விஜயின் ‛மாஸ்டர்’ பட நடிகையின் துணிச்சல்.. சென்னையில் தனிஆளாக திருடனை பிடித்த ஷில்பா.. 2 லேப்டாப் மீட்பு
சென்னை: நடிகர் விஜயின் ‛மாஸ்டர்' திரைப்படத்தில் நடித்த நடிகையும், பல் டாக்டருமான ஷில்பா நிகர் சென்னையில் கிளினிக் நடத்தி வருகிறார். இந்த கிளினிக்கிற்குள் நுழைந்து 2 லேப்டாப்பை திருடி சென்ற திருடனை நள்ளிரவில் தனிஆளாக தேடி சென்று பிடித்து போலீசில் ஒப்படைத்த பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது. மேலும் திருடனிடம் இருந்து 2 லேப்டாப் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னையில் வசித்து வருபவர் டாக்டர் ஷில்பா நிகர். பல் மருத்துவர். இவர் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான ‛மாஸ்டர்' திரைப்படத்தில் நடித்துள்ளார். ஷில்பா நிகர் சென்னை நுங்கம்பாக்கத்தில் கிளினிக் வைத்துள்ளார்.

இந்நிலையில் தான், நள்ளிரவு 12 மணியளவில் கிளினிக்கில் யாரும் இல்லாத நேரத்தில் உள்ளே நுழைந்த நபர் 2 லேப்டாப்பை திருடி சென்றார். இந்த சமயத்தில் பாத்ரூமில் இருந்து வெளியே வந்த ஊழியர் லேப்டாப் மாயமாகி இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
அனைத்து இடங்களிலும் தேடிப்பார்த்தார். ஆனால் எங்கு தேடியும் லேப்டாப் கிடைக்கவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர் ஷில்பா நிகருக்கு போன் செய்து நடந்த சம்பவத்தை கூறினார். அவர் சிசிடிவி கேமராவை செக் செய்யும்படி கூறினார். அப்போது ஒருவர் அசால்டாக கிளினிக்கிற்குள் நுழைந்து 2 லேப்டாப்களை தூக்கி சென்றது பதிவாகி இருந்தது.
இதுபற்றி போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. நள்ளிரவு என்பதால் ரோந்து போலீசார் வந்து சில இடங்களில் தேடிப்பார்த்தனர். ஆனால் திருடன் சிக்கவில்லை. இதனால் போலீசார் மறுநாள் காலையில் தேடலாம் என்று கூறினர். ஆனால் டாக்டர் ஷில்பா நிகர் விடவில்லை. எப்படியாவது திருடனை பிடிக்க வேண்டும் என்று நினைத்தார்.
இதையடுத்து அவர் ஆட்டோவில் பயணித்தார். லேப்டாப் திருடிய திருடன் சாலையில் தான் நடமாட வேண்டும் என்று அவர் நினைத்தார். இதையடுத்து 2 மணிநேர தேடுதல் வேட்டைக்கு பிறகு ஸ்டெர்லிங் சாலையில் ஒருவர் நடந்து சென்றார். அவர் கையில் சாக்குப்பை வைத்திருந்தார். அவர் அணிந்திருந்த செருப்பு மற்றும் சட்டை சிசிடிவி கேமராவில் பதிவான நபருடன் ஒத்துப்போனது. இதனால் ஆட்டோவை நிறுத்திய ஷில்பா நிகர் அவரது சாக்குப்பையை வாங்கி உள்ளே தேடினார். அப்போது குப்பைகளுக்கு மத்தியில் 2 லேப்டாப்பை மறைத்து வைத்தது தெரியவந்தது.
இதையடுத்து லேப்டாப்பை எடுத்து கொண்ட ஷில்பா நிகர் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் வந்து அந்த நபரை கைது செய்து அழைத்து சென்றனர்.












Click it and Unblock the Notifications