VK Sasikala Arrival LIVE: சசிகலாவுக்கு கார் கொடுத்த நிர்வாகி அதிமுகவில் இருந்து டிஸ்மிஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சசிகலாவுக்கு வரவேற்பு மற்றும் கார் கொடுத்ததாக மொத்தம் 6 பேர் அதிமுகவில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர்.

Recommended Video

    #BREAKING தீவிர அரசியலில் ஈடுபடுவேன்... சசிகலா!

    பெங்களூர் தேவனஹள்ளி பண்ணை வீட்டிலிருந்து அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் சென்னை புறப்பட்ட சசிகலா தமிழக எல்லையான ஜூஜூவாடி பகுதியை கடந்து அதிமுக கொடி கட்டிய வேறு ஒரு காரில் சென்னை நோக்கி பயணம் மேற்கொண்டார் சசிகலா. ஆனால் ஓசூர் அருகே சசிகலாவின் வாகனத்தை போலீசார் தடுத்து நிறுத்தி அதிமுக கொடியை பயன்படுத்த கூடாது என நோட்டீஸ் கொடுத்தனர்.

    அதை சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் பெற்றுக் கொண்டார். பின்னர் வாணியம்பாடி டோல்கேட் பகுதியில் செய்தியாளர்களை சந்தித்தார் சசிகலா. 4 ஆண்டு சிறைவாசத்துக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் சசிகலா.

    Feb 09, 2021, 7:20 am IST

    பெங்களூருவிலிருந்து சென்னை திரும்பிய சசிகலா ராமாவரத்தில் எம்ஜிஆர் சிலைக்கு மரியாதை. பெங்களூருவிலிருந்து சென்னை வந்த சசிகலா இன்று காலை 4 மணிக்கு ராமாவரம் வந்தடைந்தார். ராமாவரத்தில் எம்ஜிஆர், ஜானகி படங்களுக்கு அவர் மரியாதை செலுத்தினார்.
    Feb 09, 2021, 6:54 am IST

    தொடர்ந்து 23 மணி நேரம் பயணம் செய்த சசிகலா. சென்னை குயின்ஸ்லாந்த் அருகே சசிகலாவின் காரை நிறுத்திய போலீஸ். வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் உள்ளிட்டோர் வாக்குவாதம் செய்ததால் அனுமதி.
    Feb 09, 2021, 6:54 am IST

    அதிமுக கொடியுடன் சென்னை வந்தடைந்தார் சசிகலா. நேற்று காலை பெங்களூருவிலிருந்து புறப்பட்ட சசிகலா இன்று அதிகாலை 4 மணிக்கு சென்னை வந்தார். பெங்களூர்- சென்னையில் வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு.
    Feb 08, 2021, 9:20 pm IST

    சசிகலா சென்ற கார் பழுதானதால் மனிதாபிமான அடிப்படையில் எனது காரை கொடுத்தேன் -சம்பங்கி. சாலையில் செல்லும் போது வாகன பழுது ஏற்பட்டு யாராவது நின்றால் நீங்கள் உதவமாட்டீர்களா என கேள்வி
    Feb 08, 2021, 9:11 pm IST

    கட்சியிலிருந்து நீக்கியதை சட்டப்படி சந்திப்பேன் -சசிகலாவுக்கு கார் கொடுத்த சம்பங்கி எதிர்வினை ஒன் இந்தியா தமிழுக்கு கிருஷ்ணகிரி ஒன்றிய கவுன்சிலர் எஸ்.ஆர். சம்பங்கி தகவல்
    Feb 08, 2021, 8:59 pm IST

    சசிகலாவுக்கு வரவேற்பு கொடுத்ததாக அதிமுகவில் இருந்து மேலும் 6 பேர் நீக்கம்
    Feb 08, 2021, 8:59 pm IST

    சூளகிரி கிழக்கு ஒன்றிய எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் எஸ்.ஆர். சம்பங்கி அதிமுகவில் இருந்து நீக்கம். அதிமுக கொடி கட்டிய காரை சசிகலாவுக்கு கொடுத்ததால் சூளகிரி சம்பங்கி அதிமுகவில் இருந்து நீக்கம்
    Feb 08, 2021, 8:49 pm IST

    செம்பரம்பாக்கத்தில் அமமுகவினரின் வாகனங்களை போலீஸ் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு
    Feb 08, 2021, 7:39 pm IST

    ட்ரோனில் சசிகலா பட பதாகையை பறக்கவிட்டு அளிக்கப்பட்ட வரவேற்பு
    Feb 08, 2021, 7:30 pm IST

    வாணியம்பாடி டோல்கேட் பகுதியில் சசிகலா பேசியது அறிக்கையாக வெளியிடப்பட்டுள்ளது. அறிக்கை:
    Feb 08, 2021, 6:08 pm IST

    கொடியை பயன்படுத்தியதற்காக அமைச்சர்கள் என் மீது புகார் கொடுத்தது அவர்கள் பயத்தை காட்டுகிறது- சசிகலா
    Feb 08, 2021, 5:58 pm IST

    தொண்டர்களுக்கும், தமிழக மக்களுக்கும் நான் அடிமை- சசிகலா. அடக்குமுறைக்கு நான் என்றும் அடிபணியமாட்டேன்- சசிகலா
    Feb 08, 2021, 5:58 pm IST

    கழகம் எத்தனையோ முறை சோதனைகளை சந்தித்திருக்கிறது - சசிகலா. பீனிக்ஸ் பறவை போல அதிமுக மீண்டு வந்திருக்கிறது- சசிகலா. புரட்சித் தலைவி வழி வந்த ஒரு தாய் பிள்ளைகள் ஒற்றுமையோடு இணைந்து செயல்படுவதே என் விருப்பம்- சசிகலா
    Feb 08, 2021, 5:57 pm IST

    4 ஆண்டுக்கு சிறைவாசத்துக்கு பின் முதல் பிரஸ் மீட்டிலேயே சசிகலா மிரட்டல் - இனி ஒரே பரபரப்புதான்
    Feb 08, 2021, 5:51 pm IST

    மக்களை மிக விரைவில் சந்திப்பேன் - சசிகலா. 4 ஆண்டு சிறைவாசத்துக்கு பின் செய்தியாளர்களை சந்தித்தார் சசிகலா.
    Feb 08, 2021, 5:51 pm IST

    அதிமுக தலைமை அலுவலகத்துக்கு செல்வீர்களா? என்ற கேள்விக்கு பொறுத்திருந்து பாருங்கள் என சசிகலா பதில்
    Feb 08, 2021, 5:49 pm IST

    ஜெ. நினைவிடத்தை மூடியது எதை காட்டுகிறது என்பதை தமிழக மக்களுக்கு நன்றாக தெரியும்- சசிகலா
    Feb 08, 2021, 5:48 pm IST

    நிச்சயமாக தீவிர அரசியலில் தொடர்ந்து ஈடுபடுவேன் - சசிகலா
    Feb 08, 2021, 5:48 pm IST

    எம்ஜிஆர் பாடலை சுட்டிக்காட்டி சசிகலா காரில் அமர்ந்தபடியே பேசினார் சசிகலா
    Feb 08, 2021, 5:48 pm IST

    அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் வளர்க என சசிகலா முழக்கம்
    Feb 08, 2021, 5:48 pm IST

    தமிழ் பண்புக்கு நான் அடிமை- கொள்கைக்கு நான் அடிமை- சசிகலா
    Feb 08, 2021, 5:47 pm IST

    அதிமுகவுக்கு சோதனை வந்த போது பீனிக்ஸ் பறவையாக எழுந்து வந்தோம்- சசிகலா. அனைவரும் ஒற்றுமையோடு இணைந்து செயல்படுவோம்- சசிகலா.
    Feb 08, 2021, 5:42 pm IST

    வாணியம்பாடி டோல்கேட் அருகே செய்தியாளர்களை சந்திக்கிறார் சசிகலா
    Feb 08, 2021, 5:41 pm IST

    வாணியம்பாடி அருகே சசிகலா செய்தியாளர்களை சந்திக்கிறார்
    Feb 08, 2021, 5:16 pm IST

    கிருஷ்ணகிரி ஆவின் பாலகம் அருகே சசிகலாவுக்கு மிக பிரம்மாண்ட வரவேற்பு
    Feb 08, 2021, 3:56 pm IST

    சசிகலா வாகனம் வரும் நிலையில் சென்னை- பெங்களூரு நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு
    Feb 08, 2021, 2:29 pm IST

    சுதாகரன், இளவரசியின் மேலும் சில சொத்துகள் தமிழக அரசால் பறிமுதல்
    Feb 08, 2021, 2:10 pm IST

    ஸ்டாலின்-டிடிவி தினகரன் இணைந்து செயல்படுகின்றனர். ஸ்டாலினின் பி டீம்தான், சசிகலா அணி- ஜெயக்குமார் பேட்டி.
    Feb 08, 2021, 2:00 pm IST

    அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்தினால் சட்ட விரோதம். வழக்கு போட்டாலே கட்சிக்கு யாரும் உரிமை கோரிவிட முடியாது. அதிமுகவில் சில எட்டப்பன்கள் இருக்கிறார்கள்- அமைச்சர் ஜெயக்குமார்.
    Feb 08, 2021, 1:06 pm IST

    3வது முறையாக வாகனத்தை மாற்றினார் சசிகலா. தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் வேன் வாகனத்தில் ஏறியுள்ளார் சசிகலா.
    READ MORE

    VK Sasikala Return to Tamil Nadu Live Updates in Tamil
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+