Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அண்ணாமலை பேரை ஏன் சொல்றீங்க? அலிஷா அப்துல்லாவுக்கு போன போன்.. அச்சச்சோ உண்மையா? "அப்படியா" நடந்தது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை டூ திருச்சி செல்லும் விமான பயணத்தில் அண்ணாமலை எமர்ஜென்சி கேட்டை திறந்து மூடி இருக்கிறார் என்று தகவல், டிசம்பர் 10ம் தேதி நடந்த இந்த சம்பவத்தை மத்திய அரசு அதிகாரிகள் மூடி மறைத்துவிட்டனர், தமிழ்நாடு அரசு அதிகாரிகள் இந்த விஷயத்தை கோட்டை விட்டுவிட்டனர், என்று மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் ஒன் இந்தியா அரசியலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

சமீபத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி பாஜக தலைவர் பற்றி ஒரு போஸ்ட் செய்து இருந்தார். அதில், கடந்த 10 ஆம் தேதி 'போட்டோஷாப்' கட்சியின் மாநிலத் தலைவரும், இளைஞரணியின் தேசியத் தலைவரும் விமானத்தில் கிளம்பும் போது பொறுப்பே இல்லாமல் விமானத்தின் 'எமர்ஜென்சி' கதவை திறந்து விளையாடி இருக்கிறார்கள்.

விதிமுறைகளின்படி பயணிகள் விமானத்தில் இருந்து இறக்கி மீண்டும் சோதனை செய்யப்பட்டு நோகடிக்கப்பட்டிருக்கிறார்கள். விமானம் 3 மணி நேர தாமதம் ஆகியிருக்கிறது.

செந்தில் பாலாஜி

செந்தில் பாலாஜி

மன்னிப்பு கடிதம் எழுதுவதே பரம்பரை வழக்கம் என்பதால், அன்றும் மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்திருக்கிறார்கள். ஊடகங்களில் இந்தச் செய்தி ஏன் வரவில்லை?" என்று குறிப்பிட்டு உள்ளார். இந்த போஸ்டில் விமான கதவை திறந்தது யார் என்று செந்தில் பாலாஜி குறிப்பிடவில்லை. வெறுமனே கடந்த 10 ஆம் தேதி 'போட்டோஷாப்' கட்சியின் மாநிலத் தலைவர் என்று மட்டுமே குறிப்பிட்டு இருக்கிறார். இதையடுத்து பலரும் இது அண்ணாமலைதான் என்று போஸ்ட் செய்துள்ளனர். அண்ணாமலைதான் விமானத்தின் அவசர கதவை திறந்துவிட்டதாக கமெண்டில் பதில் அளித்து இருந்தனர். திமுகவை சேர்ந்த பலரும் அண்ணாமலைக்கு எதிராக போஸ்ட் செய்து இருந்தனர். ஆனால் பாஜகவினர் யாரும் இதற்கு பதில் தரவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் ஒன் இந்தியா அரசியலுக்கு பேட்டி அளித்துள்ளார். அவரின் பேட்டி பின்வருமாறு..

 எமர்ஜென்சி கதவு

எமர்ஜென்சி கதவு

அவரின் பேட்டி பின்வருமாறு.. விமானத்தில் கதவை திறந்து கூட சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். சென்னை டூ திருச்சி செல்லும் விமான பயணத்தில் அண்ணாமலை எமர்ஜென்சி கேட்டை திறந்து மூடி இருக்கிறார் என்று தகவல். டிசம்பர் 10ம் தேதி நடந்த இந்த சம்பவத்தை மத்திய அரசு அதிகாரிகள் மூடி மறைத்துவிட்டனர். தமிழ்நாடு அரசு அதிகாரிகள் இந்த விஷயத்தை கோட்டை விட்டுவிட்டனர். இதில் மீடியாவும் மிஸ் செய்துவிட்டனர். இந்த விமானம் ஏன் தாமதம் என்பதை மீடியா கண்டுபிடித்து இருக்க வேண்டும். பயணிகளை இறக்கி 3 மணி நேரம் கழித்து ஏற்றி இருக்கிறார்கள்.

ரபேல்

ரபேல்

அப்போதே இதை மீடியா செய்து இருந்தால் உண்மை வெளியாகி இருக்கும். ஒரு குழந்தை கூட இந்த தவறை செய்யாது. ஒரு குடிகாரன் கூட இப்படி செய்ய மாட்டார். செந்தில் பாலாஜி சொன்ன புகாரை யாரவது மறுத்து பேசினார்களா? செந்தில் பாலாஜி செய்த ட்விட்டில் அலிஷா அப்துல்லா பதில் அளித்தார். அதில்.. அண்ணாமலை பற்றி இப்படி பேசாதீங்க என்று அலிஷா அப்துல்லா கூறியுள்ளார். உடனே அலிஷா அப்துல்லாவிற்கு அண்ணாமலை வார் ரூமில் இருந்து போன் போய் இருக்கிறது. நாங்களே இந்த விஷயத்தில் அண்ணாமலை பெயரை சொல்லாமல் இருக்கிறோம். நீங்கள் இப்படி செய்யலாமா என்று கேட்டுள்ளனர். அண்ணாமலை பெயரை இதில் சொல்ல கூடாது என்றுள்ளனர்.

அலிஷா

அலிஷா

ரபேல், விமான கதவு, வீடியோ, ஆடியோ என்று எல்லாம் அண்ணாமலைக்கு எதிராக திரும்பி உள்ளது. அரசியலை இப்போதுதான் அண்ணாமலை தெரிந்து கொண்டு இருக்கிறார். நாம் வாய்க்கு வந்ததை எல்லாம் பேச முடியாது என்று அண்ணாமலை உணர்ந்து கொண்டார். அண்ணாமலை மீடியாவை சமாளிக்க நினைத்தால், அவர் அமபலப்பட்டு விடுவார். அவர் மீடியாவை கிண்டல் செய்வது, சமாளித்துவிடலாம் என்று நினைப்பது தவறு. அவர் நாகரீக அரசியல் செய்ய கற்றுக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் அவருக்குத்தான் சிக்கலாகி முடியும்.. பாஜகவில் எந்த தலைவர் வலிமையாக இருக்கிறார் சொல்லுங்கள்.

மிரட்டல்

மிரட்டல்

தமிழக பாஜகவிற்கு பணம் எங்கிருந்து வருகிறது. மாவட்ட செயலாளர்கள் வலிமையாக இல்லாத போது தமிழ்கா பாஜகவிற்கு எங்கிருந்து வருமானம் வருகிறது. பாஜகவினர் ஒரு ஹோட்டல் அதிபரை மிரட்டி 25 லட்சம் வாங்கியதாக ஒரு செய்தி வெளியானது. அந்த ஊடக செய்திக்கு பாஜக இன்னும் மறுப்பு தெரிவிக்கவில்லையே? பாஜக வரும் தேர்தலில் அடையும் தேர்தல் மோசமாக இருக்கும். கட்சி மிக மோசமாக தோல்வி அடைய போகிறது என்று பொன் ராதாகிருஷ்ணன் கட்சி கூட்டத்தில் பேசி இருக்கிறார். அவரின் எச்சரிக்கையை முக்கியமாக பார்க்க வேண்டும். கட்சி வலிமையாக இல்லை என்று பொன்னார் பேசி இருக்கிறார். தமிழ்நாட்டில் பாஜகவின் பூத் கமிட்டிகள் வளரவில்லை. தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வருமா வராதா என்று தெரியாமலே கட்சிக்காக 20 - 30 ஆண்டுகளாக சீனியர்கள் வேலை பார்த்தனர். அந்த சீனியர்களை யாரும் மதிப்பது இல்லை. அந்த சீனியர்களே இப்போது கட்சிக்கே ஓட்டு போட மாட்டார்கள் என்று பொன் ராதாகிருஷ்ணன் கட்சி கூட்டத்திலேயே சொல்லி இருக்கிறார். இதை வைத்துக்கொண்டு அண்ணாமலை 25 இடங்களில் வெல்வேன் என்கிறார். சீனியரை மதிக்காமல் அவர் எப்படி வெல்ல முடியும் என்பதை அண்ணாமலைதான் சொல்ல வேண்டும், என்று மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் ஒன் இந்தியா அரசியலுக்கு தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+