ராகுலுக்கு விஜயே உணவு பரிமாறிய தருணம்.. 30 நிமிடங்கள் சீக்ரேட் மீட்.. மாறும் அரசியல்
சென்னை: இடைத்தேர்தலுக்கு பிரதமர் நரேந்திர மோடி, நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வருகையால் தமிழக அரசியல் பரபரப்பாகியுள்ளது. எஸ்ஐஆர் காரணமாக தமிழகத்தில் தவெக வெற்றி பெற்றதாக திமுக கூறி வருகிறது. இந்நிலையில் முதலமைச்சர் விஜயே ராகுலுக்கு தன் கையால் உணர பரிமாறினார். ராகுல் விஜய் சகோதரத்துவமான நட்பு. அது மிகவும் ஆழமானது என்றும் மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார்.
சென்னையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "ராகுல் காந்தி விஜய் இடையே சகோதரத்துவமான உறவு. இதற்கு முன்பு ராகுல் காந்தி வந்தபோது சந்திப்பு நடக்கவில்லை என்பதற்காக வயிற்றெரிச்சல் கதை கட்டினார்கள். இப்போது வீட்டில் சாப்பிட்டு காபி குடிக்கும் அழகான உறவு இது. இருவருக்குள்ளும் கொள்கை ரீதியான சகோதாரத்துவ ஒற்றுமை தெளிவாக தெரிகிறது. தமிழகத்தின் பிரச்சனைகளுக்கான குரலாக இருவரும் இருப்பார்கள். இந்த நிகழ்ச்சி மென்மையானது.

விஜய் ராகுல் காந்தி நட்பு
ராகுல் காந்தியை வரவேற்று அன்பு செலுத்தியதற்கு முதலமைச்ருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். விஜயும், ராகுல் காந்தியும் 30 நிமிடங்கள் இல்லத்தில் தனியாக பேசினார்கள். பிறகு எங்களை உணவருந்த அழைத்தனர். விஜய் தன் கையால் ராகுல் காந்திக்கு உணவு பரிமாறினார். உபசரிப்பு நெகிழ வைத்தது. அவர்களுக்குள் பலமான உறவாக உள்ளது. மரியாதையும், நட்பும், புரிதலும் பரஸ்பரம் பலமாக உள்ளது.
ஒவ்வொரு முறை ராகுல் இங்கு வரும்போதும், விஜய் டெல்லி செல்லும்போதும் பார்க்க வேண்டிய அவசியமில்லை. சின்ன சின்ன விஷயத்தை கண்டு கொள்ள வேண்டாம். உறவு மென்மையான ஆழமான உறவு. இது நீண்டகால உறவாக உள்ளது. ராகுல் காந்திக்கு விஜயும், விஜய்க்கு ராகுலும் அரணாக இருப்பார்கள். நாங்கள் கோட்சே காலத்தில் இருந்து பாஜகவுடன் சண்டை போடுகிறோம். நாங்கள் கொள்கை சண்டை போட்டு கொண்டிருக்கிறோம். அதற்கு யாரின் ஆதரவையும் எதிர்பார்க்கவில்லை.
திமுக தோல்வி
ஆர்எஸ்எஸ் எதிர்த்து ராகுல் காந்தி நெஞ்சை நிமிர்த்தி சண்டை போட்டு கொண்டே இருப்பார். வெறுப்பு அரசியலுக்கு எதிராக சமரசம் இல்லாமல் சண்டை போடுவோம். எதிர்க்கட்சி தலைவர்கள் எல்லாம் குடியரசு தலைவரிடம் கொடுத்த கடிதத்தை வைத்து திமுகவினர் புலம்பி கொண்டிருக்கிறார்கள். எஸ்ஐஆரில் எங்கு குற்றச்சாட்டு, வழக்குகள் இருக்கிறதோ அங்கு திரும்பியும் தேர்தல் நடத்த கோருகிறோம். மேற்கு வங்கம், அசாம், பீகார், ஹரியானா, மகாராஷ்டிராவில் குற்றச்சாட்டு தெளிவாக உள்ளது.
தமிழகம், கேரளா, புதுச்சேரியில் குற்றச்சாட்டே இல்லை. எங்கள் களப்பணியாளர்கள் மூலம், பிஎல்ஏ கமிட்டி மூலம் தமிழர்களின் வாக்குகளை திருப்பி கொண்டு வந்துவிட்டோம் என திமுக வீரவசனம் பேசுகிறது. தேர்தலில் தோற்றவுடன் எஸ்ஐஆரை குற்றம் சொல்கிறது. கேரளாவில் காங்கிரஸ் வெற்றி, புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. எங்கேயும் ஒரு பிரச்சனையாக வரவில்லை. திமுகவை மக்கள் தோற்கடித்துள்ளனர்.
முட்டாள்தனமான
அதைப்பற்றி அவர்கள் யோசிப்பதே இல்லை. அவர்களுடன் சேர்ந்து நாங்களும் தோற்றுவிட்டோம். எஸ்ஐஆரால் திமுக தோற்றது என்பது முட்டாள்தனமான குற்றச்சாட்டு. கடந்த பொதுத்தேர்தலில் வாங்கிய வாக்கை விட, இப்போது இடைத்தேர்தலில் குறைவான வாக்கை பெற்றுள்ளார்களே. இன்னும் வெற்றியில் தோல்வி, தோல்வியில் வெற்றி என்கிறார்கள். அதைப்பற்றி பேசாமல் எதையோ பேசுவது வருத்தமளிக்கிறது" என்றார்.




Click it and Unblock the Notifications
