மங்களகரமா மஞ்சள்ல.. இன்னைக்கு ஒரு புடி! உலக அளவில் மெகா சாதனையுடன் ’வில்லேஜ் குக்கிங் சேனல்’ பாய்ஸ்!
சென்னை: இந்தியாவில் 3 கோடி சப்ஸ்கிரைபர்களை எட்டிய முதல் குக்கிங் யூடியூப் சேனல் என்ற பெருமையை தட்டிச் சென்றுள்ளது தமிழர்களின் பெருமையான 'வில்லேஜ் குக்கிங் சேனல்'. கிராமிய வாழ்க்கையை, எளிய உணவு ரெசிப்பிகளுடன் உலகம் முழுவதும் கொண்டு சென்ற இந்தக் குழு, ஏழு ஆண்டுகளில் சாதாரண யூடியூபர்களிலிருந்து இந்தியாவின் மிகப்பெரிய உணவு சேனலாக உயர்ந்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள சின்ன வீரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன், அய்யனார், பெரியதம்பி, முருகேசன், முத்துமாணிக்கம், தமிழ்ச்செல்வன் ஆகிய ஆறு பேரும் சேர்ந்து 2018-ல் இந்த சேனலை துவக்கினர்.
இணைய வசதி கூட சரியாக இல்லாத அந்த நாட்களில், கிராமத்தில் உயரமான மரங்களில் ஏறி, சிக்னல் கிடைக்கும் இடத்தைத் தேடி வீடியோக்களைப் பதிவேற்றிய நினைவுகள் இவர்களுக்கிருந்தன. ஆனால், கடின உழைப்பை விடாமல் செய்தாலும் முதல் 8 மாதங்களுக்கு பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை.

வில்லேஜ் குக்கிங்
இவர்கள் வெளியிட்ட முதல் 55 வீடியோக்களும் அதிகமான பார்வையாளர்களை ஈர்க்கவில்லை. இருப்பினும் மனம் தளராத இவர்களின் அயராத முயற்சியும், வென்றே ஆக வேண்டுமென்ற பிடிவாத தன்மையும் பின்னர் பெரிய மாற்றத்தை உருவாக்கியது. "எங்கே தவறு நடக்கிறது?" என்று ஆய்வு செய்து, மக்கள் விரும்பும் வகையில் வீடியோ தரத்தை உயர்த்தினர். அதில்தான் இவர்களின் வெற்றிக் கதைக்கு புதிய திருப்பம் கிடைத்தது. கிராமிய வாழ்க்கையின் மணத்தை உணர்த்தும் வகையில் ஈசல் ஃப்ரை, நண்டு ரசம், நத்தை கறி போன்ற உணவுகளை மிக எளிமையாகவும், அழகாகவும் காட்டிய இவர்களின் வீடியோக்கள் மக்களின் மனதைத் தொடங்கின.
தமிழ் யூடியூப்
அதில், கரையான் குறித்த சமையல் வீடியோ தான் இவர்களை நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் அறிமுகப்படுத்தியது. அந்த வீடியோவில் பெரியதம்பி பேசும் "இன்னைக்கு ஒரு புடி!" என்ற வாசகம் எல்லோரும் சிரிப்புடன் மீண்டும் மீண்டும் கூறும் அளவுக்கு வைரலானது. இவர்களின் பிரபலம்கூட அரசியல் உலகை எட்டியது. 2021 சட்டப்பேரவைத் தேர்தலின் போது தமிழ்நாடு வந்த ராகுல் காந்தி கூட இவர்களுடன் சேர்ந்து சமையல் செய்தார். அதன் ஒரு வாரத்திலேயே, இவர்கள் 1 கோடி சப்ஸ்கிரைபர்களை அடைந்தனர்.
3 கோடி சப்ஸ்கிரைபர்
மக்கள் கருத்துகளை கவனமாக கேட்டும், தொடர்ச்சியாக தரத்தை மேம்படுத்தியும் வந்ததால் அனைவரின் அங்கீகாரமும் இவர்களுக்கு கிடைத்தது. ஒரு காலத்தில் ஒரு வீடியோவைப் பதிவேற்ற 7 மணி முதல் 24 மணி நேரம் வரை காத்திருந்த இந்தக் குழு, இன்று 3 கோடி சப்ஸ்கிரைபர்களை உடைய இந்தியாவின் முதல் குக்கிங் சேனல் ஆக உயர்ந்துள்ளது. இது இவர்களின் பொறுமை, முயற்சி, தன்னம்பிக்கை என்னும் மூன்று தூண்களின் வெற்றிக் கதை என்று சொல்லலாம்.
வில்லேஜ் குக்கிங் சேனல்
உலகளவில் யூடியூபில் உணவு தொடர்பான சிறந்த 100 சேனல்களில் நான்காம் இடத்தைப் பிடித்திருக்கிறது வில்லேஜ் குக்கிங் சேனல். முதல் மூன்று இடங்களில் உள்ள MARTA AND RUSTAM, TSURIKI SHOW போன்ற சேனல்கள் உணவு விமர்சனங்களையும் காட்டுகின்றன. ஆனால், முழுக்க முழுக்க உணவு தயாரிப்பையே காட்டி இந்த உயரத்தை எட்டியது தமிழர்களின் வில்லேஜ் குக்கிங் சேனல்தான் என்பதில் சந்தேகமே இல்லை. இன்று உலகம் முழுவதும் பயணம் செய்கிறார்கள். அமெரிக்காவிலிருந்தே பாராட்டுகள் குவிகின்றன. "எங்கே இருக்கோம் என்பது முக்கியம் இல்லை... என்ன பன்றோம் அப்படீங்குறது தான் முக்கியன்" என்பதற்கான மிகச்சிறந்த உதாரணம் இவர்களே.
-
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
ஸ்டாலினுக்கு இத்தகைய நடத்தை அழகல்ல.. நிர்மலா சீதாராமன் விளக்கம் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications