அப்பாவின் உடல்நிலை! அம்மாவின் போராட்டம்! பிரேமலதாவுக்காக பூரித்து போன விஜய பிரபாகரன்! என்ன சொன்னார்?
சென்னை: தமிழகத்தில் ஒரே பெண் அரசியல் தலைவர் பிரேமலதா தான் என விஜய பிரபாகரன் பெருமிதம் பொங்க கூறினார்.
சென்னை திருவேற்காட்டில் தனியார் திருமண மண்டபத்தில் நேற்றைய தினம் தேமுதிக செயற்குழு மற்றும் பொதுக் குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு விஜயகாந்த் வந்திருந்தார். அவரை பார்த்ததும் தொண்டர்கள் உற்சாகமடைந்தனர்.

அவரின் நிலையை கண்டு தொண்டர்கள் சிலர் கண்ணீர் விட்டனர். இந்த கூட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் அக்கட்சியின் பொதுச் செயலாளராக ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார். அப்போது கேப்டனின் காலில் விழுந்து ஆசி வாங்கினார் பிரேமலதா.
போகாத நாடு இல்லை: அந்த உணர்வுப்பூர்வமான தருணத்தில் பிரேமலதா பேசுகையில், விஜயகாந்திற்கு உடல்நலம் சரி இல்லாமல் இருப்பதால் 24 ணி நேரமும் அவரை அருகில் இருந்து கவனித்து வருகிறேன். அவருக்கு சிகிச்சை அளிப்பதற்காக செல்லாத வெளிநாடே இல்லை, வெளியூரும் இல்லை. எல்லா சிகிச்சைகளையும் பார்த்துவிட்டோம்.
இருமல்: அண்மையில் அவருக்கு இருமல் ஏற்பட்டதை அடுத்து பலர் வதந்திகளை பரப்பினர். செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டதாகவும் டிரக்கியாஸ்டமி சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின. இவை அனைத்துமே பொய் செய்திகள். எனக்குள் எத்தனையோ வருத்தங்கள் மன அழுத்தம் இருந்தாலும் இதுவரை எந்த இடத்திலும் கண்ணீர் சிந்தியது இல்லை.

தேமுதிக எம்பிக்கள்: நான் விஜயகாந்தை நன்றாக கவனித்து வருகிறேன். இனி கட்சிக்காக 24 மணி நேரமும் உழைப்பேன். 2026 சட்டசபை தேர்தலில் தேமுதிக நிச்சயம் ஆட்சி அமைக்கும். அதுபோல் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தேமுதிக எம்பிக்கள் டெல்லிக்கு செல்வார்கள் என தெரிவித்திருந்தார். இந்த பொதுக் குழுவில் பிரேமலதா பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கு விஜய பிரபாகரன் நியூஸ் 18 தொலைகாட்சிக்கு பேட்டி அளித்தார்.
ஒரே பெண் தலைவர்: அதில் முதலில் பிரேமலதாவுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தில் தற்போது உள்ள ஒரே பெண் தலைவர் பிரேமலதா தான். அவரது தலைமையில் தேமுதிக பெரும் வளர்ச்சி அடையும் என விஜய பிரபாகரன் தெரிவித்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. வேலையைக் காட்டிய விசிக! விஜய்க்கு பெரிய தலைவலி! திமுகவின் ப்ளானா? -
சேலத்தில் பெரியார் சிலை அவமதிப்பு.. கீழ்த்தரமான செயல் என திமுக கண்டனம் -
ஆட்டம் போடாதீங்க! சிறுபான்மை மக்களும் நிரந்தரமாக குட்பை சொல்லிடுவாங்க.. திமுகவை எச்சரித்த காங்கிரஸ் -
“தவெக ஆட்சி அமைந்ததிலிருந்து கமிஷன், கரெப்ஷன் என்ற பேச்சுக்கே இடமில்லை”.. விஜய்யை புகழ்ந்த வைகோ! -
இவ்வளவு பெரிய விஷயமா! அதிமுக கூடாரத்தை விஜய் காலி செய்வதற்குப் பின்னால் இருக்கும் மாஸ்டர் பிளான்! -
சென்னையில் இடி.. தவெகவில் இணையும் அதிமுக மா.செக்கள்? எடப்பாடி பழனிசாமிக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி! -
திருட்டு நடக்கிறது என்பதால் மால்களை மூடிவிடலாமா? மத்திய அரசுக்கு நக்கலாக கேள்வி எழுப்பிய டெலிகிராம் -
பூனைக்குட்டி வெளியே வந்துருச்சு! Don't care.. அண்ணாமலை பற்றி அமித் ஷா சொன்ன வார்த்தை! கலகல கமலாலயம்! -
நயினார் நாகேந்திரனுக்கு.. கேரள ஆளுநர் பதவி! அள்ளிக்கொடுக்கும் பாஜக! அப்போ.. அண்ணாமலை ரூட் சரிதான்! -
எங்களை தொட்டுருக்கவே கூடாது குழந்தை.. தவெகவுக்கு அதிமுக பைனல் வார்னிங் -
அதிமுக என்னும் மாபெரும் மதில் இடியும் போதும்.. மௌனம் காக்கும் எடப்பாடி.. ஒரு வார்த்தை பேசலையாமே! -
"மதிக்காத இடத்தில் பயணம் சாத்தியமா" அதிமுகவில் இருந்து விலகுவதை சூசகமாக சொன்ன விஜயபாஸ்கர்?












Click it and Unblock the Notifications