Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

“நானே தலைமைச் செயலகம் வருவேன்.. எந்த பிரச்சனை வந்தாலும் சந்திக்கத் தயார்”.. ஸ்டாலினுக்கு விஜய் சவால்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பரந்தூர் மக்களை முதல்வர் ஸ்டாலின் நேரில் சந்தித்து பேச வேண்டும் என தவெக தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார். விமான நிலையம் வராது என்ற உத்தரவாதத்தை ஸ்டாலின் கொடுக்கவில்லை என்றால் பரந்தூர் மக்களை அழைத்து வந்து தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து முறையிடுவோம், அப்போது எந்தப் பிரச்சனை வந்தாலும் சந்திக்கத் தயார் என விஜய் எச்சரித்துள்ளார்.

சென்னையை அடுத்த பனையூரில் இன்று நடைபெற்ற தவெக செயற்குழுக் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய், "பரந்தூர் விமான நிலைய பிரச்சனையில் முதல்வர் ஸ்டாலினுக்கு நாம் கடிதம் அனுப்பி இருந்தோம். மக்கள் பாதிக்காத வகையில் விமான நிலையம் அமைப்போம் என உங்கள் அரசு சார்பாக விளக்க அறிக்கை கொடுத்திருந்தீர்கள்.

Vijay Urges CM Stalin to Address Paranthur Concerns Warns of Protest if Assurances Not Given

அந்த அறிக்கையில், 1005 குடும்பங்கள் மட்டுமே பரந்தூரில் வசிப்பதால் விமான நிலையம் வந்தால் பெரிய பாதிப்பு இல்லை என சொல்லி இருந்தார்கள் மக்கள் பாதிக்காத வகையில்.. அப்படின்னா என்னங்க சார்? ஒன்னு அந்த இடத்தில் ஏர்போர்ட் வருதுன்னு சொல்லணும்.. இல்லை அந்த இடத்தில் ஏர்போர்ட் வராதுன்னு சொல்லணும். இரண்டுமே அந்த அறிக்கையில் இல்லை.

வெறும் 1,005 குடும்பங்கள் என்றால் அவ்வளவு சாதாரணமா போச்சா சிஎம் சார்? 15,000 மக்கள்.. அந்த மக்களும் நம்ம மக்கள்தானே.. ஏன் அந்த அக்கறை.. அந்த மனிதாபிமானம் மக்கள்கிட்ட இல்லை? எதிர்க்கட்சியாக இருந்தால்தான் மக்கள்கிட்ட அக்கறை இருக்குமா?

நீங்க உங்களை மக்களின் முதல்வர்னு நா கூசாமல் சொல்கிறீர்கள்.. உங்களுக்கும் பரந்தூர் பிரச்சனைக்கும் சம்பந்தமே இல்லாத மாதிரி காட்டிக்கிறீங்க.. ஆனால் விமான நிலையத்துக்காக பரந்தூரை பரிந்துரை செஞ்சதே உங்க அரசுதான் என மத்திய அமைச்சர் சொல்லி இருக்கிறார்.

போராட்டம் நடத்துகிற பரந்தூர் விவசாயிகளை ஏன் முதல்வர் சந்தித்து பேசவில்லை? என கேட்டால் பதில் இல்லை. பரந்தூர் போராட்ட குழுவினரை அண்மையில் நான் சந்தித்து பேசினேன். இப்பவும் ஒன்றும் குறைந்துவிடவில்லை சிஎம் சார்.. ஜாதி மதம் கடந்து தங்களுடைய குடியிருப்பை, நீர்நிலைகளை, விளைநிலத்தைக் காப்பாற்ற ஒன்றாக நின்று போராடுகிற பரந்தூர் விவசாயப் பெருங்குடி மக்களை தயவு செய்து நீங்க நேரில் சந்தித்து பேசுங்க.. நீங்களே நேரில் சந்தித்து பேசுங்க.. அந்த இடத்தில் விமான நிலையம் வராது என்கிற உத்தரவாதத்தை நீங்கள் கொடுக்கனும்.

இதை எல்லாம் நீங்கள் செய்யவில்லை எனில் பரநதூர் பகுதி மக்களையும் விவசாயிகளையும் நானே தலைமைச் செயலகத்துக்கு அழைத்து வந்து உங்களை நேரில் சந்தித்து முறையிடும் நிலைமை உண்டாகும். அப்படி ஒரு சூழ்நிலையை உருவாக்கமாட்டீங்கன்னு நம்புகிறேன். தலைமைச் செயலகத்திற்கு வரும்போது எந்தப் பிரச்சனை வந்தாலும் சந்திக்கத் தயாராக இருக்கிறேன்" எனப் பேசியுள்ளார் விஜய்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+