மயிலாடுதுறை டிஎஸ்பி சுந்தரேசன் மீது இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன? காவல்துறை விளக்கம்
மயிலாடுதுறை: நேர்மையாக இருக்கும் ஒரே காரணத்துக்காக, தனக்கு இத்தனை டார்ச்சர்களை உயரதிகாரிகள் கொடுப்பதாக கூறிய மயிலாடுதுறை மதுவிலக்கு டிஎஸ்பி சுந்தரேசன், தான் நேர்மையற்றவன் என்பதை நிரூபித்தால் அலுவலக வாசலிலேயே வாழ்க்கையை முடித்துக் கொள்ள தயாராக இருப்பதாக கூறியிருந்தார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் விளக்கம் அளித்துள்ள தமிழ்நாடு காவல்துறை, டிஎஸ்பி சுந்தரேசன் மீது இதுவரை எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் என்னென்ன என்று பட்டியல் போட்டிருக்கிறது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் மதுவிலக்கு பிரிவு டிஎஸ்பி சுந்தரேசன் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறும் போது, உயரதிகாரிகள் மீது பல குற்றச்சாட்டுகளை தெரிவித்தார். குறிப்பாக, காஞ்சிபுரத்தில் ஓய்வுபெற்ற இன்ஸ்பெக்டர் கஸ்தூரி கொலை வழக்கின் விசாரணை அறிக்கையை மாற்றுமாறு, சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம், உளவுத்துறை ஐஜி செந்தில்வேல் ஆகியோர் அழுத்தம் கொடுத்ததாக குற்றம்சாட்டினார்.

சுந்தரேசன் குற்றச்சாட்டு
ஆனால், அவர்களின் உத்தரவுக்கு இணங்க மறுத்த காரணத்தால், மயிலாடுதுறை மாவட்ட எஸ்.பி. ஸ்டாலினை தூண்டிவிட்டு, தன்னை மிகவும் டார்ச்சர் செய்வதாக சுந்தரேசன் குற்றம்சாட்டினார். தனது அலுவலக வாகனத்தை வேண்டுமென்றே தன்னிடம் இருந்து எஸ்.பி. பறித்துவிட்டதாகவும், அதனால் தற்போது வீட்டில் இருந்து, தினமும் அலுவலகத்துக்கு தான் நடந்தே வருவதாகவும் சுந்தரேசன் கூறியிருந்தார்.
நேர்மையானவன்
மேலும் நேர்மையாக இருக்கும் ஒரே காரணத்துக்காக, தனக்கு இத்தனை டார்ச்சர்களை உயரதிகாரிகள் கொடுப்பதாகவும், தான் நேர்மையற்றவன் என்பதை நிரூபித்தால் அலுவலக வாசலிலேயே வாழ்க்கையை முடித்துக் கொள்ள தயாராக இருப்பதாகவும் டிஎஸ்பி சுந்தரேசன் பேட்டியின் போது கூறியிருந்தார். அதற்கு பதில் அளிக்கும் வகையில் காவல்துறை எடுத்த நடவடிக்கைககளை பட்டியிலிட்டுள்ளது.
காவல்துறை விளக்கம்
1) கடந்த 05.11.2005 முதல் 25.01.2006 வரையிலும், மீண்டும் 26.06.2006 வரையிலும் சென்னை நந்தம்பாக்கம் காவல் நிலைய குற்ற எண்.42/2006 மற்றும் 43/2006 வழக்கு கோப்புகளில் FIR மற்றும் கைது அட்டையை தவிர, வேறு எந்த ஆவணங்களும் இல்லாததை உயரதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதற்காக அங்கு பணியில் இருந்த சுந்தரேசனுக்கு 3 ஆண்டுகளுக்கான சம்பள உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது.
சென்சார் நடவடிக்கை
2) திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட குற்ற எண். 223/02 பிரிவு 448, 427, 379, 448, 427 மற்றும் குற்ற எண் 240/02 பிரிவு 294 (பி), 323, 324, 447, 506(2) ஆகிய வழக்கு விவரங்களை மறைத்து, பாஸ்போர்ட் வழங்க பரிந்துரை செய்ததாக சுந்தேரசன் மீது குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து, பணியில் பொறுப்பு இல்லாமல் அலட்சியப்போக்குடன் நடந்து கொண்டதாக சுந்தரேசன் மீது 'சென்சர்' (Censure) நடவடிக்கை எடுக்கப்பட்டது.
திருட்டு விசிடிக்கு கையூட்டு
3) சென்னை மாநகரம் ஜே.2 துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் சுந்தரேசன் பணிபுரிந்தபோது, ராதாபுரம் 6-வது தெருவில் வசிக்கும் தமீன் அன்சாரி என்பவரை திருட்டு விசிடி, டிவிடி படங்களை விற்க அனுமதி அளித்தும், அதிகார துஷ்பிரயோகம் செய்து அவரிடம் இருந்து ரூ.40 ஆயிரத்தை சுந்தரேசன் கையூட்டாக பெற்றதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
40 ஆயிரம் லஞ்சம்
i) சென்னை மாநகரம் ஜே.2 துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் சுந்தரேசன் பணிபுரிந்தபோது, டவுன் பஞ்சாயத்து துணைத் தலைவர் சீனிவாசன் மற்றும் முதல்தெருவைச் சேர்ந்த பெருடி ஆகியோர் தொடர்பான முடிவுற்ற வழக்குகளை சுட்டிக்காட்டி, குண்டர் சட்டத்தில் அவர்களை அடைத்து விடுவதாக மிரட்டி, அவர்களிடம் இருந்து ரூ.40 ஆயிரத்தை லஞ்சம் வாங்கியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
டாஸ்மாக் பணியாளரிடம் லஞ்சம்
ii) ஜே.2 துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் பணிபுரிந்தபோது, டாஸ்மாக் பாரின் உரிமையாளர்கள் மணி மற்றும் சண்முகசுந்தரத்தை சுந்தரேசன் மிரட்டி, அவர்களிடம் இருந்து ஒவ்வொரு மாதமும் ரூ.3,000 கையூட்டாக பெற்று முறைகேடாக நடந்து கொண்டது கண்டறியப்பட்டது.
டீக்கடைக்காரரிடம் லஞ்சம்
iii) ஜே.2 துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் பணிபுரிந்த போது, பன்னு சேகர் என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டும் கூட, அவரை நீதிமன்றத்தில் சுந்தரேசன் ஆஜர்படுத்தாமல் இருந்தது தெரியவந்தது.
iv) அதே ஜே.2 துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் பணிபுரிந்த போது, டீக்கடை காரர் ஒருவரிடம் மாதந்தோறும் லஞ்சம் பெற்றதும் கண்டுபிடிக்கப்பட்டது.
சிலிண்டர் பெண்
iv) தனது வீட்டில் சிலிண்டர் காணாமல் போனதாக பெண் ஒருவர் அளித்த புகாரை சுந்தரேசன் பணிப் பதிவேட்டில் பதிவு செய்யவில்லை. வெறும் வாய்வழியான புகாரை மட்டுமே அடிப்படையாக கொண்டு, திருடுபோன சிலிண்டரை சுந்தரேசன் மீட்டுக் கொடுத்திருக்கிறார். பின்னர், அவருடன் தவறான உறவிலும் சுந்தரேசன் இருந்திருக்கிறார்.
சம்பளம் நிறுத்தம் ஏன்
v) பின்னர், காவல் ஆய்வாளர் சபாபதி மற்றும் எழுத்தர் கனகராஜ் மீது தனக்கு இருந்த காழ்ப்புணர்ச்சி காரணமாக, மேற்கூறிய பெண்ணை கடுமையாக தாக்கி அவர்கள் மீதே பொய் புகாரை கொடுக்கச் செய்திருக்கிறார். மேலும், இதுதொடர்பாக ல்வேறு குற்றங்களுங்காக 2 ஆண்டுகளாக சுந்தரேசனின் சம்பள உயர்வை நிறுத்தி வைத்து அவருக்கு தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற பல துறை ரீதியான தண்டனைகள் சுந்தரேசனுக்கு வழங்கப்பட்டுள்ளது என்று காவல்துறை நடவடிக்கைகளை பட்டியலிட்டுள்ளது.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications