சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

98.5 பாரன்ஹீட் இருந்தால் திருப்பி அனுப்பப்படும் வாக்காளர்கள்.. மாலை 6 மணிக்கு வாய்ப்பு!

Google Oneindia Tamil News

சென்னை: தெர்மல் ஸ்கேனர் பரிசோதனையில் உடல் வெப்பநிலை அதிகமாக இருந்தால் வாக்காளர்கள் திருப்பி அனுப்பப்படுகிறார்கள்.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தமிழக சட்டசபைத் தேர்தல் இன்று நடைபெறுகிறது. 234 தொகுதிகளிலும் வாக்குப் பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகமாக இருப்பதால் அனைத்து வாக்குச் சாவடி மையங்களிலும் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் செய்யப்படுகின்றன.

இந்தியாவில் முதல்முறையாக வாக்குச் சாவடிகளில் சுகாதார பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள். அதன்படி, 13 வகையான பாதுகாப்பு உபகரணங்கள் அடங்கிய பெட்டகத்தை அந்தந்த மாவட்டத்துக்கு சுகாதாரத்துறை அனுப்பி உள்ளது.

ஆளும் கட்சிக்கு எதிராக மக்கள் மனநிலை இருப்பதால்தான் எழுச்சியாக ஓட்டு போடுகிறார்கள்.. ஸ்டாலின் பேட்டிஆளும் கட்சிக்கு எதிராக மக்கள் மனநிலை இருப்பதால்தான் எழுச்சியாக ஓட்டு போடுகிறார்கள்.. ஸ்டாலின் பேட்டி

கையுறை

கையுறை

அதில் தெர்மல் ஸ்கேனர், சானிடைசர், கையுறை உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. வாக்குச் சாவடிக்கு வரும் வாக்காளர்கள் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தெர்மல் ஸ்கேனர் மூலம் அனைத்து வாக்காளர்களையும் பரிசோதித்த பின்னரே அவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படவுள்ளார்கள்.

தயார் நிலை

தயார் நிலை

உடல் வெப்ப பரிசோதனை செய்யும் போது வாக்காளர்களுக்கு அதிகளவில் உடல் வெப்பம் இருந்தால் அந்த நேரத்தில் அவருக்கு வாக்களிக்க அனுமதி மறுக்கப்பட்டு மீண்டும் மாலை 6 மணிக்கு மேல் வாக்களிக்க அனுமதி வழங்கப்படுகிறது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி உயரதிகாரிகள் கூறுகையில் தேர்தலை முன்னிட்டு அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.

வாக்காளர்கள்

வாக்காளர்கள்

வாக்களிக்க வரும்போது அனைத்து வாக்காளர்களும் முகக் கவசம் அணிந்து வர வேண்டும். அவர்களுக்கு ஒரு முறை பயன்படுத்தக் கூடிய கையுறை வாக்குச் சாவடி மையத்தில் வழங்கப்படுகிறது. தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்ப பரிசோதனை செய்யும்போது, 98.5 பாரன்ஹீட்டுக்கு அதிகமாக வெப்பநிலை பதிவானால், அந்த வாக்களருக்கு டோக்கன் கொடுக்கப்பட்டு, வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவார்.

மாலை 6 மணிக்கு அனுமதி

மாலை 6 மணிக்கு அனுமதி

பின்னர் கொரோனா நோயாளிகளுக்கு வாக்களிக்க ஒதுக்கப்பட்டிருக்கும் மாலை 6 மணி முதல் 7 மணி வரையிலான நேரத்தில் உடல் வெப்பம் அதிகமாக இருந்த வாக்காளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களுடன் வாக்களிக்க வாய்ப்பு வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

English summary
Voters have been sent back to home if their temperature is 98.5 F and they will be allowed after 6pm.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X