5 முறை மதுரைக்கு போயிருக்கேன்.. குஷ்பு மேடம் சீமானிடம் பேசுங்கள்.. கயல்விழியால் கடுப்பான விஜயலட்சுமி
சென்னை: கயல்விழி என்னை பாடி ஷேமிங் செய்கிறார், நான் தற்கொலை செய்தால் என்ன செய்வார்கள், சீமானிடம் கொஞ்சம் பேசுங்கள் என நடிகையும் தேசிய பெண் ஆணைய உறுப்பினருமான குஷ்புவுக்கு நடிகை விஜயலட்சுமி கோரிக்கை விடுத்துள்ளார்.
தன்னை சீமான் திருமணம் செய்துக் கொண்டு ஏமாற்றியதாக நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரின் பேரில் சீமானிடம் நேற்றைய தினம் வளசரவாக்கம் போலீஸார் விசாரணை நடத்தினர்.

சீமான் தனது மனைவியும் வழக்கறிஞருமான கயல்விழியுடன் வந்திருந்தார். சீமானிடம் 2 மணி நேரம் போலீஸார் விசாரணை நடத்தினர். இதையடுத்து சீமான் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவருடைய மனைவியிடம் செய்தியாளர்கள் கேட்ட போது எனக்கு மனஉளைச்சல் எல்லாம் இல்லை. எனக்கு பலர் போன் செய்து ஆறுதல் சொல்லும் போதெல்லாம் எதுக்கு சொல்றாங்கன்னுத்தான் தோன்றும். அவரே மலை போல் நிற்கும் போது எனக்கு என்ன கவலை? என கேள்வி எழுப்பினார். அப்போது சீமான், என் மனைவி இந்த விவகாரத்தில் கோபப்பட்டு என் குரல் வளையை நெரித்து, இவ்வளவு பெண்கள் உள்ள கொல்லையில் உனக்கு பழகுவதற்கு வேறு பொண்ணே கிடைக்கலையா என கேட்டார். இவ்வாறு சீமான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து விஜயலட்சுமி பேசுகையில் எத்தனையோ பெண்கள் இருக்கும் போது உனக்கு விஜயலட்சுமிதான் கிடைத்தாரா என தனது மனைவி கயல்விழி கேட்டதாக பொதுவெளியில் சீமான் சொல்லியுள்ளார். குஷ்பு மேடம் இவர்கள் என்னை தொடர்ந்து பாடி ஷேமிங் செய்து வருகிறார்கள்.
தற்போது சீமானுக்கு 57 வயதாகிறது. கயல்விழி சீமானை திருமணம் செய்த போது சீமானுக்கு 42 வயதாக இருந்தது. என்ன பேசுகிறோம் என்றே கயல்விழிக்கு தெரியவில்லை. நம் கணவர் என்ன செய்திருக்கிறார் என்று கூட தெரியாமல் என்னை கிண்டல் செய்திருக்கிறார். இவர்கள் இருவரும் என்னை பாடி ஷேமிங் செய்கிறார்கள். கட்சிக்காரர்களும் என்னை கண்டபடி பேசுறாங்க.
தவறான பெண் போல் என்னை சித்தரிக்கிறார்கள். கடந்த மார்ச் மாதம் முதல் மதுரை செல்வம் என்னிடம் போனில் சீமான் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். அதை பற்றி எந்த பிரஸ்மீட்டிலும் சொல்ல மாட்டேங்கிறார். 2011-ஆம் ஆண்டு என்னை மதுரைக்கு 5 முறை பிளைட் டிக்கெட் போட்டு அழைத்து சென்றுள்ளார்கள். அது குறித்தெல்லாம் அவர் பேசுவதில்லை.

இதற்கு கண்கூடான சாட்சியே இருந்தாலும் சீமானை சிலர் காப்பாற்றிவிட்டு என்னை துன்பப்படுத்துகிறார்கள். இது முன்பு கூட என்னை டார்ச்சர் செய்ததால்தான் இரு முறை தற்கொலைக்கு முயன்றேன். இந்த முறையும் சொல்கிறேன் , எனக்கு மிகவும் அதிகமாக மன உளைச்சல் கொடுத்தால் நான் சாக வேண்டியதை தவிர வேறு வழியில்லை.
கொஞ்சமாவது மனிதாபிமானத்துடன் சீமானை பேச சொல்லுங்கள். நானோ என் அக்காவோ செத்து போய்விட்டால் சீமான் என்ன செய்வார். ஒரு வேளை நாங்கள் சாக வேண்டும் என்பதற்காகவே இப்படி செய்கிறார்களா? குஷ்பு மேடம் நீங்கள்தான் சீமானிடம் பேச வேண்டும் என இந்த வீடியோ வாயிலாக சின்னதாக ஒரு விண்ணப்பம் வைக்கிறேன் என விஜயலட்சுமி பேசியிருந்தார்.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல்












Click it and Unblock the Notifications