விஜய் இதுவரை பத்திரிகையாளர்களை சந்தித்தது உண்டா? உதயநிதி ஸ்டாலின் பதிலடி!
சென்னை: திமுகவை தீயசக்தி என்று தவெக தலைவர் விஜய் விமர்சித்திருந்த நிலையில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலின், விஜய் பத்திரிகையாளர்களை சந்தித்தது உண்டா? அவரை பேசவிட்டு பாருங்கள்.. அப்போது தெரியும் என்று தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் நடந்த தவெக பொதுக்கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் பேசுகையில், எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் ஒரே வார்த்தையில் பேசி திமுகவை காலி செய்தார்கள். ஏன் இப்படி கடுமையாக பேசுகிறார்கள் என அப்போது நினைத்தேன். இப்போது அவங்க சொன்னதை தான் நானும் சொல்கிறேன்.. திமுக ஒரு தீய சக்தி.. திமுக ஒரு தீய சக்தி.. திமுக ஒரு தீய சக்தி.

ஈரோடு மக்களே.. திமுக ஒரு தீய சக்தி.. தவெக ஒரு தூய சக்தி.. இந்த முறை தீய சக்தி திமுகவுக்கும், தூய சக்தி தவெகவுக்கும் இடையில்தான் போட்டி. அதேபோல் எதிரிகள் யார் என்று கூறிவிட்டு நாங்கள் களத்துக்கு வந்துள்ளோம். நாங்கள் கூறியுள்ள எதிரிகளை மட்டும் தான் எதிர்ப்போம். களத்துல இருக்கிறவங்களை மட்டும் தான் நாங்கள் எதிர்ப்போம். களத்தில் இல்லாதவர்களையும் எதிர்க்கும் ஐடியா இல்லை என்று தெரிவித்தார்.
திமுகவை விஜய் தீய சக்தி என்று ஆவேசமாக விமர்சித்திருப்பது பேசுபொருளாகி இருக்கிறது. அதேபோல் சுமார் 30 நிமிடங்களுக்கும் அதிகமான விஜய் பேசி இருப்பதால், வேகமாக முன்னேறி வருவதாக பார்க்கப்படுகிறது. அதேபோல் களத்தில் அதிமுகவின் இடத்தை பிடிக்க திமுக vs தவெக என்ற சூழலை விஜய் உருவாக்கி வருவதாகவும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்த போது, திமுக இளைஞரணியின் அடுத்த மண்டல மாநாடு எப்போது நடத்தப்படும் என்பதை கட்சித் தலைவர் முடிவு எடுப்பார் என்று தெரிவித்தார். தொடர்ந்து விஜய்யின் தீயசக்தி விமர்சனம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு உதயநிதி ஸ்டாலின், என்றாவது விஜய்யிடம் இப்படி கேள்வி கேட்டிருக்கிறீர்களா?
அவரை பேசவிட்டு பாருங்கள்.. அப்போது தெரியும் என்று தெரிவித்துள்ளார். தவெக என்ற அரசியல் கட்சியை தொடங்கியதில் இருந்து விஜய் இதுவரை ஒருமுறை கூட பத்திரிகையாளர்களை சந்திக்கவில்லை. இதனால் விஜய்யை சீண்டும் வகையில் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பி இருப்பதாக பார்க்கப்படுகிறது. இதற்கு தவெக தலைவர் விஜய் என்ன பதில் அளிப்பார் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
-
தண்ணீர் பாட்டில் வீசுனாங்க.. ஆனால் இன்னைக்கு! ஓபிஎஸ் சொன்னதுமே ஸ்டாலின் கொடுத்த ரியாக்ஷன் -
சென்னை அதிர்ச்சி.. தமிழகத்தின் கஜானா காலிக்கு காரணம் இவரா? விஜய் வெளியிட்ட "வொயிட் பேப்பர்" ரகசியம் -
OG திமுக இதுதான்.. ரெண்டு பேருமே பெரிய தலக்கட்டாச்சே! மணி & கோவை தட்டித் தூக்கும் திமுக! பரபர கொங்கு -
தவெகவுக்கு தாவும் திண்டுக்கல் திமுக கவுன்சிலர்.. அவங்க அப்பா பெரிய புள்ளியாச்சே! பிரம்மாண்ட ப்ளான்! -
விஜய் சார் இதை மறந்துடாதீங்க.. திமுக ஐடி விங்க் வெளியிட்ட மீம் வீடியோ..! -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய்.. எந்த வகையிலும் நியாயமற்ற அணுகுமுறை.. ஏன்? -
நிலைமை மோசமாகுது! அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான கொடூரங்கள்! சிங்கப்பெண் சிறப்புப் படை ஏன் தோற்றது? -
தமிழ்நாடுக்கு எச்சரிக்கை மணி! கடனை விட மோசமானது இது.. ஒவ்வொரு வருடமும் ரூ.78,324 கோடி! -
மரிய வில்சன் கொடுத்த ஷாக்.. புதிய திட்டங்களுக்கு பிரேக் வருமா? அப்போ ரூ.2500 மகளிர் உரிமைத்தொகை? -
சட்டஒழுங்கு நெருக்கடி.. உள்துறையை விட்டுக் கொடுக்கிறாரா முதல்வர் விஜய்? கைமாறும் போலீஸ் கண்ட்ரோல்? -
”தவெக ஆட்சியில் ஒரு பைசா கூட வாங்காமல் வேலை நடக்குது” தனியார் பள்ளி கூட்டமைப்பினர் நெகிழ்ச்சி -
“கோட் போட்டு வந்தாரு.. டிபன் எடுத்து வந்தாரு.. நாட்டுல பல அக்கிரமம் நடக்குது” விஜய்யை சாடிய ஸ்டாலின்










Click it and Unblock the Notifications