சல்லிக்காசு பிரயோஜனம் இல்லை.. எடப்பாடியை விட்டு விலகும் விஜய்! சைலண்டாய் இப்படி ஒரு ப்ளான் இருக்கா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் உறுதியான கூட்டணியை அமைக்க எடப்பாடி பழனிச்சாமி முயன்று வருகிறார். இந்த நிலையில் விஜயுடன் கூட்டணி வைத்தாலும் எடப்பாடி பழனிச்சாமிக்கு லாபம் இல்லை எனவும், தனித்து நிற்பது தான் விஜய்க்கு நல்லது என்கின்றனர். அதே நேரத்தில் அதிமுகவும் விஜயும் கூட்டணி அமைத்து போட்டியிட்டால் அது திமுகவுக்கு சாதகமாக மாறும். எனவே அதிமுக மற்றும் பிற கட்சிகளை தவிர்த்து விட்டு காங்கிரஸ், ஓபிஎஸ், டிடிவி தினகரன் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைக்க விஜய் திட்டமிட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

2026 சட்டமன்ற தேர்தலுக்கு தற்போதே தமிழகம் தயாராகி வருகிறது. அடுத்தடுத்து இருமுறை ஆட்சியை இழந்ததில்லை என்ற பெருமையை தக்க வைக்க அதிமுகவின் பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தீவிரமாக காய் நகர்த்தி வருகிறார்.

அதே நேரத்தில் இருமுறை அடுத்தடுத்து ஆட்சி அமைத்ததில்லை என்ற மோசமான சாதனையை தகர்க்க திமுக தலைவர் ஸ்டாலின் தீவிரமாக பணியாற்றி வருகிறார். திமுகவை பொறுத்தவரை கடந்த ஆண்டே தேர்தல் பணிகளை துவக்கிவிட்டது.

Vijay AIADMK tvk

விஜய் கூட்டணி

அதே நேரத்தில் அதிமுகவை பொருத்தவரை வலுவான கூட்டணி இன்னும் அமையவில்லை. பாஜகவுக்கும் தமிழகத்தில் பெரிய அளவு வாக்கு வங்கி இல்லாத நிலையில் பாமக, தேமுதிக, தவெக உள்ளிட்ட கட்சிகளை கூட்டணிக்கு அழைப்பதற்கான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. பாமக வருவது உறுதியாகிவிட்ட நிலையில் தேமுதிக நிலைப்பாடு ஜனவரி மாதத்தில் தான் தெரியும் என்கிறார் பிரேமலதா விஜயகாந்த். அதே நேரத்தில் வெற்றிக் கழகம் அதிமுக கூட்டணியில் இணையுமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

அதிமுக பாஜக கூட்டணி

கரூர் சம்பவத்துக்கு பிறகு விஜய் மீது அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் ஒரு சாஃப்ட் கார்னர் இருக்கிறது. திமுக திட்டமிட்டு விஜயை பழி வாங்குவதாக பேசியே தமிழக வெற்றிக் கழகத்தை தங்கள் கூட்டணிக்கு இழுத்து விடலாம் என பாஜகவும் அதிமுகவும் நினைக்கிறது. அதே நேரத்தில் விஜய் கூட்டணி சேர்ந்தாலும் எடப்பாடி பழனிச்சாமிக்கு பெரிய அளவில் வாக்கு சதவீதம் உயராது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். காரணம் விஜய் களமிறங்குவது பாஜக எதிர்ப்பு, திமுக எதிர்ப்பு, சிறுபான்மையினர் மற்றும் இளைஞர்களின் வாக்கு வங்கியை நம்பித்தான்.

தமிழக வெற்றிக் கழகம்

அதிமுக கூட்டணியில் விஜய் இணைந்தால் பாஜக எதிர்ப்பு வாக்குகள் கிடைக்காது. மேலும் சிறுபான்மையின வாக்குகளும் கிடைக்காது. மேலும் பெண்கள் இளைஞர் வாக்கு வங்கி விஜய்க்கு வலுவாக இருப்பதாக சொல்லப்படும் நிலையில் கூட்டணி அமைத்தால் அதுவும் செல்லாது என சொல்லப்படுகிறது. இதனால் விஜய்க்கும் எடப்பாடிக்கும் நஷ்டம் தான். இதனால் பாஜக எதிர்ப்பு வாக்குகள், சிறுபான்மையின வாக்குகள் ஏற்கனவே இருக்கும் திமுக கூட்டணிக்கு தான் செல்லும். எனவே விஜய் தனித்து தான் போட்டியிடுவார் என சொல்லப்படுகிறது.

ஓபிஎஸ், தினகரன்

அதே நேரத்தில் காங்கிரஸ், ஓ பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோரோடு கூட்டணி வைத்தால் பாஜக அதிமுக எதிர்ப்பு வாக்குகள், சிறுபான்மையின வாக்குகள், இளைஞர் வாக்குகள் தனக்கு கிடைக்கும் என நினைக்கிறார் விஜய். மேலும் விஜய் உடன் கூட்டணி வைக்கவும் சில காங்கிரஸ் தலைவர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். தேசிய அளவிலான ராகுலின் செல்வாக்கு விஜய்க்கு உதவும். அதே நேரத்தில் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் விஜய்க்கு பெரும் ஆதரவு இருக்கும் நிலையில் அந்த மாநிலங்களில் தங்கள் வாக்கு சதவீதத்தை உயர்த்த உதவும் என காங்கிரஸ் நினைக்கிறது. இதனால் அதிமுக கூட்டணியில் விஜய் சேரமாட்டார் எனவும், தமிழகத்தில் மூன்றாவதாக ஒரு புதிய கூட்டணி தான் உருவாகும் என்கின்றனர் அரசியல் நிபுணர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+