பார்த்தீங்களா பாஜக வெற்றியை.. இதுதான் மோடி பவர்.. குதூகலமான குஷ்பு
சென்னை: ஐந்து மாநிலங்களில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் உத்தரப்பிரதேசம், மணிப்பூர், கோவா, உத்தரகண்ட் ஆகிய 4 மாநிலங்களில் பாஜக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. இந்த வெற்றியை பாஜகவினர் கொண்டாடி வருகின்றனர். மக்கள் பாஜக உடன் இருப்பதை தேர்தல் முடிவுகள் தெளிவாகக் காட்டுகின்றன என்று குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
5 மாநில சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு துவங்கியது. தொடக்கத்திலிருந்தே உத்தரப்பிரதேச மாநிலத்தின் வாக்கு எண்ணிக்கையில் பாஜக முன்னிலை வகித்தது.
403 உறுப்பினர்களை கொண்ட உத்தரப்பிரதேசத்தில் பாஜக கூட்டணி 267 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இதன்மூலம் கிட்டத்தட்ட பாஜகவின் வெற்றி அங்கு உறுதியாகியுள்ளது. இதேபோல், 60 தொகுதிகளைக் கொண்ட மணிப்பூரில் பாஜக 31 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. 70 தொகுதிகளை கொண்ட உத்தரகண்ட் மாநிலத்தில், பாஜக 46 இடங்களிலும், காங்கிரஸ் 23 இடங்களிலும் இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. 40 தொகுதிகளைக் கொண்ட கோவாவில் பாஜக 19 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.

பாஜக ஆட்சி
சட்டசபைத் தேர்தல் நடைபெற்ற 5 மாநிலங்களில் 4ல் பாஜக ஆட்சியமைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 117 தொகுதிகளைக் கொண்ட பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி ஆட்சியை பிடிப்பது உறுதியாகியுள்ளது. பெரும்பான்மைக்கு தேவையான 59 இடங்களை தாண்டி, ஆம் ஆத்மி தனி பெரும் கட்சியாக அங்கு உருவெடுத்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆம் ஆத்மி கட்சியிடம் ஆட்சியை பறிகொடுத்து படுதோல்வியை சந்தித்துள்ளது. உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி யார் கண்களுக்கும் தென்படவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இந்த நிலையில் நடிகை குஷ்பு காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்துள்ளார்.

குஷ்பு ட்வீட்
பாஜகவின் வெற்றிக்கான காரணத்தையும் குஷ்பு ட்விட்டரில் பதிவிட்டுள்ளர். அவர் தனது பதிவில் மக்கள் பாஜக உடன் இருப்பதை தேர்தல் முடிவுகள் தெளிவாகக் காட்டுகின்றன. கட்சி மீதும் நமது பிரதமர் நரேந்திர மோடி மீதும் அவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை எதுவும் தடுக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.

காங்கிரஸ் கட்சி
இந்திய தேசிய காங்கிரஸ் மேலும் சிதைந்துவிட்டது. மக்களுக்காக பாடுபடுபவர்களுக்கும் அவர்களுக்கு ஆதரவாக நிற்பவர்களுக்கும் மக்கள் வாக்களிப்பார்கள். பாஜகவில் உள்ள நாங்கள் செய்கிறோம். நாங்கள் மக்களுடன் இருக்கிறோம் என்றும் குஷ்பு தனது ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வெற்றி கிடைத்திருக்காது
வெற்றியை கொடுத்த மக்களுக்கு நன்றி, ஒவ்வொரு காரியகர்த்தாவும் கடுமையாக உழைத்தனர். கடுமையாக உழைத்த அனைத்து தன்னார்வலர்களும், செய்தி, சித்தாந்தம், ஒவ்வொரு திட்டத்தையும் மக்களிடம் கொண்டு சேர்த்தனர். நரேந்திர மோடி ஜி, நீங்கள் இல்லாமல் இந்த வெற்றி கிடைத்திருக்காது என்றும் குஷ்பு பதிவிட்டுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications