இது லிஸ்ட்லயே இல்லையே.. விஜய் கூட சேரும் டீம்! அவர் சொன்ன சஸ்பென்ஸ் இதுதானா? அவங்களும் வர்றாங்களா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் திமுக கூட்டணி ஏறக்குறைய உறுதி செய்யப்பட்டுவிட்டது. அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைந்திருக்கும் நிலையில் மேலும் சில கட்சிகள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தமிழக அரசியலில் புதிய வரவான விஜய் கூட்டணி தொடர்பாக என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்பதுதான் கேள்வியாக இருந்தது. இந்த நிலையில் ஓபிஎஸ், டிடிவி தினகரன், டாக்டர் கிருஷ்ணசாமி ஆகியோர் விஜயுடன் கூட்டணி அமைக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. அது மட்டுமல்லாமல் பாமக உள்ளிட்ட சில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

தமிழக அரசியலில் கடந்த சில பத்தாண்டுகளாக தேர்தல் என்றாலே அது கூட்டணி அமைத்துப் போட்டியிடுவதுதான் என்று ஆகிவிட்டது. திமுக அதிமுக என எந்தக் கட்சியாக இருந்தாலும் கூட்டணி அமைத்தால் தான் தேர்தலில் வெற்றி பெற முடியும் என்பது தற்போதைய சூழலில் உறுதியாக இருக்கிறது.

ஜெயலலிதா மட்டும் 2016 தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு கூட்டணியில் இருந்த சில கட்சிகளையும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வைத்தார். அதற்குப் பிறகு கூட்டணிதான் தேர்தல் வெற்றி தோல்வியை தீர்மானித்து வருகிறது.

Vijay s TVK

தமிழக அரசியல்

இந்நிலையில், 2019 மக்களவைத் தேர்தலின் போது திமுக அமைத்த மாபெரும் கூட்டணி தற்போது வரை தொடர்கிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட சில கட்சிகள் இருக்கின்றன. அதிமுகவைப் பொறுத்தவரை கூட்டணி நிலையாக இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். 2021இல் அதிமுகவுடன் கூட்டணியில் இருந்த பாஜக 2024 மக்களவைத் தேர்தலில் விலகியது. பாமகவும் அப்படித்தான். 2024 இல் அதிமுகவுடன் கூட்டணியில் இருந்த தேமுதிக 2026-ல் இருக்குமா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.

திமுக கூட்டணி

இப்படியாக திமுக கூட்டணி உறுதியானாலும் அதிமுக கூட்டணி இன்னும் உறுதி செய்யப்படவில்லை. அதே நேரத்தில் பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளை கூட்டணிக்கு அழைத்து வர பேச்சுவார்த்தைகள் நடக்கின்றன. ஏற்கனவே பாஜக கூட்டணியில் இருக்கும் தமிழ் மாநில காங்கிரஸ், ஐஜேகே உள்ளிட்ட கட்சிகள் அதிமுக கூட்டணியில் கிட்டத்தட்ட இணைந்தது போலத்தான். கடந்த தேர்தல்களில் மூன்றாம் இடம் பெற்ற நாம் தமிழர் கட்சியின் சீமான் 2026 சட்டமன்ற தேர்தலில் தனித்து தான் போட்டி என அறிவித்ததோடு சில தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் அறிவித்துவிட்டார்.

தமிழக வெற்றிக் கழகம்

இதற்கிடையே 2026 சட்டமன்ற தேர்தலில் முதன்முறையாக களமிறங்குகிறது விஜய்யின் தமிழக வெற்றி கழகம். 2026 சட்டமன்ற தேர்தல் தான் இலக்கு என அறிவித்து தற்போது அதை நோக்கி பயணித்து வருகிறார் விஜய். பிரம்மாண்டமாக இரு மாநில மாநாடுகளை நடத்தி உள்ள விஜய், தற்போது தேர்தல் சுற்றுப்பயணத்தையும் மேற்கொண்டு இருக்கிறார். டிசம்பர் மாதத்துடன் அந்த பயணம் முடிவடையும் நிலையில் அதற்கு பிறகு கூட்டணி பேச்சுவார்த்தைகள் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய சூழலில் தமிழகத்தில் நான்குமுனை போட்டி நிலவுகிறது.

விஜய் கூட்டணி

இது ஒரு புறம் இருக்க விஜய்யுடன் இதுவரை எந்தக் கட்சியும் கூட்டணி அமைக்கவில்லை என்ற விமர்சனம் இருக்கிறது. அதே நேரத்தில் தேர்தல் வரை பொறுத்து இருங்கள், கூட்டணி யாருடன் என்ற ரகசியத்துடன் சஞ்சாரம் செய்யுங்கள் என பொடி வைத்து பேசினார் விஜய். இதனால் அவருடன் சில கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தி வரலாம் என சொல்லப்படுகிறது. காங்கிரஸ் கட்சி விஜய்யுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சொல்லப்பட்ட நிலையில் ராகுல் காந்தியின் யாத்திரையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டது அந்தக் கேள்விக்கே இடமில்லை என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியது.

ஓபிஎஸ் டிடிவி தினகரன்

இந்த நிலையில் அதிமுகவால் பாஜக கூட்டணியில் இருந்து வெளிவந்திருக்கும் ஓபிஎஸ், டிடிவி தினகரன் விஜய்க்கு பச்சைக்கொடி காட்டுவது போலவே பேசி வருகின்றனர். விஜய்யுடன் கூட்டணி அமைத்தால் என்ன தவறு என டிடிவி தினகரன் கேட்டிருப்பது கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. விஜய் கட்சி ஆரம்பித்தபோது ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற முழக்கத்தை முன்வைத்தார்.

கிருஷ்ணசாமி கட்சி

தற்போது புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமியும் அதே கோரிக்கையை வலியுறுத்தி வரும் நிலையில் விஜய்யுடன் ஓபிஎஸ், டிடிவி தினகரன், புதிய தமிழகம் கட்சி கூட்டணி அமைக்கலாம் என சொல்லப்படுகிறது. மேலும் பாமக உள்ளிட்ட சில கட்சிகளை கூட்டணிக்கு அழைத்து வர மறைமுகப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது. அடுத்தடுத்த நாட்களில் விஜய்யின் கூட்டணி தொடர்பான வியூகம் வெளிவரும் என்கின்றனர் தமிழக வெற்றி கழகத்தினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+