சின்னப்புள்ளத்தனமால்ல இருக்கு..லைக், ஷேர் ஓட்டாக மாறுமா? சீரியஸாகவே இல்லாத விஜய்! 2026 அவ்வளவு தானா?
சென்னை: 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தின் பிரதான அரசியல் கட்சிகள் தேர்தல் வேலைகளை முடுக்கி விட்டுள்ளன/ அதே நேரத்தில் திமுகவுக்கும் தவெகவுக்கும் தான் போட்டி என கூறிவரும் விஜய் கூட்டணி அமைப்பதில் தொடங்கி பல்வேறு விஷயங்களில் கோட்டை விட்டு விட்டதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது. ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற முழக்கத்தை எழுப்பியும் இதுவரை அவருடன் எந்த கட்சியும் கூட்டணி அமைக்க முன்வரவில்லை. அது மட்டும் இல்லாமல் சமூக வலைதளங்களில் வரும் லைக்கும் ஷேரும் ஓட்டுக்களாக மாறாது என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணியில், தொடக்கத்தில் பல கட்சிகள் இணையும் என எதிர்பார்க்கப்பட்டாலும், இதுவரை எந்த முக்கிய கூட்டணியும் உருவாகவில்லை என்று கூறப்படுகிறது. அரசியல் சூழலில் ஒவ்வொரு கட்சியும் தங்கள் நிலையை வலுப்படுத்திக் கொண்ட நிலையில், விஜய் தலைமையிலான கட்சி தனித்து களமிறங்க வேண்டிய நிலை உருவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசியலில் புதிய சக்தியாக உருவாக முயலும் தவெக, மாநாடுகள், மக்கள் சந்திப்புகள் போன்ற நிகழ்வுகள் மூலம் தன்னை நிலைநிறுத்த முயற்சி செய்து வருகிறது. இருப்பினும் கூட்டணி தொடர்பான உறுதியான அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.

விஜய் அரசியல்
இதனால் தேர்தலை தனித்துப் போட்டியிடும் வாய்ப்பு அதிகரித்துள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். 2026 தேர்தல் என்பது திமுக மற்றும் அதிமுக போன்ற பெரிய கட்சிகளுக்கு மட்டுமல்ல, புதிய அரசியல் முயற்சிகளுக்கும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் தன்னை மாற்று சக்தியாக காட்ட முயற்சி செய்து வருகிறார் விஜய். தொடக்கத்தில் கூட்டணி ஆட்சியை நோக்கமாகக் கொண்டு பல கட்சிகளுடன் தொடர்பு கொண்டதாக கூறப்பட்டாலும், அந்த முயற்சிகள் பலனளிக்கவில்லை என்று தகவல்கள் வெளியாகின்றன.
தமிழக வெற்றிக் கழகம்
அரசியல் விமர்சகர்கள் கூறும் போது, புதிய கட்சிகளில் வழக்கமாக தேர்தல் வெற்றிக்குப் பிறகே உள்பிரச்சனைகள் உருவாகும். ஆனால், இங்கு ஆரம்பத்திலேயே பல நிலைகளில் கருத்து வேறுபாடுகள் இருப்பதாக பேசப்படுகிறது. மாவட்ட அளவிலான அமைப்பு வேலைகளிலும் சவால்கள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. விஜய் தனது அரசியல் பேச்சுகளில் ஆளும் கட்சியை தொடர்ந்து விமர்சித்து வருகிறார். அதே நேரத்தில் மற்ற தேசிய அரசியல் நிலைப்பாடுகள் குறித்து அவரது அணுகுமுறை மாறுபட்டதாக அரசியல் வட்டாரங்கள் மதிப்பீடு செய்கின்றன.
2026 தேர்தல்
இதுவும் கூட்டணி வாய்ப்புகளை பாதித்திருக்கலாம் என சிலர் கருதுகின்றனர். கட்சியின் வேட்பாளர் தேர்விற்காக வெளியிடப்பட்ட விருப்ப மனுக்கள் பெருமளவில் பெறப்பட்டதாக கூறப்பட்டாலும், அவற்றில் குறைந்த எண்ணிக்கையிலான மனுக்கள் மட்டுமே கட்சி அலுவலகத்துக்கு டெபாசிட்டுடன் திரும்ப வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவும் கட்சியின் வலிமை குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள், பொதுக்கூட்டங்கள், சமூக வலைத்தள ஆதரவு போன்றவை கட்சிக்கு ஆதரவாக இருப்பதாக கூறப்பட்டாலும், தேர்தல் வெற்றி பெற அது மட்டும் போதுமா என்ற கேள்வியும் எழுகிறது.
கூட்டணி அரசியல்
தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில், தமிழகத்தின் பல பகுதிகளில் இன்னும் தீவிரமான கட்சிப் பணிகள் தேவைப்படுகின்றன என அரசியல் வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன. இந்த நிலையில், தனித்து களமிறங்கும் வாய்ப்பை முன்வைத்து தமிழக வெற்றிக் கழகம் தனது அடுத்த கட்ட நடவடிக்கைகளை திட்டமிட்டு வருகிறது. வரும் தேர்தல் தமிழக வெற்றிக் கழகத்தின் வலிமையை பறைச்சாற்றும் தேர்தலாக பார்க்கப்படும் நிலையில், அதனை விஜய் சீரியஸாகவே எடுத்துக் கொள்ளவில்லை என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications