அரண்டு போன ரஷ்யா.. இந்தியாவா இப்படி? அதுவும் மோடியா? ஜி 20ல் நடந்த சம்பவத்தால் ஒரே பரபரப்புதான்
சென்னை: ஜி 20 மாநாட்டில் நேற்று எடுக்கப்பட்ட சில முடிவுகள் ரஷ்யாவை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளதாக உலக அரசியல் விவாதங்கள் தெரிவிக்கின்றன. ஜி 20 மாநாடு விறுவிறுப்பாக நடந்துகொண்டு இருக்கிறது. நேற்று நடந்த கூட்டத்தில் பல்வேறு அதிரடி முடிவுகள் எடுக்கப்பட்டு உள்ளன.
அதிகாரப்பூர்வ G20 இணையதளத்தின்படி, 18வது G20 உச்சி மாநாட்டின் தீம் "வசுதைவ குடும்பகம்". இது "ஒரே பூமி, ஒரு குடும்பம், ஒரு எதிர்காலம்" என்று மொழிபெயர்க்கப்படும் சமஸ்கிருத சொற்றொடர் ஆகும். பழங்கால சமஸ்கிருத இலக்கியங்களில், குறிப்பாக மகா உபநிடதத்தில் இந்த சொற்றொடர் இருந்தது. மனிதர்கள், தாவரங்கள் மற்றும் நுண்ணுயிரிகள் உட்பட அனைத்து உயிர்களின் மதிப்பையும், பூமி மற்றும் பரந்த பிரபஞ்சத்தில் நாம் எல்லோரும் ஒன்றோடொன்று இணைந்திருப்பதையும் உறுதிப்படுத்துகிறது. இதை அடிப்படையாக வைத்து இந்த கூட்டம் நடக்க உள்ளது.

இந்த ஜி 20 உறுப்பினர்கள் உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 85 சதவீதத்தையும், உலகளாவிய வர்த்தகத்தில் 75 சதவீதத்திற்கும் மேல் மற்றும் உலக மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.
ஜி20 டெல்லி உச்சி மாநாடு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறுகிறது. ஜி 20 குழுவிற்கு தற்போது இந்தியா தலைமை வகிக்கிறது. இந்தியாவின் தலைமை பதவி 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 1 ஆம் தேதி தொடங்கியது. G20 என்பது 19 நாடுகள் மற்றும் ஐரோப்பா ஒன்றியத்தை உள்ளடக்கியது (அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், கொரியா குடியரசு, மெக்ஸிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, துருக்கி , யுனைடெட் கிங்டம் மற்றும் யுனைடெட் ஸ்டேட்ஸ்) மற்றும் ஐரோப்பிய ஒன்றியம்.
ரஷ்யா வரவில்லை: இந்த மாநாட்டிற்கு ரஷ்ய அதிபர் புடின் வரவில்லை. அவரின் இந்த முடிவு கடுமையான விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. ஏனென்றால் இந்தியாவும் ரஷ்யாவும் பனிப்போர் கால நண்பர்கள். பல உலக விஷயங்களில் ஒற்றுமையாக இருந்த நாடுகள் இரண்டும்.
1971 இந்தியா பாகிஸ்தான் போரின் போது இந்தியாவை அமெரிக்கா மிரட்டிய போது இந்தியாவிற்கு உறுதுணையாக படைகளை அனுப்பியது ரஷ்யாதான். வங்காள விரிகுடாவிற்கு இந்தியாவை அச்சுறுத்தும் விதமாக போர்க்கப்பலை அமெரிக்கா அனுப்பியதை அடுத்து, சோவியத் யூனியன் டெல்லியின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக நாசகார போர் கப்பல்களை பதிலுக்கு அனுப்பி நம்மை காத்தது.
அதேபோல் இந்தியா தனது பாதுகாப்பு ஆயுதங்கள், தளவாடங்களுக்கு ரஷ்யாவை நம்பித்தான் உள்ளது. அதேபோல் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலில் பல்வேறு நடவடிக்கைகளில் இந்தியாவை பாதுகாக்கவும் ரஷ்யாவின் உறவு அவசியமாக உள்ளது. இதற்கு பதிலுக்கு, 1979 இல் ஆப்கானிஸ்தான் மீதான சோவியத் படையெடுப்பை பாதுகாத்த ஒரே தெற்காசிய நாடு இந்தியா என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதேபோல் இந்தியா மீது அணு ஆயுத சோதனைக்கு பின் பொருளாதார தடை விதிக்கப்பட்டது. அப்போது நமக்கு உதவியது ரஷ்யா மட்டுமே. முக்கியமாக விண்வெளி உபகரணங்கள், கிரையோஜெனிக் எஞ்சின் போன்றவற்றை வழங்கியது ரஷ்யா மட்டுமே ஆகும். இப்போது ரஷ்யா போரிலும் கூட மேற்கு நாடுகள் எல்லாம் பிரஷர் கொடுத்தும் கூட ரஷ்யாவை இந்தியா கண்டிக்கவில்லை.
அதோடு ரஷ்யாவிடம் இருந்து குறைந்த விலைக்கு கச்சா எண்ணெய் இறக்குமதியையும் இந்தியா தொடர்ந்து மேற்கொண்டது. இதெல்லாம் ரஷ்யாவுடன் - இந்தியா நெருக்கமாக இருந்ததற்கான ஆதாரங்கள். ஆனால் இத்தனை இருந்தும் கூட, டெல்லியில் நடக்கும் ஜி 20 மாநாட்டிற்கு ரஷ்ய அதிபர் புடின் வரவில்லை. அவரின் இந்த முடிவு கடுமையான விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
இதை பலரும் இந்தியா - ரஷ்யா இடையிலான உறவில் விரிசல் என்று கூறுகிறார்கள். ஆனால் ரஷ்யா இந்தியா இப்போதைக்கு பிரிந்து செல்ல வாய்ப்பில்லை. ஆனால் இரண்டு நாடுகளுக்கு இடையில் இது கண்டிப்பாக விரிசலை ஏற்படுத்தும். இந்தியா - ரஷ்யா இடையிலான உறவின் சரிவையே இது காட்டுகிறது.ரஷ்யாவின் இந்த முடிவு காரணமாக இந்தியா கொஞ்சம் கொஞ்சமாக மேற்கு உலகம் பக்கம் நெருங்கி செல்கிறதோ, ரஷ்யாவுடனான உறவை முறிக்கிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
முடிவு: இந்த நிலையில்தான் ஜி 20 மாநாட்டில் நேற்று எடுக்கப்பட்ட சில முடிவுகள் ரஷ்யாவை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளதாக உலக அரசியல் விவாதங்கள் தெரிவிக்கின்றன.
நேற்று நடந்த கூட்டத்தில் டெல்லி கூட்டறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. 20 நாடுகளின் தலைவர்களும் ஒருமித்த கருத்தோடு இந்த முடிவை எடுத்துள்ளது கவனம் பெற்றுள்ளது. ஒருமித்த முடிவோடு ஜி 20 மாநாட்டில் அறிக்கை வெளியிடுவது கவனம் பெற்றுள்ளது.

இந்தியாவிற்கான வெற்றியாக இது பார்க்கப்படுகிறது. இந்தியா - அமெரிக்கா - ஐரோப்பா பொருளாதார ஒப்பந்தம், காலநிலை மாற்றத்திற்கான அறிக்கை, உக்ரைன் - ரஷ்யா போருக்கு எதிரான அறிக்கை (ரஷ்யாவை இதில் எதிர்க்கவில்லை , பொதுவாக போர் எதிர்க்கப்பட்டு உள்ளது ) என்று பல விஷயங்களை உள்ளடக்கிய கூட்டறிக்கை ஒன்றாக வெளியிடப்பட்டது. இந்த கூட்டறிக்கை மிகப்பெரிய வெற்றியாக இந்தியாவிற்கு பார்க்கப்படுகிறது.
இதில் ரஷ்யா போர் பற்றி பேசுகையில் "உக்ரைனில் நடக்கும் போர்" என்றே பேச்சுக்கு தலைப்பு வைக்கப்பட்டது. கடந்த பாளி ஜி 20 கூட்டத்தில் உக்ரைனுக்கு எதிரான போர் என்ற தலைப்பில் விவாதம் செய்யப்பட்டது. ஆனால் இந்த முறை "உக்ரைனில் நடக்கும் போர்" என்று தலைப்பு வைக்கப்பட்டது ஒரு வகையில் ரஷ்யாவுடன் உறவை காக்க இந்தியா எடுத்த நிலைப்பாடாக இருக்கலாம். ஆனால் இதே கூட்டத்தில் நேற்று மோடி.. போரை முடிவிற்கு கொண்டு வர வேண்டும். இனியும் உலக நாடுகள் போர் செய்ய கூடாது என்று கூறினார்.
ரஷ்ய அதிபர் இல்லாத மேடையில் உக்ரைன் போரை பற்றி மோடி பேசியது, அதற்கு எதிராக கூட்டறிக்கை கொண்டு வந்தது எல்லாம் ரஷ்யாவை கடுமையான அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கும் என்கிறார்கள். முக்கியமாக கண்டிப்பாக மோடி இதை எதிர்பார்த்து இருக்க மாட்டார்.
குழப்பமான அரசியல்: அதே சமயம் சமீபத்தில் தென்னாப்பிரிக்காவில் நடந்த பிரிக்ஸ் மாநாடு காரணமாக அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு உலக நாடுகள் மிகப்பெரிய அளவில் அதிர்ச்சி அடைந்து உள்ளன. இதில் ரஷ்யாவுடன் இந்தியா நெருக்கமாக காணப்பட்டது. இதனால் கூட உடனடியாக இன்னொரு மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டாம் என்று ஜி 20 மாநாட்டை புடின் புறக்கணித்து இருக்கலாம்.
பிரிக்ஸ்: பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளை கொண்ட வலுவான கூட்டமைப்புதான் பிரிக்ஸ். இந்த பிரிக்ஸ் நாடுகளின் கூட்டமைப்பு வருடா வருடம் நடப்பது வழக்கம். கடந்த 3 வருடங்களாக ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட கூட்டம் இந்த முறை நேரடியாக தென்னாப்பிரிக்காவில் நடந்தது
இந்த கூட்டத்தில், பிரிக்ஸ் கூட்டமைப்பில் 6 புதிய நாடுகளை சேர்த்துக்கொள்ள ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது. அர்ஜென்டினா, ஈரான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா, எத்தியோப்பியா மற்றும் எகிப்து ஆகிய நாடுகளை இந்த கூட்டமைப்பில் சேர்த்துக்கொள்ள உள்ளது.
தென்னாப்பிரிக்காவின் புதிய அதிபர் சிரில் ராமபோசா இன்று பிரிக்ஸ் கூட்டத்திற்கு பின் உரையாற்றினார். இன்று நடந்த உச்சிமாநாட்டின் முடிவுகளை அறிவிக்கும் போது புதிய உறுப்பினர் நாடுகளின் பெயர்களை அறிவித்தார்.
பிரிக்ஸ் நாடுகளின் பலத்தை அதிகரிக்கும் விதமாகவும், கூட்டமைப்பை பெரிதாக்கும் விதமாகவும் இந்த உறுப்பினர் சேர்க்கை நடந்து உள்ளது. பிரிக்ஸ் நாடுகள்தான் ஏற்கனவே உலகின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. உதாரணமாக ரஷ்யா, சீனா, இந்தியா ஆகியவைதான் உலக பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்தியா மாறும்: எண்ணெய் வள நாடுகள் இந்த குழுவில் இணைவது பொருளாதார ரீதியாக இந்தியாவிற்கு. உதவும் அதேபோல் பாகிஸ்தான் இதில் சேர்த்துக்கொள்ளப்படாது என்று எடுக்கப்பட்ட முடிவும் இந்தியாவிற்கு சாதகமாக மாறி உள்ளது.
தற்போது எண்ணெய் வளம் நிரம்பிய நாடுகளை பிரிக்ஸ் கூட்டமைப்பு தங்கள் குழுவில் சேர்த்து உள்ளது. இதன் மூலம் உலகின் ஒன்பது பெரிய எண்ணெய் உற்பத்தியாளர்களில் ஆறு நாடுகள் பிரிக்ஸ் குழுவில் அமைப்பில் உறுப்பினர்களாக இருக்கும். இதன் மூலம் உலகின் எண்ணெய் வளத்தை பிரிக்ஸ் நாடுகள் கட்டுப்படுத்த முடியும். இந்தியாவிற்கும் இது சாதகமாக முடியும்.
கரன்சி: இதில் பிரிக்ஸ் கரன்சி குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை என்றாலும் ஆலோசனை செய்யப்பட்டது. பிரிக்ஸ் நாடுகள் எல்லாம் இனி பிரிக்ஸ் குழுவின் புதிய கரன்சியை பயன்படுத்துவது பற்றி ஆலோசிக்கப்பட்டது. இதில் கவனிக்க வேண்டியது எண்ணெய் வள நாடுகள் இப்போது டாலரை பயன்படுத்துகின்றன. பிரிக்ஸ் கரன்சி குழுவில் அவை சேருவதால் அவையும் டாலரை துறந்துவிட்டு பிரிக்ஸ் கரன்சிக்கு மாறும். இது அமெரிக்க டாலரின் வீழ்ச்சியாக பார்க்கப்படும்.
இதனால் உலக அரசியலே மாறும். எண்ணெய் பொருட்கள் டாலருக்கு பதிலாக பிரிக்ஸ் கரன்சியில் வாங்கப்படும். முக்கியமாக சீனா, ரஷ்யாவிற்கு எழுச்சியை இது கொடுக்கும் என்பதால் அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, ஐரோப்பா அதிர்ச்சியில் உறைந்து உள்ளன. இந்த கூட்டமைப்பில் பாகிஸ்தானை சேர்க்க சீனா அழுத்தம் கொடுத்தது.
எண்ணெய் வள ரீதியாக பிரிக்ஸ் நாடுகள் உலக நாடுகளை கட்டுப்படுத்துவதோடு பொருளாதார ரீதியாகவும் உலக நாடுகளை பிரிக்ஸ் நாடுகள் இனி கட்டுப்படுத்தும். முக்கியமாக பிரிக்ஸ் நாடுகளின் இந்த முடிவு மேற்கு உலக நாடுகளுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
அமெரிக்கா அதிர்ச்சி: இதில் தொடக்கத்தில் பிரிக்ஸ் கூட்டமைப்பை விரிவாக்குவதையே இந்தியா எதிர்த்தது. ஆனால் அதன்பின் இந்தியா தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டது. கூடுதல் நாடுகள் இருக்கும் பட்சத்தில் இந்தியாவிற்கு அது வலிமை சேர்க்கும் என்பதால் இந்தியா தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டது. இந்த நிலைப்பாடு காரணமாக அமெரிக்காவும் அதிர்ச்சில் உள்ளது. .
-
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
செந்தில் பாலாஜி பெயரை சொல்லும்போது ‘டங் ஸ்லிப்’.. கோவை தெற்கில் உளறிய பியூஷ் கோயல் -
மும்பை ரெஸ்டாரண்டில் நடந்த சந்திப்பு.. சமாதானமான ஸ்மிருதி மந்தனா குடும்பம்.. மீண்டும் திருமணம்? -
ஜனநாயகன் ரூ.500 கோடி பட்ஜெட் படம்! HD பிரிண்ட்டில் வெளியானது எப்படி? தமிழக டிஜிபியிடம் புகார் -
நம்பர் 5.. அடித்து சொல்லும் சர்வேக்கள்! திமுக+ 180 இடங்களை தாண்டுகிறது! அதிமுக ஓவர்? முக்கிய கணிப்பு












Click it and Unblock the Notifications