“தேவையில்லாம பேசின.. அவ்ளோதான்”.. விஜய்யை விமர்சித்த இளைஞரை விரட்டிச் சென்று மிரட்டிய ரசிகை!
சென்னை: சென்னையில் பைக்கில் விஜய் காரின் அருகே சென்று கொண்டிருந்த நபர் விஜய்யை விமர்சித்து உள்ளார். அவரை விரட்டிச் சென்ற விஜய் ரசிகை ஒருவர் அவரிடம் கோபமாக கொந்தளித்துப் பேசியுள்ளார்.
வரும் ஏப்ரல் 23ஆம் தேதி தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. தவெக தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதியில் வேட்பாளராக போட்டியிடுகிறார். 234 தொகுதிகளுக்கும் அண்மையில் வேட்பாளர்களை அறிவித்திருந்தார் விஜய். இன்று திருச்சி கிழக்கு தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்தார் விஜய்.

விஜய் திருச்சியில் வேட்பு மனு செய்யவும், தேர்தல் பிரச்சாரத்திற்கும் சென்னையில் இருந்து இன்று காலை விமானம் மூலம் திருச்சி புறப்பட்டுச் சென்றார். விமான நிலையத்திற்கு கிண்டி சாலையில் காரில் சென்று கொண்டிருந்த விஜய் காரை பார்த்து பைக்கில் சென்ற ஒரு நபர் விமர்சனம் செய்தார். அப்போது அந்த வழியாக டூவீலரில் வந்து கொண்டிருந்த இளம்பெண் ஒருவர் விஜய்யை விமர்சித்த நபரை மோட்டார் சைக்கிளில் விரட்டிச் சென்றார்.
விமர்சனம் செய்த நபரின் அருகில் சென்ற அந்த பெண் அவரை நோக்கி 'தேவையில்லாம பேசின... அவ்ளோதான்' என மிரட்டும் வகையில் கூறினார். இதைக் கேட்ட அந்த நபர் பெண்ணை பார்த்து ஏதோ கையை காட்டியபடி திட்டி விட்டு வேகமாக கடந்து சென்றார்.
இதை கேட்ட அந்தஒ பெண் மீண்டும் கோபத்தில் கொந்தளித்து மீண்டும் அவரை விரட்டிச் சென்று 'ஏண்டா டேய்... 'என திட்டியபடி விரட்டினார். இதைக்கேட்ட அந்த நபர் மின்னல் வேகத்தில் மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து சென்றார். நடுரோட்டில் நடந்த இந்த சம்பவத்தால் கிண்டி சாலையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
-
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
விஜய் கையில் எடுக்கப்போகும் 2 மெகா திட்டங்கள்.. ஆதவ் அர்ஜுனா சர்ப்ரைஸ் அப்டேட் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன் -
திருப்பூர் ரிதன்யா வரதட்சணை மரணம்: பைத்தியக்காரன் போல சுத்துறோம்! விஜய்க்கு ரிதன்யாவின் பெற்றோர் மனு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
மகளிர் உரிமைத் தொகை ரூ 2500 எப்போது? பட்டென அப்டேட் கொடுத்த மரியவில்சன்! 2 வாரங்கள் கழித்தா? -
"டிவிகேவால் தான் கரு கலைந்ததா?".. இதோடு உங்க நாடகத்தை நிறுத்திக்கோங்க!" ஜூலிக்கு நடிகர் வார்னிங் -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட்












Click it and Unblock the Notifications