மக்கள் தீர்ப்புக்கு தலை வணங்குகிறோம்னு! இப்பவே அறிக்கை ரெடி பண்ணி வைங்க! திமுகவை அட்டாக் செய்த விஜய்

Subscribe to Oneindia Tamil

சென்னை: எப்போதும் 5 வருஷத்துக்கு ஒருமுறை இதை சொல்வாங்க.. அது என்னன்னா.. "மக்கள் தீர்ப்புக்கு தலை வணங்குகிறோம்" என்று.. அத இப்போதே ரெடி பண்ணி வச்சுக்கோங்க.. 2026 தேர்தல் முடிவு வரும் போது தேவைப்படும் என்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் திமுகவை விமர்சித்துள்ளார். கரூர் சம்பவத்துக்கு பிறகு இன்று நடந்த தவெகவின் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் விஜய் இவ்வாறு பேசினார்.

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்துக்கு பிறகு தமிழக வெற்றிக் கழகத்தின் சிற்பபு பொதுக்குழு கூட்டம் இன்று சென்னை மகாபலிபுரத்தை நடந்தது. விஜய் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் முதல்வர் வேட்பாளர் விஜய், கூட்டணி குறித்து முடிவு எடுக்க விஜய்க்கு அதிகாரம் என்பது உள்பட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

we-bow-to-the-peoples-verdict-vijay-attacks-dmk-says-get-the-statement-ready-now

திமுகவை விமர்சித்து பேசிய விஜய்

அப்போது பேசிய விஜய் 2026 சட்டமன்ற தேர்தல் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெறும் என்றும், எப்போதும் 5 வருஷத்துக்கு ஒருமுறை இதை சொல்வாங்க.. அது என்னன்னா.. "மக்கள் தீர்ப்புக்கு தலை வணங்குகிறோம்" என்று.. அத இப்போதே ரெடி பண்ணி வச்சுக்கோங்க.. 2026 தேர்தல் முடிவு வரும் போது தேவைப்படும் என திமுகவை விமர்சித்தார். விஜய் பேசியதாவது:-

என் நெஞ்சில் குடியிருக்கும் என்னுடைய தோழர்களுக்கும், தோழிகளுக்கும், தமிழக மக்களுக்கும் வணக்கம். சொல்ல முடியாத அளவு வேதனை, வலியில் இவ்வளவு நாள் நாம் அமைதியாக இருந்தோம். அப்படி அமைதியாக இருந்த நேரத்தில் நம்மை பற்றி வன்ம அரசியல் வலைகள், அர்த்தமற்ற அவதூறுகள், என நம்மை சுற்றி பின்னப்பட்டது, பரப்பப்பட்டது.

சொல்ல முடியாமல் மௌனம்

இவை அனைத்தையும் சட்டம் மற்றும் சத்தியத்தின் துணையோடு துடைத்து எறிய போகிறோம். ஆனால் அதற்கு முன் தமிழக சட்டமன்றத்தில் நமக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட ஒரு உரைக்கு, நான் நாகரீக பதிலடி கொடுக்க வேண்டும் என நினைக்கிறேன். அரசியல் செய்ய விருப்பம் இல்லை என அடிக்கடி சொல்கின்ற முதல்வர் தமிழக சட்டமன்றத்தில் பேசிய பேச்சுக்கள் எவ்வளவு வன்மத்தை கக்கி இருக்கிறார்கள் என்பதை தமிழக மக்கள் உணராமலா இருப்பார்கள்.

உச்சநீதிமன்றம் கேட்ட கேள்விகளுக்கு தமிழக அரசு சார்பில் நியமிக்கப்பட்ட அரசு வழக்கறிஞர்கள் பதில் சொல்ல முடியாமல் மௌனம் காத்தார்களே அதை தமிழக முதல்வர் மறந்துவிட்டாரா. உச்சபட்ச அதிகார மயக்கத்திலிருந்து தமிழக முதல்வர் பேசினாரோ? மனிதாபிமானம் அரசியல் அறம் மாண்பு இவை எல்லாம் எதுவுமே இல்லாமல் வெறும் பேச்சில் மட்டும் பேசிக் கொண்டு அரசியல் ஆட்டத்தை ஆட தொடங்கி விட்டார் தமிழக முதல்வர்.

உச்ச நீதிமன்றம் கேட்டது

இப்பொழுது நான் கேட்ட கேள்வி அனைத்தும் நான் கேட்கவில்லை உச்ச நீதிமன்றம் கேட்டது. இவையெல்லாம் ஏன்? எதற்கு? என முதல்வர் அவர்களுக்கு புரிகின்றதா. உச்சநீதிமன்றம் மட்டுமல்ல நிஜத்திலும் மக்களுக்கு தமிழக அரசு மீது இருக்கின்ற நம்பிக்கை முழுவதுமாக மண்ணில் புதைந்து விட்டது இதுவாவது தமிழக முதல்வர் அவர்களுக்கு புரியுதா அல்லது புரியவில்லையா..

அப்படி புரியவில்லை எனில் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் இந்த திமுக தலைமைக்கு ஆழமாகவும் அழுத்தமாகவும் மக்கள் புரிய வைப்பார்கள். அப்பொழுது கூட இவர்கள் என்ன செய்வார்கள் தெரியுமா.. 5 வருஷத்திற்கு ஒருமுறை பழக்க தோஷத்தில் ஒரு அறிக்கை வெளியிடுவார்கள். மக்கள் தீர்ப்புக்கு தலை வணங்குகிறோம் அப்படி என்று. ஒரு அறிக்கையை வெளியிட்டு அறிவாலயத்திற்குள் ஓடி ஒளிந்து கொள்வார்கள்.

2 பேருக்கு இடையே தான் போட்டி

இப்பொழுதே அந்த அறிக்கையை தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.. "மக்கள் தீர்ப்புக்கு தலை வணங்குகிறோம்" என்று. போன பொதுக்குழுவில் என்ன சொன்னேனோ.. அதேதான் மீண்டும் சொல்கிறேன்.. இயற்கையும் இறைவனும் நம் தமிழக சொந்தங்களின் வடிவங்களில் மாபெரும் சக்தியாக நம் கூட நிற்கும் பொழுது எம் மக்களுக்கான அரசியலை தடுப்பவர் எவர்?.

அதனால் தோழர்களே நமக்கு வந்திருக்கும் இந்த இடையூறு தற்காலிக இடையூறு மட்டுமே.. அதனால் அனைத்தையும் தகர்த்தெறிவோம்.. மக்களோடும் கைகோர்த்து நிற்போம்.. மக்களுடன் களத்தில் இருப்போம்.. நம் பயணத்தில் தடம் மாறவே மாட்டோம். இப்பொழுதும் சொல்கிறேன் 2026 -ல் இரண்டே இரண்டு பேருக்கு தான் போட்டியே ஒன்று டிவிகே இன்னொன்று திமுக.. இவ்வாறு அவர் பேசினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+