உள்ளாடையுடன் மணமகன்.. குளியல் டவலுடன் மணமகள்.. வெட்டிங் போட்டோ ஷூட்டா இது? மேட்டரே வேற
சென்னை: பப் வைத்த கொண்டை.. பளபள கலர் சேலை.. என பணக்காரன் லுக்குடன் ஒரு நடுத்தர வயது பெண்மணி பங்களாவின் முன்பகுதியில் சேர் மீது அமர்ந்திருக்கிறார்.
அவருக்கு பின்னால், பேண்ட் அணியாமல் ஜட்டி மற்றும் சட்டை போட்டுக் கொண்டு ஒரு ஆண், பர்முடா அணிந்து மேலே சட்டை போடாமல் மற்றொரு ஆண், கும்பிட்டபடி நிற்கிறார்கள்.
அவர்களுக்கு அருகே கைகூப்பியபடி இரண்டு பெண்கள் நிற்க, இன்னொருவர் கொடுத்துள்ள போஸ் இதை எல்லாம் தூக்கி சாப்பிடும்படி இருக்கிறது.

டர்க்கி டவல்
அந்த இளம் வயதுப் பெண், தனது கையில் லட்டுக்கள் அடங்கிய தட்டை ஏந்தி நிற்கிறார். அதில் பிரச்சனையில்லை. ஆனால் குளித்து விட்டு அணிவார்களே, அந்த டர்க்கி டவலை, தொடை தெரியும்படி ஏற்றி கட்டி போஸ் கொடுத்துள்ளார். அந்த ஜட்டி ஆணும் சரி.. கீழே உட்கார்ந்திருக்கும் இன்னொரு இளம் வயது நபரும் சரி.. திருமணத்துக்கு அணியக் கூடிய ஆடைகளை போலத்தான் அணிந்துள்ளனர்.

வேட்டியை உருவிய மணமகள்
இதை பார்த்ததுமே.. திருமண வெட்டிங் போட்டோ ஷூட் புகைப்படம் என்று வைரலாக சமூக வலைத்தளங்களில் பரவத்தொடங்கியது. மணமகனின் வேட்டியை உருவி கொண்டு, மணமகள் ஓடுவது போன்ற போட்டோ ஒன்று சமீபத்தில் வைரலாகி இருந்தது. அதேபோலத்தான், இப்போதும் மணமகன் பேண்ட் உருவப்பட்டு ஜட்டியோடு நிற்க வைக்கப்பட்டுள்ளார்.. மணமகள் டர்க்கி டவலுடன் நிற்க வைக்கப்பட்டுள்ளார்.. இதெல்லாம் என்னப்பா நியாயம் என்று நெட்டிசன்கள் காரசாரமாக கேள்வி எழுப்பினர்.

சிங்கள வெப் சீரிஸ்
ஆனால் விசாரித்துப் பார்த்தால் அது மேட்டரே வேற. ஆமாங்க.. இது போட்டோஷூட் கிடையாது. இலங்கை நாட்டில் சிங்கள மொழியில் ஒளிபரப்பாகும் ஒரு வெப்சீரிஸ் தொடரில் வரக்கூடிய காட்சிதான் இப்படி புகைப்படமாக வெளியே வெளியாகி சுற்றி வருகிறது. மஹாகேதரா, என்ற பெயருள்ள அந்த வெப்சீரிசுக்குள் சென்று பார்த்தால், டைட்டில் போடக்கூடிய ஆரம்ப கட்டத்தில்தான் இது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன என்று தெரிந்தது. அந்த காட்சிகள் அனைத்தும் டபுள் மீனிங் வரும் வகையில் மோசமாகத்தான் இருக்கிறது என்பது வேறு விஷயம். ஆனால் இது திருமண, போட்டோ ஷூட் இல்லை என்பது மட்டும் ஆறுதலான விஷயம்.

வெட்டிங் போட்டோ ஷூட்
ஒரு விஷயத்தை மறந்துவிட வேண்டாம். இந்த புகைப்படம்தான் திருமண போட்டோ ஷூட் கிடையாதே தவிர, திருமண போட்டோ ஷூட் களும் இப்போது ஆபாசத்தை நோக்கித்தான் அடியெடுத்து வைக்கின்றன. ஆண்களுக்கு வேட்டியை உருவி ஜட்டியோடு விடுவது போல, மணமகளுக்கு தொடை தெரிய ஸ்கர்ட் போட்டு நிற்க வைத்து புகைப்படம் எடுப்பதும் தற்போது பரவலாகி வருகிறது. முன்பு மணமகனும், மணமகளும் முத்தம் கொடுப்பது போல படம் எடுக்கப்பட்டது. இப்போது படுக்கையறை காட்சிகள்வரை அது விரிவடைந்து சென்று கொண்டிருக்கிறது. இலங்கை வெப்சீரிஸில் இடம்பெற்ற இந்த காட்சி விரைவில் யாருடைய போட்டோ ஷூட்டிலாவது இடம் பெற்றாலும் ஆச்சரியம் இல்லை.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications