ஸ்ட்ரைட்டா களத்துக்கு வந்த சசிகலா.. மக்களை சந்தித்து நிவாரண உதவிகள்.. அனலடிக்கும் தி.நகர்
தி நகர் பகுதியில் சசிகலா நிவாரண உதவிகளை வழங்கினார்
சென்னை: தி, நகரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சசிகலா நேரில் ஆறுதல் தெரிவித்துள்ளார்.. மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் நிவாரண உதவிகளை வழங்கினார். இத்தனை நாளும் பொது மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் மட்டுமே கலந்து கொண்டு வந்த நிலையில், முதல்முறையாக மக்களை நேரடியாகவே சந்திக்க களமிறங்கிவிட்டதால், சசிகலா ஆதரவாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
Recommended Video
வடகிழக்கு பருவமழை கொட்டி வருகிறது.. இதனால் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது.. இதில் சென்னை அதிகமாக பாதிப்புக்கு உள்ளாகியது.
இதையடுத்து மழை, வெள்ள நீர் பாதிப்புகளை சரி செய்யும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.. மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள், காவல்துறை, தன்னார்வலர்கள் என அனைத்து தரப்பினருமே மீட்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

எடப்பாடி பழனிசாமி
இந்த 5 நாட்களும், வெள்ள பாதிப்பு பகுதிகள் அனைத்தையும் முதல்வர் ஸ்டாலின் நேரடியாகவே பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்... அதேபோல 2 நாட்களுக்கு டெல்டா மாவட்டங்களிலும் ஆய்வு செய்து வருகிறார்... அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் போன்றோர் களமிறங்கவும், அதிமுகவும் தன் பங்குக்கு களமிறங்கி மீட்பு நடவடிக்கையில் இறங்கி வருகிறது.. எடப்பாடி பழனிசாமியும் நேரடியாகவே ஆய்வு செய்தார்.

ஓபிஎஸ்
இன்றும், கொட்டிவாக்கம், தரமணி, வேளச்சேரி, தேனாம்பேட்டை, மயிலாப்பூர் தெப்பக்குளம், அருந்ததியர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழைவெள்ள பாதிப்பை ஆய்வு செய்து, எடப்பாடி பழனிசாமி நலவுதவிகளை வழங்கவுள்ளார். இதேபோல் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் சைதாப்பேட்டை, கோட்டூர்புரம், விருகம்பாக்கம், வில்லிவாக்கம் உள்ளிட்ட மழை தேங்கிய இடங்களில் நேரில் ஆய்வு செய்தார். மற்றொரு பக்கம் பாஜகவின் அண்ணாமலை உட்பட தேமுதிக தலைவர்களும் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர்.

நிதியுதவி
இந்நிலையில்தான், சசிகலாவும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட போவதாக செய்திகள் வெளியானது.. ஏற்கனவே மழை வெள்ளத்தினால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து மக்களை காப்பாற்ற தேவையான அனைத்து முன்னேற்பாடுகளையும் தயார் நிலையில் இருக்குமாறு வைத்துக்கொள்ள வேண்டும் என்றும், கனமழையின் காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தகுந்த இழப்பீடு வழங்கவேண்டும் என்றும் திமுக அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார் சசிகலா..

நிவாரணம்
இந்நிலையில், நேரடியாகவே சசிகலா களமிறங்கி உள்ளார்... தென்சென்னையில் தி.நகர் கிரியப்பா சாலையில் தொடங்கி, கோட்டூர்புரம், சைதாப்பேட்டை, அசோக் நகர், விருகம்பாக்கம் பகுதிகளில் பார்வையிட்டு வருகிறார். சசிகலா. மழை வெள்ள நீரால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு ஆறுதல் தெரிவித்த பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளையும் வழங்கி வருகிறார்.. இது அதிமுக மேலிடத்துக்கு கலக்கத்தை தந்து வருகிறது.

அறிக்கை
அதுமட்டுமல்ல, திமுக அரசுக்கு வேண்டுகோள் விடுத்து அறிக்கை விடுத்திருந்த நிலையில், மத்திய அரசுக்கும் கோரிக்கை விடுத்துள்ளார்.. தமிழகத்தில் தத்தளிக்கும் மக்களை காப்பாற்ற மத்திய அரசு நிதி கொடுக்க வேண்டும் என்று சசிகலா வலியுறுத்தியுள்ளார்... மறுபடியும் இதுபோன்று நடக்காதவாறு அரசு பார்த்து கொள்ள வேண்டும் என்றும், மத்திய அரசு தமிழகத்திற்கு விரைவில் வெள்ள நிவாரண நிதியை தர வேண்டும் என்றும் சசிகலா கேட்டுக் கொண்டுள்ளார். முதல்முறையாக சசிகலா நேரடியாகவே களமிறங்கி உள்ளதால் இது அவரது ஆதரவாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications