமா என்பது தேர்தல் முடிவுகளும், அதற்குப் பிந்தைய அரசியல் நகர்வுகளும் வெளிப்படுத்தும் ஒரு முக்கிய அம்சமாகப் பார்க்கப்படுகிறது. ரிசல்ட்டுக்கு இன்னும் ஒரு நாள்தானே உள்ளது... பொறுத்திருந்து பார்ப்போம்!












Click it and Unblock the Notifications