Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜனநாயகன் பிரச்சனைக்கு காங். குரல் கொடுப்பது ஏன்? திமுகவிற்கு தொடர்பா.. கேஎன் நேரு ரியாக்‌ஷன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜனநாயகன் பட சர்ச்சைக்கும் திமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என அமைச்சர் கே என் நேரு தெரிவித்துள்ளார். ஜனநாயகன் படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்கப்படாததால் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாக அமைச்சர் கே என் நேரு கருத்து தெரிவித்துள்ளார்.

விஜய்யின் ஜனநாயகன் பட விவகாரத்தில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் தலைவர்கள் பலர் ஆதரவாக கருத்து தெரிவித்து வருவது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த கே.என் நேரு, "இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஏன் குரல் கொடுக்கிறார்கள் என்று தெரியவில்லை" என்றார்.

Vijay jana nayagan issue Why Congress Raising Its Voice Ask DMK Minister KN Nehru

ஜனநாயகன் திரைப்படம்

நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் நாளை வெளியாவதாக முதலில் அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் படத்திற்கு இன்னும் தணிக்கை சான்றிதழ் வழங்கப்படவில்லை. இதனால் உலகம் முழுக்க ஜனநாயகன் ரிலீஸ் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் 18 ஆம் தேதியே சென்சாருக்கு படம் அனுப்பட்ட நிலையில் தற்போது வரை கிடைக்காததால் படக்குழு அப்செட்டில் இருப்பதாக கூறப்படுகிறது. இதேபோன்று விஜய் ரசிகர்களும் நாளை படம் வெளியாகும் என எதிர்பார்த்து இருந்த நிலையில் அவர்களுக்கும் இந்த அறிவிப்பான ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

விஜய் ரசிகர்கள் ஏமாற்றம்

படத்திற்கான ஆன்லைன் முன்பதிவு பல்வேறு தியேட்டர்களில் நடந்து வந்த நிலையில் ரசிகர்கள் பலரும் ஆவலோடு புக் செய்திருந்தனர். இந்த நிலையில் படம் வெளியாகுமா இல்லையா என்பது நாளை உயர் நீதிமன்றம் அளிக்க இருக்கின்ற தீர்ப்பிலேயே தெரியவரும் என்பதால் ஒரு சில தியேட்டர்கள் டிக்கெட்டுக்கான பணத்தை ரீபண்ட் செய்து வருகிறார்கள்.

திமுகவே காரணம் என குற்றச்சாடு

ஜனநாகன் படத்துக்கு சென்சார் சான்றிதழ் வழங்கப்படாதது தொடர்பாக கேவிஎன் புரோடெக்‌ஷன்ஸ் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் படக்குழு மற்றும் தணிக்கை குழு தரப்பினரின் வாதங்களை கேட்ட நீதிபதி பி.டி ஆஷா, வரும் 9 ஆம் தேதி வழக்கை ஒத்தி வைத்தார்.

இதனால் படம் ரிலீஸ் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் பலரும் ஏமாற்றமடைந்துள்ள நிலையில் ஜனநாயகன் திரைப்பட வெளியீட்டில் திமுகவின் சதி இருப்பதாக விமர்சித்து வருகிறார்கள். ஏற்கனவே பராசக்தி படத்தை ஜனநாயகனுக்கு போட்டியாக இறக்கியதாகவும் விஜய் ரசிகர்கள் விமர்சித்து வந்திருந்த நிலையில் தற்போது மேலும் விமர்சிக்க தொடங்கியுள்ளனர்.

திமுகவுக்கு எந்த சம்பந்தமும் இல்லை

இந்த நிலையில் இதுபற்றி அமைச்சர் கே என் நேருவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அமைச்சர் கூறுகையில், "ஜனநாயகன் பட விவகாரத்திற்கும், திமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை".. "தணிக்கைக் குழு என்பது மத்திய அரசிடம் தான் இருக்கின்றது.

அப்படி இருக்கின்ற போது திமுக எப்படி ஜனநாயகன் படத்திற்கு தடையாக இருக்க முடியும். ஜெயலலிதா காலத்தில் கூட இப்படி நடந்தது. அப்போ அவர் பேசி வாங்கினார்.. என்று கூறினார். அப்போது செய்தியாளர்கள் விஜய்யின் ஜனநாயகன் பட விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர்கள் பலரும் விஜய்க்கு ஆதரவாக பேசி,பாஜகவை விமர்சித்து வருவது பற்றி உங்கள் கருத்து என்ன என கேட்டனர். இதற்கு பதில் அளித்த கே.என் நேரு, "இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஏன் குரல் கொடுக்கிறார்கள் என்று தெரியவில்லை" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+