பச்சை நிற சட்டை, நெற்றியில் விபூதி . கண்களுக்கு கூலிங்கிளாஸுடன்.. பொங்கல் கொண்டாடிய விஜயகாந்த்
சென்னை: பச்சை நிற சட்டை அணிந்து கொண்டு விஜயகாந்த் எளிமையான முறையில் பொங்கல் பண்டிகையை கொண்டாடினார். இது தொடர்பான புகைப்படங்கள் அவரது சமூகவலைதள பக்கத்தில் வெளியாகியுள்ளது.
விஜயகாந்தை நேரில் பார்க்க மாட்டோமா என அவரது ரசிகர்களும் தொண்டர்களும் ஏங்கிக் கொண்டிருந்தனர். அவரும் தொண்டர்களும் தன்னை வாழ வைத்த ரசிகர்களையும் விரும்பி நேரில் சந்திப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்.
அது போல் தனது வீட்டுக்கு வரும் ரசிகர்களும் தொண்டர்களும் வயிறார உணவு அருந்திவிட்டு சாப்பிட வைத்துவிட்டுதான் அனுப்புவார். விஜயகாந்தின் கரங்கள் கொடுத்து கொடுத்து சிவந்த கரங்கள். கொடை வள்ளல், ஏழை பங்காளன் என்றெல்லாம் ரசிகர்களாக விஜயகாந்த்தை ஏழைத்து வருகிறார்கள்.

விஜயகாந்த்
இந்த நிலையில் விஜயகாந்திற்கு உடல்நிலை சரியில்லாததால் அவர் பொதுவெளியில் அதிகம் வருவதில்லை. சுதந்திர தினம், கேப்டன் பிறந்தநாளுக்கு தேமுதிக அலுவலகத்திற்கு வந்திருந்தார். அங்கு தொண்டர்களை பார்த்து பூரித்து போனார். இதையடுத்து ஆங்கில புத்தாண்டு அன்று விஜயகாந்த் தனது ரசிகர்களை சந்தித்தார்.

வழக்கம்
அப்போது தனது வழக்கமான ஒன்றை மறக்காமல் விஜயகாந்த் கடைபிடித்தார். அதன்படி தன்னை பார்க்க வந்த அனைவருக்கும் புதிய ரூபாய் நோட்டுகளை விஜயகாந்த் வழங்க ஆசைப்பட்டார். இதன் பிறபகு பிரேமலதா தொண்டர்களுக்கு புதிய ரூ 100 ஐ கேப்டன் சார்பாக பிரேமலதா வழங்கி மகிழ்ந்தார். பின்னர் அனைவருக்கும் கைகளை அசைத்து புத்தாண்டு வாழ்த்துகளை விஜயகாந்த் சொன்னார்.

கம்பீர குரல்
விஜயகாந்தின் கம்பீர குரலை கேட்க முடியாமல் தொண்டர்கள் கண் கலங்கியது. "இந்த ஆண்டுக்குள் கேப்டன் உடல்நிலை சரியாகி அவர் மீண்டும் பழைய பன்னீர் செல்வமாக வர வேண்டும் என தொண்டர்களும் பிரார்த்தனை செய்தனர். இந்த நிலையில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு விஜயகாந்த் தரிசனம் புகைப்படங்கள் மூலமாக கிடைக்காதா என தொண்டர்களும் ரசிகர்களும் ஏங்கிக் கொண்டிருந்தனர்.

சென்னை விருகம்பாக்கம்
அந்த வகையில் சென்னையில் விருகம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் எளிமையான முறையில் பொங்கல் பண்டிகையை கொண்டாடினார். மண் பானையில் பொங்கல் வைத்து கோ பூஜை செய்து தன் மனைவி பிரேமலதா, மகன்கள் விஜய பிரபாகரன், சண்முகபாண்டியன் ஆகியோருடன் பொங்கல் விழாவை கொண்டாடினார். நாற்காலியில் அமர்ந்தபடி கண்ணாடி அணிந்து கொண்டு கைகூப்பியபடி பூஜையில் பங்கேற்றார்.

பச்சை நிற சட்டை
பச்சை நிறத்தில் ஆன சட்டை அணிந்திருந்தார். நெற்றியில் திருநீறு பட்டையும் இருந்தது. பிரேமலதாவும் பச்சை நிற புடவையில் இருந்தார். விஜயபிரபாகன் நீல நிற சர்ட்டிலும் காக்கி நிற பேண்டிலும் இருந்தார். இஅது போல் இளைய மகன் சண்முகபாண்டியன் நீளமான முடி, தாடியுடன் வேஷ்டி சட்டை அணிந்துக் கொண்டிருந்தார்.












Click it and Unblock the Notifications