சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இரண்டும் வேற.. நான் கண்டிப்பாக முதல்வர் கிடையாது.. கறாராக சொன்ன ரஜினி.. மீட்டிங்கில் என்ன நடந்தது?

2021 சட்டசபை தேர்தலில் நம்முடைய கட்சி வெற்றிபெற்றாலும், நான் கண்டிப்பாக முதல்வர் கிடையாது என்று நடிகர் ரஜினிகாந்த் நேற்று நடந்த மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: 2021 சட்டசபை தேர்தலில் நம்முடைய கட்சி வெற்றிபெற்றாலும், நான் கண்டிப்பாக முதல்வர் கிடையாது என்று நடிகர் ரஜினிகாந்த் நேற்று நடந்த மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    எனக்கு ஒரு விஷயத்தில் ஏமாற்றம்.. ரஜினிகாந்த்

    நடிகர் ரஜினிகாந்த் தலைமையில் நேற்று சென்னையில் நடந்த மீட்டிங்தான் தற்போது தமிழக அரசியலில் ஹாட் டாப்பிக். தமிழக அரசியல் சூழ்நிலையை இந்த கூட்டம் மாற்ற போகிறது என்று ரஜினி ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

    ஆனால் இன்னொரு பக்கம் அப்படி எதுவும் நடக்க வாய்ப்பில்லை, ரஜினி கட்சி தொடங்குவதே சந்தேகம்தான். அவர் அதைதான் ஏமாற்றம் என்று சூசகமாக சொல்லி இருக்கிறார் என்றும் ஒரு தரப்பினர் தெரிவிக்கிறார்கள்.

    மீட்டிங் எப்படி

    மீட்டிங் எப்படி

    பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் நேற்று நடிகர் ரஜினிகாந்த் தன் மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள் உடன் சந்திப்பு நடத்தினார். சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் இந்த கூட்டம் நடந்தது. கட்சி தொடங்குவது தொடர்பாக ரஜினிகாந்த் தீவிரமாக ஆலோசனைகளை மேற்கொண்டார். மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு பின் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் நேற்று செய்தியாளர்களிடம் அளித்த பேட்டி பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. நிறைய விவாதங்களை ஏற்படுத்தியது.

    என்ன சொன்னார்

    என்ன சொன்னார்

    நேற்று ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அதில், ஆலோசனை கூட்டத்தில் நிர்வாகிகளின் சந்தேகங்களுக்கு பதில் அளித்தேன். கூட்டம் நன்றாக சென்றது. அரசியல்கட்சி தொடங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஆலோசனையில் ஒரு விஷயத்தில் மட்டும் எனக்கு திருப்தியில்லை. தனிப்பட்ட ஒரு விஷயத்தில் ஏமாற்றம், அதை நேரம் வரும்போது தெரிவிப்பேன், என்று குறிப்பிட்டார்.

    ஆலோசனை கூட்டம்

    ஆலோசனை கூட்டம்

    இந்த ஆலோசனை கூட்டத்தில் மொத்தம் 38 ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் 8 பேருக்கு மட்டுமே பேச அனுமதிக்கப்பட்டது. 8 மூத்த நிர்வாகிகள் மட்டுமே நிகழ்ச்சியில் பேச அனுமதிக்கப்பட்டது. இதில் அவர்கள் கட்சி குறித்தும் சட்டசபை தேர்தல் குறித்தும் முக்கியமான விஷயங்களை ஆலோசனை செய்தனர். பல்வேறு சந்தேகங்களை இவர்கள் கேள்விகளாக கேட்டார்கள்.

    அனுமதி எப்படி

    அனுமதி எப்படி

    அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் இந்த ஆலோசனையில் என்ன விஷயங்கள் பேசப்பட்டது என்பது குறித்த தகவல்கள் வெளியாகி வருகிறது. அதன்படி நேற்று நடிகர் ரஜினிகாந்த் நிர்வாகிகளிடம், சட்டசபை தேர்தலில் நாம் கண்டிப்பாக போட்டியிடுவோம். அதற்குமுன் கண்டிப்பாக கட்சி தொடங்கி பெரிய மாநாடு நடத்தப்படும். ஆனால் கண்டிப்பாக நான் முதல்வராக மாட்டேன். எனக்கு அந்த விருப்பம் இல்லை.

    நம்முடைய கட்சி

    நம்முடைய கட்சி

    நம்முடைய கட்சிதான் ஆட்சி அமைக்கும். வேறு ஒரு நபர் முதல்வர் ஆகலாம். ஆனால் நான் முதல்வராக மாட்டேன். நான் கட்சி தலைவராக மட்டுமே இருப்பேன், என்று கூறியுள்ளார். இதை கேட்டதும் கட்சி நிர்வாகிகள் கடுமையாக அதிர்ச்சி அடைந்துள்ளனர். நீங்கள்தான் முதல்வராக வேண்டும். உங்களால்தான் இந்த கட்சியே. உங்களுக்குத்தான் இந்த தகுதி உள்ளது.

    பெரிய வெற்றி

    பெரிய வெற்றி

    நாம் வெற்றிபெற்றால் அது உங்கள் முகத்திற்காக விழுந்த ஓட்டுதான். அதை மறக்க வேண்டாம், என்று கூறியுள்ளனர். இதையடுத்து இந்த விஷயத்தில் மட்டும் நான் எடுப்பதுதான் இறுதி முடிவு என்று மிக கடுமையாக ரஜினி கூறி இருக்கிறார் . இதை கேட்ட ரசிகர்கள், உங்கள் விருப்பம் எதுவோ நாங்கள் அதை செய்வோம். நீங்கள் எடுப்பதுதான் இறுதி முடிவு என்று கூறி உள்ளனர்.

    முக்கியம்

    முக்கியம்

    அதேபோல் நடிகர் ரஜினிகாந்த் இன்னொரு முக்கியமான விஷயத்தையும் நிர்வாகிகளிடம் கூறியுள்ளார். அதில், நாம் கட்சி தொடங்கினாலும் மன்றம் தனியாக செயல்படும். மக்கள் மன்றத்திற்கும் கட்சிக்கும் தொடர்பு இல்லை. கட்சிக்கு தனி நிர்வாகிகள் மன்றத்திற்கு தனி நிர்வாகிகள். விரைவில் இதற்கான அறிவிப்புகள் வெளியாகும் என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் விரைவில் ரஜினி தரப்பில் இருந்து முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.

    English summary
    We will win, but I won't be the CM says Rajini Kanth in yesterday meeting.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X