சிஎம் சேர் மேல் ஒரு கண்ணு.. புஸ்ஸி ஆனந்தின் ஆசையை மோப்பம் பிடித்த விஜய்! படபடவென வெடிச்சுட்டாராமே!
சென்னை: தமிழகத்தில் ஆட்சி அமைக்க விஜய் திட்டமிட்டு களத்தில் இறங்கியுள்ள நிலையில், புதுச்சேரியில் தவெக ஆட்சியமைக்கும் என பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், கங்கிரஸுடன் கூட்டணி வைத்து புதுச்சேரியி கால்பதிக்கலாம் என நினைத்திருந்த விஜய், ஆனந்தின் பேச்சால் அதிருப்தியடைந்துள்ளதாகவும், இனி தமிழகத்தில் மட்டுமே ஆட்சி குறித்து பேச வேண்டுமென உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
விஜய் நினைத்தது நடந்துள்ளது. தான் புதுச்சேரியில் பேசினாலும் அது தமிழகத்திலும் கவனிக்கப்பட வேண்டுமென நினைத்து தான் திமுக குறித்து விமர்சித்து பேசினார். நல்லதோ? கெட்டதோ? தன்னைப் பற்றி தான் பேச வேண்டும் என நினைத்த நிலையில் அது நிறைவேறியுள்ளது.
அதே நேரத்தில் புதுச்சேரி கூட்டம் தொடர்பாக விஜய்க்கு சில அதிருப்தி இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. குறிப்பாக புஸ்ஸி ஆனந்தின் பேச்சை விஜய் ரசிக்கவில்லை என்கின்றனர் தமிழக வெற்றிக் கழகத்தின் புதுச்சேரி நிர்வாகிகள்.

தவெக புதுச்சேரி
தமிழகத்தில் ஆட்சி அமைக்கத் திட்டமிட்டு அரசியல் களத்தில் இறங்கியுள்ள நடிகர் விஜய், தற்போது புதுச்சேரியைச் சுற்றி உருவாகியுள்ள புதிய சர்ச்சையால் சற்று அதிருப்தியடைந்துள்ளதாக அவர்கள் சொல்கின்றனர். விஜய் தற்போது தனது கவனத்தை முழுமையாக தமிழக சட்டமன்றத் தேர்தலை நோக்கியே வைத்துள்ளார். இரண்டு பெரிய மாநில மாநாடுகளை நடத்தி, அதன் பிறகு திருச்சி, அரியலூர், நாகை, திருவாரூர், நாமக்கல் போன்ற இடங்களில் மக்கள் சந்திப்பு நிகழ்வுகளை நடத்தினார்.
என். ரங்கசாமி
கரூரில் ஏற்பட்ட நெரிசல் விபத்தில் 41 பேர் உயிரிழந்ததையடுத்து, அனைத்து நிகழ்வுகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. சுமார் இரண்டு மாதங்களுக்குப் பிறகு மறுபடியும் மக்கள் சந்திப்பு திட்டம் செய்யப்பட்டது. ஆனால் தமிழக காவல்துறை எந்த இடத்திலும் கூட்டத்திற்கு அனுமதி வழங்காததால், தவெக புதுச்சேரியைத் தேர்வு செய்தது. புதுச்சேரி முதலமைச்சர் என். ரங்கசாமி, விஜயுடன் நீண்ட கால நெருக்கம் கொண்டவர். இருவரும் பல முறை நேரில் சந்தித்து பேசியுள்ளதும், நட்புறவு தொடர்ந்தும் நிலவி வருவதாகவும் கூறப்படுகிறது.
புஸ்ஸி ஆனந்த் பேச்சு
இந்நிலையில், 2026 சட்டமன்றத் தேர்தலில் பாஜகவை விலக்கி ரங்கசாமி-விஜய் கூட்டணி உருவாகும் என்ற தகவலும் கடந்த சில வாரங்களாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வந்தது. இதன் பின்னணியில் தான், புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம் நடத்துவதற்கு ரங்கசாமி அரசு அனுமதி வழங்கியது என்று கூறப்பட்டது. இந்த கூட்டத்தில் முதலில் பேசிய புஸ்ஸி ஆனந்த், "தமிழகத்தில் தளபதி விஜய் முதல்வராக வருவார். புதுச்சேரியிலும் கண்டிப்பாக தமிழகம் வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்கும்," என்று உரையாற்றினார்.
ரங்கசாமி-விஜய்
இது ரங்கசாமி-விஜய் கூட்டணி குறித்து நடைபெற்று வந்த அரசியல் பேச்சுகளை முழுமையாக மாற்றும் வகையில் இருந்தது. இந்த பேச்சு, தவெக புதுச்சேரி அரசியலில் தனித்து போட்டி என்ற சூழலை உருவாக்கி, தற்போதைய கூட்டணி வாய்ப்புகளை சிக்கலாக்கும் என கருதப்படுகிறது. தற்போது புதுச்சேரியில் ஏற்கனவே பாஜக-ரங்கசாமி கூட்டணி ஆட்சி செயல்பட்டு வருகிறது. புதுச்சேரியில் தவெக தனியாக ஆட்சி அமைக்கும் என ஆனந்த் பேசியது, ரங்கசாமியுடன் இருக்கும் விஜயின் உறவை பாதிக்கக்கூடும் எனக் கூறப்படுகிறது.
விஜய் உத்தரவு
இதனால் அதிருப்தியான விஜய், தவெக நிர்வாகிகளிடம், " தவெக கூட்டங்கலில் தமிழகத்தை பற்றி மட்டுமே பேச வேண்டும்; பிற மாநில அரசியல் குறித்து கருத்து சொல்லக்கூடாது," என்று கண்டிப்பாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. புஸ்ஸி ஆனந்த் புதுச்சேரியில் ஆட்சி அமைப்பதைப் பற்றிப் பேசியதன் பின்னணியில், அவர் எதிர்காலத்தில் அங்கு முதல்வர் வேட்பாளராக தன்னை முன்னிறுத்த முயற்சி செய்கிறார் என்பதும் சில அரசியல் விமர்சகர்களின் கருத்தாகும்.












Click it and Unblock the Notifications