அப்படியே கண்கலங்கனும்..கொஞ்ச நேரம் பேசாமல் நிற்கவும்! ஸ்கிரிப்ட் பார்த்து எமோஷனல் ஆன விஜய்? உண்மையா?
சென்னை: நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவரான விஜய் வேலூரில் நேற்று நடைபெற்ற நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் உணர்ச்சிவசப்பட்டு பேசினார். ஒரு இடத்தில் மிகவும் எமோஷனலாக பேசிய விஜய் சில நொடிகள் பேசாமல் நின்றார். இந்த நிலையில் விஜய் எப்படி பேச வேண்டும், எந்த இடத்தில் கண்கலங்க வேண்டும் என ஸ்கிரிப்ட் பேப்பர் கொடுக்கப்பட்டு பேசியதாக சமூக வலைதளங்களை ஒரு புகைப்படம் பகிரப்பட்டு வருகிறது. இந்த நிலையில் விஜய் பேசியதற்கு பின்னர் வேண்டுமென்றே சிலர் அதனை ஏஐ மூலம் தயாரித்து சமூக வலைதளங்களை பரப்பி வருவதாக கூறுகின்றனர் தமிழக வெற்றி கழகத்தினர்.
அரசியல் கட்சி தொடங்கிய பிறகு "உங்கள் விஜய் நான் வரேன்" என்ற பெயரில் மாநிலம் முழுவதும் பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன் தொடர்ச்சியாக வேலூரில் விஜய் தனது கட்சி நிர்வாகிகள் கூட்டத்தை நடத்தினார். வழக்கமான கூட்டங்களை விட இந்த முறை பெரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
கூட்டத்தில் கலந்துகொள்ள வந்தவர்களுக்கு பந்தல் மற்றும் நாற்காலிகள் ஏற்பாடு செய்யப்பட்டதால் கூட்டம் ஒழுங்காக நடைபெற்றது. முன்பு கரூர், சேலம் பகுதிகளில் நடந்த குழப்பங்கள் போன்ற நிலை உருவாகாத வகையில் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

தவெக விஜய்
எந்த வித அசம்பாவிதமும் இல்லாமல் கூட்டம் முடிந்தது அக்கட்சியினருக்கு நிம்மதியை அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கூட்டத்தில் பேசிய விஜய்," த.வெ.க ஆட்சி அமைந்த பிறகு ஒவ்வொரு கிராமத்திற்கும் நேரில் வந்து மக்களை சந்திப்பேன். என்னை அசிங்கமாகப் பேசினால், அது மக்களைப் பேசியது போன்றது. நானும் மக்களும் ஒன்று. விஜயும் மக்களும் ரத்தமும் சதையும், உடலும் உயிரும் மாதிரி. அதை பிரிக்கவே முடியாது.
தற்போது நடைபெறும் தேர்தல் தமிழ்நாட்டு மக்களுக்கும் ஊழலுக்கும், லஞ்சத்திற்கும் எதிராக நடக்கும் போர்.
தமிழக வெற்றிக் கழகம்
விஜய்க்கும், ஸ்டாலின் சார்க்கும் நடக்கும் போர்தான் இந்த தேர்தல். இதுக்கு நடுவில் NDA, டெல்லி என எதுவும் இல்லை. இது ஒரு அதிசய தேர்தல். இந்த தேர்தலில் ஒட்டுமொத்தமாக எல்லாரும் சேர்ந்து இந்த விஜயை எதிர்க்கிறார்கள். இந்த விஜய் ஊழலை எதிர்ப்பதால், மக்களோடு மக்களாக இருப்பதால் அவர்களுக்கு ஆதங்கம்; அதனால் நம்மை எதிர்க்கிறார்கள். அனைத்து கட்சிகளும் சேர்ந்து என்னை எதிர்க்கின்றன. அனைவருக்கும் ஒன்றை சொல்லிக் கொள்கிறேன். தவெக, திமுக இடையில் மட்டும் தான் தேர்தலில் போட்டி.
விஜய் உணர்ச்சிப் பேச்சு
நடக்கும்போது காமெடிக்கு இங்கே இடமில்லை. கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழியைப் போட்டீர்கள்? மனசாட்சி வேண்டாமா சி.எம். சார்?, நாங்கள் எல்லோரும் உங்கள் நண்பர்கள் எனில் ஏன் எங்கள் கூட்டத்திற்கு அனுமதி அளிக்க மறுக்கிறீர்கள்?" என உணர்ச்சிவசப்படுத்தும் விதமாக பேசினார். மக்கள் மற்றும் தானும் பிரிக்க முடியாத உறவு கொண்டவர்கள் என கூறியபோது அவர் கண்கலங்கினார்.
நிர்வாகிகள் கண்ணீர்
சில நொடிகள் பேச முடியாமல் நின்று பின்னர் மீண்டும் பேச்சை தொடர்ந்தார். மேடையில் ஏற்பட்ட அந்த உணர்ச்சி கலந்த பேச்சு கூட்டத்தில் இருந்த பலரையும் பாதித்தது என்று தான் சொல்ல வேண்டும். உண்மையில் அங்கு இருந்த நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்களும் அதனை உணர்ச்சி பெருக்கோடு தான் காணப்பட்டனர். இந்த நிகழ்வுக்குப் பிறகு சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துகள் வெளியாகத் தொடங்கின.
விஜய் ஸ்க்ரிப்ட் பேப்பர்
குறிப்பாக மேடையில் அவர் காட்டிய உணர்ச்சி இயல்பானதல்ல, முன்கூட்டியே திட்டமிட்ட நடிப்பு என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதற்காக ஒரு குறிப்பிட்ட ஸ்கிரிப்ட் என ஏ4 ஷீட்டின் புகைப்படம் இணையத்தில் பரவியது. அதில், குறிப்பிட்ட வரிகளை வலியுறுத்தி பேச வேண்டும், சிறிது நேரம் இடைவெளி விட வேண்டும், பின்னர் உணர்ச்சிவசப்பட்டு நிற்க வேண்டும் போன்ற வார்த்தைகள் இருந்ததாக சமூக வலைதளங்களில் புகைப்படம் பரவியது.
தவெக கண்டனம்
திமுக மற்றும் விஜய் எதிர்ப்பாளர்கள் அந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் அதிகமாக பகிர்ந்து விஜயை மிகக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதே நேரத்தில் இது விஜய் பேச்சுக்கு பிறகு ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட ஸ்கிரிப்ட் பேப்பர் எனவும், உண்மையில் விஜய் பேசியதை வைத்து அப்படியே சில ஆக்சன்களை சேர்த்து போலியாக திமுகவினர் பரப்பி வருவதாக குற்றம் சாட்டுகின்றனர் தமிழக வெற்றிக் கழகத்தினர். இதனால் திமுகவினருக்கும் தமிழக வெற்றி கழகத்தினருக்கும் இடையே சமூக வலைதளங்களில் கருத்து மோதல் வெடித்துள்ளது.
-
கலைஞரே 2 தொகுதில போட்டி போட்டு இருக்கார்.. யூடியூபர் பிரசாந்த் சொன்ன புது மேட்டர்.. உண்மை என்ன? -
இரவோடு இரவாக.. அதிமுகவில் இருந்து தவெக பக்கம் வந்த நிர்வாகிகள்.. மூவருக்கும் சீட் கொடுத்த விஜய்! -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
"நேர்காணல் கூட இல்லை.." விஜய் வேட்பாளர்களை அறிவிக்கும் போதே போராட்டத்தில் இறங்கிய தவெகவினர் -
கூட இருந்தவரை ஆனந்த கண்ணீர் விட வைத்த விஜய்! தவெக மேடையில் அரங்கேறிய காட்சிகள்? யாரிந்த சபரிநாதன்? -
திருச்சி கிழக்கில் தேர்தல் அலுவலகம் கூட அமைக்காத தவெக.. 25 நாட்களில் விஜய்யால் மாற்றிவிட முடியுமா? -
ஸ்டாலினுக்கு எதிராக கொளத்தூரில் விஜய் டிக் அடித்த அந்த பழைய முகம்! திமுக வளர்த்தெடுத்த புள்ளி! யார்? -
திமுகனாலும்.. தவெகனாலும்.. சீட்டுகளை அள்ளும் மாஜி அதிமுக தலைகள்! விஜய் லிஸ்ட்டில் யார் யார் பாருங்க! -
TVK candidate list: தவெக வேட்பாளர் பட்டியல்! கோபியில் ’சீனியர்’ செங்கோட்டையன்! 10வது முறையாக களம் காண்கிறார்! -
திருப்பூர் வடக்கில் சத்யபாமா.. 234-க்கு 23 பெண் வேட்பாளர்களுக்கு மட்டுமே வாய்ப்பளித்த விஜய்! -
Vijaykanth: திமுக கூட்டணியில் இணைந்த தேமுதிக! விஜயகாந்த் கட்சியை விஜய் இப்படி பேசலாமா? -
ஜனநாயகன் ரிலீஸ் பற்றி வெளியான தகவல்.. ரஜினிக்கு பயந்து இந்த முடிவா? கடைசியில் இப்படி ஆகிடுச்சே!












Click it and Unblock the Notifications