இன்று ஆந்திரா செல்லும் முதல்வர் விஜய்.. சந்திரபாபு நாயுடுவுடன் முக்கிய ஆலோசனை.. பின்னணி என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல்வர் விஜய் இன்று பிற்பகல் ஆந்திரா மாநிலம் விஜயவாடா பயணம் மேற்கொண்டு, அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார். கிருஷ்ணா நதிநீர் பங்கீடு தொடர்பாக சந்திரபாபு நாயுடுவை சந்தித்து விஜய் பேச திட்டம் என்று கூறப்படுகிறது.

இன்று தமிழக முதல்வர் விஜய் ஆந்திரா மாநிலம் விஜயபாடா பயணம் மேற்கொண்டு அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சந்திக்க உள்ளார். சென்னையின் குடிநீர் தேவைக்காக ஆந்திர மாநிலம் ஆண்டுதோறும் 12 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும். ஆனால் நடப்பாண்டில் இதுவ்ராஇ 2.251 டிஎம்சி தண்ணீர் மட்டுமே தமிழ்நாட்டிற்கு அளிக்கப்பட்டுள்ளது.

Vijay Chandrababu Naidu TVK

அதேபோல் கோதாவரி - கிருஷ்ணா - காவிரி நதிநீர் இணைப்பு திட்டங்களிலும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதன் தற்போதைய நிலை மற்றும், அதன் சாத்தியக்கூறுகள் குறித்து ஆலோசிக்க விஜய் முடிவு செய்துள்ளார். இதனிடையே தமிழக எல்லையை நோக்கி பாயும் நதிகளின் குறுக்கே ஆந்திர அரசு அணை கட்டுவதற்கு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இதனால் தமிழக மக்களிடையே கவலை அதிகரித்துள்ளது. இந்த விவகாரங்கள் தொடர்பாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் முதல்வர் விஜய் ஆலோசனை நடத்த உள்ளார். இதற்காக இன்று மதியம் 2 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலமாக செல்லும் விஜய், ஆந்திராவின் ஞானாவரம் விமான நிலையத்திற்கு 3.30 மணிக்கு செல்கிறார்.

பின் 4.15 மணிக்கு சந்திரபாபு நாயுடுவுடன் சந்திப்பு நடக்க உள்ளது. இந்த ஆலோசனையில் நீர்வளத்துறை அமைச்சர் புஸ்ஸி ஆனந்தும் பங்கேற்க உள்ளார். இதன்பின் துணை முதல்வர் பவன் கல்யாண் உடன் சந்திப்பு நடக்கவுள்ளது. அப்போது இரு மாநிலங்களுக்கு இடையிலான நிதிநீர் பங்கீட்டு பிரச்சனைகள் மற்றும் அணை தொடர்பான விவகாரங்கள் குறித்து பேசப்பட உள்ளதாக தெரிகிறது.

இந்த ஆலோசனைக்கு பின் மாலை 6 மணிக்கு விஜயவாடாவில் உள்ள கனக துர்கா கோயிலுக்கு முதல்வர் விஜய் செல்ல உள்ளார். அங்கு சாமி தரிசனம் முடித்துவிட்டு, பின்னர் இரவு 8.30 மணியளவில் சென்னை திரும்ப உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. ஏற்கனவே காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடகா பயணிக்க விஜய் முடிவெடுத்த போது, அது கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+