வீக் எண்ட்! கிளாம்பாக்கத்தில் கஷ்டப்பட வேண்டாம்..பயணிகளுக்கு குட் நியூஸ் கொடுத்த போக்குவரத்து துறை
சென்னை: புனித வெள்ளி மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு சென்னையில் இருந்து பிற மாவடங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
சென்னையில் வசிக்கும் வெளியூர் மக்களில் பலரும் வார இறுதி நாட்களுக்கும், முக்கிய பண்டிகைகளுக்கும் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். இதனால், வெள்ளிக்கிழமை என்றாலே பேருந்துகளில் பயணிகள் கூட்டம் அலைமோதும். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் வார நாட்களில் பயணிகள் கூட்டம் நெரிசல் இன்றி காணப்படும். இதனால், வெளியூர்களுக்கு செல்லும் பேருந்துகளும் முழு இருக்கைகளும் நிரம்பிய படி செல்ல கடும் பாடு பட வேண்டியிருக்கும்.

ஆனால், வார இறுதி நாட்களில் இதற்கு நேர் மாறான சூழலை காண முடியும். பேருந்துகளில் இடம் கிடைக்காமல் பயணிகள் அங்கும் இங்கும் தவிக்கும் சூழல் காண முடியும். அதிலும் வரும் வெள்ளிக்கிழமை புனித வெள்ளி தினம் என்பதால் அரசு விடுமுறை தினம் ஆகும். இதனால், அரசு அலுவலங்கள், பல பெரு நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்படும் என்பதால் சென்னையில் வசிக்கும் வெளியூர் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல படையெடுப்பார்கள்.
இதுதான் சமயம் என்று தனியார் ஆம்னி பேருந்துகளிலும் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டு விடுகிறது. ரயில்களிலும் டிக்கெட் கிடைக்காததால் பயணிகள் பெரும் தவிப்புக்கு உள்ளாக நேரிடும். எனவே பயணிகளின் சிரமத்தை கருத்தில் கொண்டு இது போன்ற வார இறுதி நாட்களில் சிறப்பு பேருந்துகளை தமிழக அரசு இயக்கி வருகிறது. அந்த வகையில், வரும் வியாழக்கிழமை முதல் தொடர் விடுமுறை என்பதால் கூடுதலாக 505 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இது குறித்து தமிழக போக்குவரத்து கூறியிருப்பதாவது:-
29. 03. 2024 (புனித வெள்ளி) 30. 03. 2024 (சனிக்கிழமை) மற்றும் 31. 03. 2024 (ஞாயிற்றுக் கிழமை) வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்து இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 28/03/2024 (வியாழக் கிழமை) அன்று 505 பேருந்துகளும் 29/03/2024 (வெள்ளிக்கிழமை) அன்று 300 பேருந்துகளும், 30/03/2024 (சனிக்கிழமை) 345 பேருந்துகளும் சென்னை கோயம்பேட்டிலிருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூர் ஆகிய இடங்களுக்கு 28/03/2024, 29/03/2024 மற்றும் 30/03/2024 (வியாழன், வெள்ளி மற்றும் சனிக்கிழமை) அன்று 120 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
எனவே, தினசரி இயக்க கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக 28/03/2024 (வியாழக் கிழமை) அன்று 505 பேருந்துகளும் 29/03/2024 (வெள்ளிக்கிழமை) அன்று 300 பேருந்துகளும், 30/03/2024 (சனிக்கிழமை) 345 பேருந்துகளும் கோயம்பேட்டிலிருந்து 120 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் மற்றும் பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த வார இறுதியில் வியாழக்கிழமை அன்று 13,622 பயணிகளும் வெள்ளிக்கிழமை அன்று 3,929 பயணிகளும் சனிக்கிழமை 2,367 பயணிகளும் மற்றும் ஞாயிறு அன்று 12,500 பயணிகளும் முன்பதிவு செய்துள்ளனர்.
இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications