"பெனின்சுலா" ரிப்போர்ட்.. முதல்வர் டோஸ் விட்டதற்கு பின் இப்படி ஒரு காரணம் இருக்கா! நடுங்கும் தலைகள்
சென்னை: முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் மாவட்ட செயலாளர்களிடம் கண்டிப்புடன் சில விஷயங்களை பேசியதற்கு பின் முக்கியமான ரிப்போர்ட் ஒன்றுதான் காரணமாக இருந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அறிவாலய தரப்பில் விசாரித்ததில் பல்வேறு முக்கிய விஷயங்களை தெரிவித்தனர்.
கடந்த 28ம் தேதி முதல்வர் மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் இருக்கும் "கலைஞர் அரங்கத்தில்" இந்த கூட்டம் நடைபெற்றது.
பல்வேறு முக்கியமான விஷயங்கள் குறித்தும், உட்கட்சி தேர்தல் குறித்தும், தொண்டர்களை மதிப்பது குறித்தும் முதல்வர் ஸ்டாலின் இந்த கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகளிடம் பேசி இருக்கிறார்.

என்ன சொன்னார்?
இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகள் சிலரை முதல்வர் ஸ்டாலின் கண்டித்ததாக நாம் முன்பே குறிப்பிட்டு இருந்தோம். அதன்படி மாவட்ட செயலாளர்கள் - அமைச்சர்கள் சேர்ந்து செயல்பட வேண்டும். இவர்களுக்கு இடையில் நல்ல உறவு இருக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் இந்த கூட்டத்தில் இருக்கிறார். உட்கட்சி தேர்தலில் சிலர் செய்த தவறுகள் பற்றி எனக்கு தகவல் வந்துள்ளது.

லிஸ்ட் இருக்கிறது
தவறை செய்தவர்கள் யார் யார் என்று எனக்கு தெரியும். அவர்களை பற்றி எனக்கு தெரியாது என்று நினைக்க வேண்டாம். என்னிடம் லிஸ்ட் இருக்கிறது. தவறு செய்தவர்கள் யார் என்று அவர்களின் மனசாட்சிக்கும் தெரியும். லிஸ்டை கவனித்து வருகிறேன். அவர்கள் மீது விசாரணைக்கு பின் கண்டிப்பாக நடவடிக்கை எடுப்போம். எல்லோரும் கவனமாக, நேர்மையாக செயல்படுங்கள் என்று முதல்வர் ஸ்டாலின் கண்டிப்புடன் பேசி இருக்கிறார்.

என்ன காரணம்
இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலினின் முக்கியமான ரிப்போர்ட் ஒன்றுதான் காரணமாக இருந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அறிவாலய தரப்பில் விசாரித்ததில் பல்வேறு முக்கிய விஷயங்களை தெரிவித்தனர். அதன்படி பெனின்சுலா என்ற ரிப்போர்ட் ஒன்றுதான் இந்த கண்டிப்பிற்கு காரணம். அதில் மாவட்ட செயலாளர்கள் செயல்பாடு பற்றி விளக்கமாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது. சரியாக செயல்படாத மாவட்ட செயலாளர்கள் பற்றி அதில் விளக்கமாக கூறப்பட்டுள்ளது.

தேர்தல் முறைகேடு
உட்கட்சி தேர்தலில் முறைகேடு செய்தவர்கள் பற்றியும் நிறைய தகவல்கள் அதில் இடம்பெற்றுள்ளன. இதை வைத்தே முதல்வர் ஸ்டாலின் இப்படி பேசி இருக்கிறார். உட்கட்சி தேர்தல் முடிவிற்கு பின் கட்சி ரீதியாக நிறைய மாற்றங்களை எதிர்பார்க்கலாம். நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் விதமாக மாற்றங்களை எதிர்பார்க்கலாம். அந்த வகையில் முதல் கட்டமாக இந்த ரிப்போர்ட்டை வைத்து முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கைகளை எடுக்க வாய்ப்பு உள்ளது என்று திமுக வட்டாரத்தினர் தெரிவிக்கின்றனர்.இதனால் சில மாவட்ட நிர்வாகிகள் நடவடிக்கை பாயும் என்ற நடுக்கத்தில் இருக்கிறார்களாம்.

தொண்டர்கள்
கடந்த மீட்டிங்கில் கட்சி தொண்டர்களை எப்போதும் மதியுங்கள். அவர்கள்தான் நமக்கு முக்கியம். மேலே இருப்பவர்களை விட, கீழே கட்சி பணிகளை செய்யும் தொண்டர்கள்தான் முக்கியம். தேர்தல் நேரத்தில் மட்டும் நாம் போக கூடாது என்று குறிப்பிட்டார். அதன்படி சில பாரம்பரிய திமுக தொண்டர்களின் கோரிக்கைகளை மாவட்ட செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகள் கேட்கவில்லை என்ற செய்தி முதல்வர் காதுகளுக்கு சென்று இருக்கிறதாம். இதையடுத்தே முதல்வர் ஸ்டாலின் தொண்டர்களிடம் கனிவுடன் இருக்கும்படி கூறியதாக தெரிகிறது.
-
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம் -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ!












Click it and Unblock the Notifications