ஜனநாயகன் படத்திற்கு சென்சார் சான்றிதழ் தாமதமாவதால்.. விஜய்க்கு 2 நன்மைகள் இருக்கு தெரியுமா?
சென்னை: ஜனநாயகன் திரைப்படம் ஜன.9ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், இன்னும் சென்சார் சான்றிதழ் வழங்கப்படவில்லை. இது தொடர்பான வழக்கு தற்போது தீர்ப்புக்காக காத்திருக்கிறது. இந்நிலையில், இந்த தாமதம் விஜய்க்கு பாசிட்டிவாகவே அமையும் என்று சொல்லப்படுகிறது.
அரசியலில் என்ட்ரி கொடுத்திருப்பதால், திரைத்துறைக்கு விஜய் டாடா சொல்லியிருக்கிறார். அந்த வகையில் ஜனநாயகன் திரைப்படம்தான் அவருடைய கடைசி படம் என்று பேசப்படுகிறது. எனவே திரைப்படத்தின் மீதான ஹைப் எகிறியிருக்கிறது. வசூலை குவிக்க இது ஒன்றே போதும். ஆனால், திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

முதல் பாசிட்டிவ்
என்னதான் சிக்கல் ஏற்பட்டாலும், படத்துக்கும் விஜய்க்கும் பெரிய பாதிப்பு ஏற்படாது. ஏனெனில், இந்த பஞ்சாயத்து விஜய்க்கும், தமிழக வெற்றிக் கழகத்திற்கும் இரண்டு வகைகளில் பாசிட்டிவாக அமைந்திருக்கிறது. அதாவது சென்சார் சான்றிதழ் இழுத்தடிக்கப்பட்டிருப்பதால்.. திமுகதான் திரைப்படத்தை வெளியிடாமல், விஜய்யை பழிவாங்குகிறது என்கிற எண்ணம் அவரது ரசிகர்களிடையே உருவாகும். பொங்கல் ரேஸில் 2 படங்கள்தான் இருக்கின்றன. ஒன்று ஜனநாயகன், இரண்டாவது பராசக்தி. பராசக்தியை ரெட் ஜெயன்ட் வெளியிடுகிறது.
தேர்தல் இருக்கு
ஜனநாயகன் திரைப்படம் தாமதமாவதால் யாருக்கு லாபம்? நிச்சயம் பராசக்திக்குதான். எனவே திட்டமிட்டு திரைமறைவில் பாஜகவுடன் பேரம் பேசி, எங்கண்ணன் படத்தை நிப்பாட்டிட்டாங்க.. என்று விஜய் விசிறிகள் திமுகவுக்கு எதிராக தங்கள் எதிர்ப்பை கொந்தளித்து வருகின்றனர். இதுக்கெல்லாம் தேர்தல்ல சேர்த்து செஞ்சிவிடுறோம் என்று கங்கணம் கட்டிக்கொண்டு சுற்றிக்கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் படம் தாமதம், தவெகவுக்கான வாக்குகளை மேலும் உறுதி செய்யும்.
இரண்டாவது பாசிட்டிவ்
அதெபோல இரண்டாவது பாசிட்டிவ் பாயிண்ட், பாருங்க மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் தணிக்கை வாரியம், எங்களுக்கு சர்டிபிகேட் கொடுக்கல. அப்படின்னா, நாங்க பாஜகவின் B-டீம் என்று சொல்லது பொய்தானே! என்று தவெக ஸ்ட்ராங்காக பேச இந்த சம்பவம் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது.
ஒருவேளை திமுக சொல்வதை போல நாங்கள் பாஜகவின் இன்னொரு அணி என்பது உண்மையாக இருந்தால்.. எதற்காக திரைப்படத்தை வெளியிட கோரி நீதிமன்றம் நோக்கி நாங்கள் அலைந்துக்கொண்டிருக்கிறோம்? பாஜகவிடம் பேசி காரியத்தை முடித்திருக்க முடியாதா? என்று தவெகவினர் சோஷியல் மீடியாக்களில் கேள்வி எழுப்ப தொடங்கியுள்ளனர்.
மேன் ஆப் தி மேட்ச்
ஆக எப்படி பார்த்தாலும், மேன் ஆப் தி மேட்ச் நாங்கதான் என தவெக நிர்வாகிகள் உறுதியாக இருக்கின்றனர். ஒருவேளை திரைப்படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டால், பராசக்தியுடனான போட்டியை தவிர்க்க முடியும். லேட்டாக வந்தாலும், லேட்டஸ்ட்டாக வசூலை அள்ளி குவிக்க முடியும் என்று, இந்த பஞ்சாயத்தில் என்னவெல்லாம் சாதகம் இருக்கிறதுல்ல..
-
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
விஜய் போட்ட உத்தரவு.. 5 நாள் தான் டைம்.. வீடு கட்டுவோருக்கு மெகா குட்நியூஸ்! -
சென்னையில் வெடிக்கும் பிரியா vs விஜய் மோதல்.. மேயர் - முதல்வர் இடையே மறைமுக யுத்தம்.. என்ன காரணம்? -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில்












Click it and Unblock the Notifications