யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை!
சென்னை: நேற்று மக்கள் அரங்கம் திட்டத்தில் மக்கள் சட்டசபையில் நேரடியாக மனுக்களை சமர்ப்பிக்க முடியும்; 10,000 கையெழுத்துக்களுடன் மனு அளித்தால் கட்டாயம் பதில். 5 லட்சம் பேர் மனு அளித்தால் சட்டசபையில் விவாதிக்கப்படும் என்று விஜய் வாக்குறுதி அளித்தார். ஆனால் அவரின் இந்த வாக்குறுதி பல கேள்விகளை எழுப்பி உள்ளது.
கன்னியாகுமரியில் பிரசார பேருந்தில் நின்றபடி பேசிய விஜய், பல்வேறு வாக்குறுதிகளை அளித்தார். Also Read விசில் ஊதிக்கொண்டு சைக்கிளில் ரவுண்ட் அடித்த விஜய்.. தடுப்புகளை உடைத்துக்கொண்டு வந்த தவெக தொண்டர்கள் லஞ்சம் இல்லாமல் ஒவ்வொருவருக்கும் அரசின் நலம் திட்டம் போய் சேரும். இதற்கென ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆதார் கார்டு போல தமிழ்நாடு சிட்டிசன் privilege கார்டு வழங்கப்படும். ஒவ்வொரு குடும்பத்தை பற்றிய அனைத்து தரவுகளும் அதில் இருக்கும். பிறப்பில் இருந்தே ஒவ்வொரு மனிதனுக்கும் அவருக்கு ஒவ்வொரு நலத்திட்டமும் போய் சேரும். விண்ணப்பிக்க தேவையில்லை.

மாநிலத்தின் வளர்ச்சிக்கான யோசனைகளை மக்கள் கூறும் வகையில் இணையதளம் உருவாக்கப்படும்; மக்கள் அரங்கம் திட்டத்தில் மக்கள் சட்டசபையில் நேரடியாக மனுக்களை சமர்ப்பிக்க முடியும்; 10,000 கையெழுத்துக்களுடன் மனு அளித்தால் கட்டாயம் பதில் . 5 லட்சம் பேர் மனு அளித்தால் சட்டசபையில் விவாதிக்கப்படும் என்று விஜய் வாக்குறுதி அளித்தார்.
திட்டத்தில் குழப்பம்
'மக்கள் அரங்கம்' திட்டம் தற்போது விவாதப் பொருளாகியுள்ளது. 10,000 கையெழுத்துக்கள் பெற்ற மனுக்களுக்குக் கட்டாய பதில், 5 லட்சம் கையெழுத்துக்கள் கிடைத்தால் சட்டசபையில் விவாதம் என அவர் அறிவித்த அதிரடி வாக்குறுதிகள், ஒருபுறம் வரவேற்பைப் பெற்றாலும், மறுபுறம் 'லாஜிக்' உதைப்பதாக விமர்சனங்கள் எழுகின்றன.
விஜய்யின் இந்தத் திட்டம் நேரடி ஜனநாயகத்தை நோக்கிய நகர்வாகத் தெரிந்தாலும், கள யதார்த்தத்தில் சில சிக்கல்கள் ஒளிந்துள்ளன.
தொகுதி வாரியான சிக்கல்: திருச்செங்கோடு ஒரு உதாரணம்!
விஜய் சொன்ன கணக்கின்படி பார்த்தால், ஒரு குறிப்பிட்ட தொகுதியின் உள்ளூர் பிரச்சனையை மாநிலத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்வது சாதாரண காரியமல்ல. உதாரணமாக, திருச்செங்கோடு தொகுதியை எடுத்துக் கொள்வோம்.
மொத்த வாக்காளர்கள்: சுமார் 2,06,928 பேர்.
சட்டசபை விவாதத்திற்கான நிபந்தனை: 5,00,000 கையெழுத்துக்கள்.
இங்குதான் பெரிய கேள்விக்குறி எழுகிறது. திருச்செங்கோட்டில் ஒரு குடிநீர் பிரச்சனையோ அல்லது சாலை வசதி குறித்தோ மக்கள் சட்டசபையில் விவாதிக்க விரும்பினால், அந்தத் தொகுதியில் உள்ள அத்தனை பேர் கையெழுத்திட்டாலும் 5 லட்சத்தை நெருங்க முடியாது.
அப்படியென்றால், ஒரு சிறிய தொகுதியின் பிரத்யேகப் பிரச்சனைக்காக மக்கள் பக்கத்துத் தொகுதிகளான நாமக்கல்லுக்கோ, சங்ககிரிக்கோ அலைந்து 'கையேந்த' வேண்டுமா? என்ற கேள்வி எழுவது நியாயமானதுதான்.
நடைமுறைச் சவால்கள் என்னென்ன?
மக்கள் தொகை ஏற்றத்தாழ்வு: சென்னை போன்ற மாநகரங்களில் 5 லட்சம் கையெழுத்துக்களைத் திரட்டுவது ஓரளவுக்குச் சாத்தியம். ஆனால், சிறிய கிராமப்புறத் தொகுதிகள் தங்கள் குரலைச் சட்டசபையில் ஒலிக்கச் செய்ய 'கூட்டணி' அமைக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுவார்கள். இது உள்ளூர் உரிமைகளைப் பாதிக்கும்.
கையெழுத்துகளின் நம்பகத்தன்மை: 5 லட்சம் கையெழுத்துக்கள் உண்மையானவைதானா என்பதைச் சரிபார்க்கும் பொறிமுறை (Mechanism) என்ன? டிஜிட்டல் முறையில் ஆதார் இணைப்புடன் செய்தாலும், தொழில்நுட்ப வசதி இல்லாத கடைக்கோடி மனிதனின் கையெழுத்து எப்படிச் சேரும்?
அரசியல் உள்நோக்கம்: ஆளுங்கட்சிக்கு எதிராகப் பெரிய போராட்டங்களை ஒருங்கிணைக்க எதிர்க்கட்சிகள் இந்த 5 லட்சம் கையெழுத்து விதியைப் பயன்படுத்த வாய்ப்புண்டு. அதேசமயம், ஆளுங்கட்சியும் தங்களுக்கு சாதகமான விஷயங்களுக்குக் கையெழுத்துக்களைத் திரட்டிச் சபையை ஆக்கிரமிக்கக்கூடும்.
தீர்வு என்னவாக இருக்க முடியும்?
விஜய்யின் நோக்கம் 'மக்களைச் சட்டசபைக்குள் கொண்டு வருவது' என்றால், அந்த இலக்கை அடைய தொகுதி வாரியான விகிதாச்சார முறையைப் பின்பற்றுவதே சரியாக இருக்கும்.
மாநில அளவிலான பிரச்சனைக்கு: 5 லட்சம் கையெழுத்துக்கள் என நிர்ணயிக்கலாம்.
தொகுதி அளவிலான பிரச்சனைக்கு: அந்தந்த தொகுதியின் மொத்த வாக்காளர்களில் 10% அல்லது 15% கையெழுத்துக்கள் இருந்தால் விவாதிக்கலாம் என்ற விதிமுறை இருந்தால் மட்டுமே இது 'மக்கள் அரங்கமாக' இருக்கும்.
விஜய்யின் இந்தத் திட்டம் மேலோட்டமாகப் பார்க்க கவர்ச்சிகரமாகவும், ஜனநாயகத்தின் உச்சமாகவும் தெரிந்தாலும், நுணுக்கமான மாற்றங்கள் செய்யப்படாவிட்டால் இது வெறும் 'காகிதப் புலியாகவே' முடியும். 2 லட்சம் வாக்காளர்கள் கொண்ட தொகுதியில் 5 லட்சம் கையெழுத்து கேட்பது, ஓடாத கடிகாரத்தில் நேரத்தைப் பார்ப்பதற்குச் சமம்!
புதிய அரசியல் கணக்குகள் 'கூட்டல், கழித்தல்' தாண்டி, யதார்த்தத்தோடு 'வகுக்கப்பட' வேண்டும் என்பதே அரசியல் விமர்சகர்களின் கணிப்பு.
-
தவெகவில் இணைந்த ஜாய் கிரிசில்டா.. பெண்களுக்காக குரல் கொடுக்கவே அரசியலுக்கு வந்ததாக பேட்டி! -
பெண்களின் பாதுகாப்பிற்கு புதிய அரண்.. ஜூன் 9ல் சிங்கப்பெண் அதிரடி படையை களமிறக்கும் முதல்வர் விஜய்! -
7 நாட்கள் 7 அறிக்கைகள்.. விஜய்யின் தூக்கத்தை கெடுக்கும் திமுக.. சொல்ல வருவது ஒரே மேட்டர் தான் -
கள்ளச்சாராயம் ஒழிக்க தனிப்படை.. கள்ளக்குறிச்சியில் விஜய் அரங்கேற்றும் மாற்றம்.. ஆதவ் அர்ஜுனா சர்ப்ரைஸ் -
கஜானாவுக்கு வரும் 1200 கோடி.. பார்ட்டி ஃபண்டில் கைவைத்த விஜய்! இனி டாஸ்மாக் கல்லா கட்டுமே! சூப்பர்! -
Perambur Power Cut: பவர் இல்லை சிஎம்! பெரம்பூர் பகுதியில் 3 நாட்களாக தொடர் மின்வெட்டு! தூக்கத்தை தொலைத்த மக்கள் -
இதுக்கு ஒரு எண்டே இல்லையா சாரே! எடப்பாடிக்கு மீண்டும் மீண்டும் தலைவலி! கட்சி தாவ தயாராகும் தலைகள்! -
நீ என்ன திமுக ஆளா? மரியாதை இல்லாமல் பேசிய அமைச்சர்கள்.. சட்டசபை செயலர் சீனிவாசன் ராஜினாமா பின்னணி?! -
"எதே ராகவா லாரன்ஸா.. அடேய் விஷால் நீயும் கட்சி ஆரம்பி" தெறிக்கும் அரசியல் மீம்ஸ்! -
விஜய் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றல.. எல்லாம் போச்சு.. அப்செட்டில் இருக்கும் அதிமுக புள்ளிகள்! -
சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது.. உங்களுடன் நிற்கும் கம்யூனிஸ்ட்டுகள் சொல்றாங்க.. விளாசிய எடப்பாடி! -
அதிமுகவில் பட்ட கஷ்டம்! தவெகவில் மரியாதை கொடுத்தால் போதும்! பதவிலாம் வேண்டாம்! உடுமலை ராதாகிருஷ்ணன்












Click it and Unblock the Notifications