ஆஹா.. தமிழகத்தில் இன்று இங்கெல்லாம் பலத்த மழை பெய்யும்! பல மாவட்டங்களில் மழை பெய்யும்!
சென்னை: மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தென்மேற்கு பருவ மழை மற்றும் வெப்பச்சலனத்தால் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று சென்னையில் பல இடங்களில் கனமழை பெய்தது.
இதேபோல் கோவை மாவட்டத்திலும், நீலகிரி மாவட்டத்திலும், தேனி மாவட்டத்திலும், புதுக்கோட்டை, திருவள்ளூர் மாவட்டத்திலும் மழை பெய்தது.

பரவலாக மழை பெய்யும்
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருந்த அறிவிப்பில், தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு தென்மேற்கு பருவ காற்று மற்றும் வெப்பச்சலனத்தின் காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசான முதல் மிதமான மழை பெய்யும் என்று குறிப்பிடப்பட்டுளளது. மேலும் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய கோவை, நீலகிரி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

வெப்ப நிலை எப்படி
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு ஒரு சில பகுதிகளில் இலேசான மழை பெய்யக்கூடும். சென்னையில் அதிகபட்ச வெப்ப நிலை 37 டிகிரிய செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்ப நிலை 29 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும். தமிழகத்தில் இன்று ஈரோடு, மதுரை, திருச்சிராப்பள்ளி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் அதிகபட்ச வெப்ப நிலை 40 டிகிரி செல்சியஸ்ஸை ஒட்டி பதிவாகக்கூடும்.

வால்பாறையில் மழை
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோவை மாவட்டம் வால்பாறையில் 6 செமீ மழை பெய்துள்ளது. கோவை மாவட்டம் சின்னக்கல்லாரில் 5 செமீ மழையும் பெய்துள்ளது. சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் 3 செமீ மழையும், திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியில் 3 செமீ மழையும் பெய்துள்ளது. இதுதவிர திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள், சென்னையின் பல்வேறு பகுதிகள் , தேனி மாவட்டத்தின் சில பகுதிகளில் மழை பெய்தது. புதுக்கோட்டை, கடலூர், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக நேற்று மழை பெய்தது.

வானிலை மையம் எச்சரிக்கை
தென்மேற்கு, தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள், மத்திய மேற்கு வங்ககடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகள், மத்திய கிழக்கு அரபிக்கடல், குமரிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று 40 முதல் 50 கிலோமீட்டருக்கு வீசும். எனவே மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.
-
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
அடுத்த 1 மணி நேரம் உஷார்! கோவை டூ கன்னியாகுமரி.. 12 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை! -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
நெல்லை, குமரி, தேனியில் இன்று கனமழை எச்சரிக்கை.. சென்னையிலும் இரவில் மழைக்கு வாய்ப்பு! வானிலை அலர்ட் -
மாசம் ரூ.4000 கன்பார்ம்! சிங்கப்பெண் வந்தாச்சு.. விஜய் கையில் எடுக்கும் அடுத்த முக்கிய திட்டம்! -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து












Click it and Unblock the Notifications