ஐயய்யோ! கிளாம்பாக்கம் பேருந்து நிலையமா இது!.. கடல்னு நெனச்சோமே! 4 மணி நேரம் டிராபிக் ஜாம்!
சென்னை: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக மழை வெளுத்து வாங்கி வரும் நிலையில் சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் மழை நீர் கடல் போல் தேங்கியிருந்ததால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்குள்ளாகினர்.
வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு... இந்த சொலவடை தலைநகர் சென்னைக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும். இங்கு வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களிலிருந்தும் மக்கள் பிழைப்புக்காக இங்கு வருகிறார்கள்.

அவ்வாறு வருவோர் பண்டிகை, விடுமுறை காலங்களில் கோயம்பேடு பேருந்து நிலையம் சென்று அங்கிருந்து தங்கள் சொந்த ஊர்களுக்கு பேருந்து மூலம் செல்கிறார்கள். இதனால் பண்டிகை சமயங்களில் கோயம்பேடு பேருந்து நிலையம் மக்கள் அலையால் திக்குமுக்காடுகிறது.
இந்த மக்கள் கூட்டத்தை சமாளிப்பதற்காகவே தங்கள் சொந்த ஊருக்கு சென்று வர வசதியாக சென்னை கிளாம்பாக்கம் பகுதியில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்து நிலையம் வரும் செப்டம்பர் மாதம் பயன்பாட்டிற்கு வரும் என தெரிகிறது.
அதிமுக ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்ட இந்த பேருந்து நிலையம் பல காரணங்களால் திறக்கப்படுவது தாமதாகி விட்டது. இந்த நிலையில் அடுத்த மாதம் இந்த பேருந்து நிலையம் திறந்தால் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டம் குறையும். இந்த பேருந்து நிலையத்தில் உள்ள பஸ்களில் பயணம் செய்யும் மக்கள் பத்திரமாகவும் எளிதாகவும் தங்கள் ஊர்களுக்கு செல்வர்.
இந்த நிலையில் கிளாம்பாக்கத்தில் கட்டமைப்பு பணிகள் நடந்து வரும் நிலையில் சென்னையில் நேற்று முன் தினம் பெய்த கனமழையால் கிளாம்பாக்கத்தில் கடல் போல் தண்ணீர் தேங்கியுள்ளது. மழைநீர் கெண்டைக்கால் வரை தேங்கி இருப்பதால் 4 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
#Vandalur #kilambakkam #ChennaiRains pic.twitter.com/PMB4zttGbY
— கார்த்திக் (@krishkarthik111) August 14, 2023
இரு சக்கர வாகனங்களும் நான்கு சக்கர வாகனங்களும் தண்ணீரில் தத்தளித்தன. கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையம் கட்டுமான பணி பெரும்பாலும் முடிந்த நிலையில் அங்கு தற்போது மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடந்து வருவதால்தான் இந்த தண்ணீர் தேங்கியதாக தெரிகிறது.
மற்றபடி மழை நீர் வடிகால் அமைத்தவுடன் இந்த இடத்தில் தண்ணீர் தேங்காது என தெரிகிறது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் மீது மக்கள் அதிக எதிர்பார்ப்புகளை வைத்துள்ளார்கள். அதனால் இங்கு குறை சொல்லும் அளவுக்கு எந்த சம்பவமும் நடக்காது என்கிறார்கள். நேற்று முன் தினம் வெளுத்த மழைக்கே அதிகாலையில் பெரும்பாலான இடங்களில் முக்கிய சந்திப்புகளில் தண்ணீர் தேங்காத வண்ணம் பார்த்துக் கொண்டனர்.
-
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications