நடுரோட்டில் போதையில் ரகளை செய்த இந்த பெண்ணை நினைவிருக்கா? போலி போக்சோ வழக்கில் சிக்கினார்!
சென்னை: சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் நடுரோட்டில் மதுபோதையில் இரண்டு சிறுமிகள் பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்தப்பெண் தற்போது மீண்டும் சர்ச்சையில் சிக்கி உள்ளார்.
சமூக வலைதளங்களில் இன்றுவரை அந்த பழைய வீடியோ பலராலும் மீம்ஸ்களாகவும், கிண்டல் வீடியோக்களாகவும் பகிரப்பட்டு வருகிறது. ஆனால், அந்த வீடியோவில் இருந்த 17 வயதுச் சிறுமிதான், சென்னை திருமங்கலம் காவல் நிலையத்தில் பதிவான ரூ.5 லட்சம் லஞ்சம் மற்றும் போலி போக்சோ வழக்கிலும் பயன்படுத்தப்பட்டுள்ளார் என்ற அதிர்ச்சித் தகவல் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

வைரலான ரெட் ஹில்ஸ் சாலை வீடியோ
கடந்த சில மாதங்களுக்கு முன்பு, சென்னை ரெட் ஹில்ஸ் சாலையில் நடுரோட்டில் நின்றபடி இரண்டு இளம்பெண்கள் போதையில் தள்ளாடியபடியும், அங்கிருந்தவர்களிடம் ஆபாசமாகப் பேசி வாக்குவாதம் செய்தபடியும் வீடியோ ஒன்று வைரலானது. சாலையில் சென்றவர்கள் எடுத்த அந்த வீடியோ இன்ஸ்டாகிராம் யூடியூப் ஆகிய தளங்களில் காட்டுத்தீ போலப் பரவியது.
அந்த வீடியோவில் பெண்கள் பேசிய சில வார்த்தைகளும், மோசமான சொற்களும், அவர்களின் செய்கைகளும் சமூக வலைதளங்களில் ட்ரோல் மெட்டீரியலாக மாறின. பலரும் அதைப் பார்த்துச் சிரித்து, மீம்ஸ்களாகப் பகிர்ந்து கொண்டிருந்தனர்.
ஆனால், அந்த வீடியோவிற்குப் பின்னால் ஒரு அப்பாவி இளைஞரின் வாழ்க்கையையே காப்பாற்றிய மிகப்பெரிய திருப்பம் ட்விஸ்ட் அப்போது யாருக்கும் தெரியாது.
பழிவாங்கத் தீட்டப்பட்ட போலி போக்சோ சதி
தெலங்கானாவைச் சேர்ந்த 40 வயது நபரான சுரேஷ் கண்ணா, மேட்ரிமோனி இணையதளத்தில் தனது வயது 25 என்று பொய் சொல்லி சென்னையைச் சேர்ந்த ஒரு பெண்ணைத் திருமணம் செய்ய அணுகியுள்ளார். சந்தேகமடைந்த அந்தப் பெண், சுரேஷ் கண்ணாவின் விருப்பத்தை நிராகரித்தார்.
இதனால் ஆத்திரமடைந்த சுரேஷ் கண்ணா, அந்தப் பெண்ணின் குடும்பத்தைப் பழிவாங்கத் திட்டமிட்டார். அப்பெண்ணின் தம்பியான ஸ்ரீராம் என்பவரைப் பொய்யான போக்சோ வழக்கில் சிக்க வைக்க திட்டமிட்டார்.
இடைத்தரகர்கள் மூலம் 17 வயதுச் சிறுமி ஒருவரை ஏற்பாடு செய்தார். அந்தச் சிறுமியை சமூக வலைதளம் வழியாக ஸ்ரீராமிடம் மூன்று மாதங்கள் பழக வைத்து, கடந்த ஆகஸ்ட் 23-ம் தேதி திருமங்கலத்தில் உள்ள மால் ஒன்றிற்கு வரவழைத்துள்ளனர்.
பின்னர், ஸ்ரீராம் தன்னிடம் பாலியல் தொல்லை கொடுத்ததாக அந்தச் சிறுமி திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதற்காக சுரேஷ் கண்ணா தரப்பு, இடைத்தரகர்கள் மூலமாக காவல் ஆய்வாளர் விஜயலட்சுமி மற்றும் காவலர் வசந்தராஜா ஆகியோருக்கு ரூ.5 லட்சம் லஞ்சம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. பணத்தைப் பெற்றுக்கொண்ட ஆய்வாளர் விஜயலட்சுமி, ஸ்ரீராம் மீது போக்சோ வழக்கைப் பதிவு செய்தார்.
கைதைத் தடுத்து நிறுத்திய அந்த வைரல் வீடியோ
போக்சோ வழக்குப் பதிவு செய்யப்பட்டவுடன் ஸ்ரீராமை போலீசார் உடனடியாகக் கைது செய்திருக்க வேண்டும். ஆனால், சரியாக அதே நேரத்தில்தான், புகார் அளித்த அந்த 17 வயதுச் சிறுமி நடுரோட்டில் போதையில் வேறொரு பெண்ணுடன் சேர்ந்து கொண்டு.. சாலையில் நின்றவர்களிடம் சண்டையிடும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது.
புகார் கொடுத்த சிறுமியின் பின்னணி மற்றும் நடத்தை குறித்து அந்த வீடியோ மூலமாகப் போலீசாருக்குச் சந்தேகம் எழுந்தது. இதன் காரணமாகவே ஸ்ரீராமை கைது செய்தால் சிக்கல் ஏற்படும் என நினைத்து போலீசார் கைதை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தனர்.
இப்போதெல்லாம் என்னென்னவோ வித்தியாசமான செய்திகளைக் கடந்து போக வேண்டியிருக்கிறது!சில மாதங்களுக்கு முன்பு, சென்னையில் (ரெட் ஹில்ஸ் சாலை) நடுரோட்டில் போதையில் இருந்ததாகக் கூறப்பட்ட இரண்டு சிறுமிகள், அங்கிருந்தவர்களிடம் தகராறில் ஈடுபட்ட வீடியோ ஒன்று வைரலானது ஞாபகம் இருக்கிறதா? அந்த வீடியோ இன்றுவரை சமூக வலைதளங்களில் ஒரு Troll Material ஆகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.அந்தச் செய்தியைக்கூட சுலபமாகக் கடந்துவிடலாம். ஆனால், அந்தச் சிறுமி தொடர்பாக இப்போது வெளியாகியிருக்கும் செய்திதான் தலைசுற்ற வைக்கிறது...இந்தச் சம்பவத்தில் இரண்டு விதமான மோசடிகள் அரங்கேறியுள்ளது.. முதல் சம்பவம்:40 வயதான சுரேஷ் கண்ணன் என்பவர், தனது வயதை மறைத்து, புகைப்படத்தை எடிட் செய்து, 25 வயது இளைஞராகத் தன்னைத் திருமணத் தகவல் இணையதளத்தில் அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறார்.அதன் மூலம் நெய்வேலியைச் சேர்ந்த பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இரு வீட்டாரும் திருமணம் குறித்துப் பேசும் அளவுக்கு விஷயம் சென்றிருக்கிறது. நிச்சயதார்த்தத்துக்குப் புடவை எடுக்க அந்தப் பெண்ணின் வங்கிக் கணக்குக்கு ஒரு லட்சம் ரூபாயைக்கூட அனுப்பியிருக்கிறார்.ஒருகட்டத்தில், மாப்பிள்ளையை நேரில் பார்க்க வேண்டும் என்று அந்தப் பெண் சொல்லியிருக்கிறார். நேரில் வந்தவரைப் பார்த்த பிறகுதான் தான் ஏமாற்றப்பட்டிருப்பது அந்தப் பெண்ணுக்குத் தெரியவந்திருக்கிறது.திருமணத்தை நிறுத்தியதோடு, அந்த ஒரு லட்சம் ரூபாயையும் பெண் வீட்டார் திருப்பிக் கொடுத்திருக்கிறார்கள்.ஆனால், அந்தப் பெண்ணை விடாமல் தொடர்ந்து தொல்லை கொடுத்திருக்கிறார் சுரேஷ் கண்ணன். தனது அக்காவுக்குத் தொல்லை கொடுப்பதை நிறுத்தும்படியும், இல்லையென்றால் போலீஸில் புகார் கொடுப்பதாகவும் எச்சரித்திருக்கிறார் அவரது தம்பி ஸ்ரீராம்.இரண்டாவது சம்பவம்:இதனால் ஆத்திரமடைந்த சுரேஷ் கண்ணன், அந்தப் பெண்ணைப் பழிவாங்குவதற்காக அவரது தம்பியை(ஶ்ரீராம்) போக்சோ வழக்கில் சிக்க வைக்கத் திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது.அதுவும் ஒரு காவலரின் உதவியோடு!இதற்காக 17 வயது சிறுமி (நடுரோட்டில் போதையில் தகராறு செய்து வைரலான அந்த சிறுமி தான் அது) ஒருவரிடம் ரூ.6 லட்சம் தருவதாகப் பேரம் பேசியிருக்கிறார்கள். இன்ஸ்டாகிராம் மூலமாக ஸ்ரீராமிடம் அறிமுகமாகி, மூன்று மாதங்கள் பழகிய அந்தச் சிறுமி, கடந்த ஆகஸ்ட் 23-ம் தேதி சென்னையில் உள்ள ஒரு மாலுக்கு அவரை வரவழைத்திருக்கிறார்.பின்னர், ஸ்ரீராம் தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார். அவர் மீது போக்சோ வழக்கும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.இதற்காகக் காவல்துறையினருக்கு ரூ.5 லட்சத்துக்கும் அதிகமாக லஞ்சம் கொடுக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.ஆனால், ஸ்ரீராமைக் கைது செய்வதற்கு முன்பாக, அந்தச் சிறுமி சாலையில் போதையில் தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படும் வீடியோ வைரலாகியிருக்கிறது. இதையடுத்து, அவரைக் கைது செய்யும் நடவடிக்கையை நிறுத்தி வைத்திருக்கிறார்கள் போலீஸார்.இப்போது திருமண மோசடி வழக்கில் சுரேஷ் கண்ணனைக் கைது செய்து விசாரித்தபோதுதான் இந்தச் சதித்திட்டம் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.இதையடுத்து, திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் விஜயலட்சுமி, காவலர் வசந்தராஜா ஆகிய இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்...அன்று அந்த வீடியோ வெளியாகாமல் இருந்திருந்தால்? இந்தச் சதித்திட்டம் வெளிச்சத்துக்கு வராமல் போயிருந்தால்? எந்தத் தவறும் செய்யாத இளைஞர், போக்சோ வழக்கில் இன்று சிறையில் இருந்திருக்கக்கூடும் அல்லவா?குழந்தைகளைப் பாலியல் வன்கொடுமைகளிலிருந்து பாதுகாக்க உருவாக்கப்பட்ட ஒரு சட்டத்தை, தனிப்பட்ட பழிவாங்கலுக்காகப் பயன்படுத்த முயன்றிருக்கிறார்கள். அதற்காக ஒரு 17 வயது சிறுமியையும் பயன்படுத்தியிருக்கிறார்கள். இந்தச் சதிக்கு காவல்துறையினரே உடந்தையாக இருந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.இந்த மாதிரியெல்லாம் நடக்குமா? பணம் கொடுத்தால் ஒருவருடைய ஒட்டுமொத்த வாழ்க்கையையும் அழித்துவிட முடியுமா?நியாயம் கிடைக்கும் என்று நம்பி யாரிடம் போகிறோமோ, அவர்களே பணத்துக்காக அநியாயத்துக்குத் துணைபோனால், பிறகு யாரைத்தான் நம்புவது?
— செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்.. (@selvachidambara) November 17, 2026
நெய்வேலி விசாரணையில் உடைந்த உண்மை
இதற்கிடையில், மற்றொரு திருமண மோசடி வழக்கில் கடலூர் மாவட்டம் நெய்வேலி போலீசாரால் சுரேஷ் கண்ணா கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில், ஸ்ரீராமை கைது செய்யச் சொல்லி இடைத்தரகர்கள் மூலம் போலீசாருக்கு ரூ.5 லட்சம் கொடுத்தேன்; ஆனால் அவர்கள் இன்னும் கைது செய்யவில்லை என உண்மையை உளறினார்.
இதையடுத்து நடத்தப்பட்ட உயர்மட்ட விசாரணையில், பணம் பெற்றுக்கொண்டு பொய் வழக்குப் பதிவு செய்தது உறுதியானதால், ஆய்வாளர் விஜயலட்சுமி மற்றும் காவலர் வசந்தராஜா ஆகிய இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
சமூக வலைதளங்களில் வெறும் ட்ரோல் வீடியோவாக பார்க்கப்பட்ட ஒரு வைரல் வீடியோ, தற்செயலாக ஒரு அப்பாவி இளைஞர் செய்யாத குற்றத்திற்காகச் சிறைக்குச் செல்வதைத் தடுத்து நிறுத்தியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
