இதான் டாஸ்க்! தலைமை செயலாளராக முருகானந்தத்தை தேர்வு செய்தது ஏன்? ஸ்டாலின் மெகா அசைன்மென்ட்! ட்விஸ்ட்
சென்னை: தமிழ்நாட்டின் புதிய தலைமை செயலாளராக ஐஏஎஸ் முருகானந்தம் அறிவிக்கப்பட்டு உள்ளார். இவருக்கு முக்கியமான சில டாஸ்க்கை முதல்வர் ஸ்டாலின் கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழ்நாடு தலைமைச் செயலாளராக இருந்த சிவ்தாஸ் மீனா மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக சிவ்தாஸ் மீனா நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று முருகானந்தம் ஐஏஎஸ் தலைமை செயலாளர் ஆகி உள்ளார்.

இவர் தலைமை செயலாளர் பதவியில் சுறுசுறுப்பாக இல்லை என்ற புகார்கள் வைக்கப்படுகின்றன. அதிகாரிகளை பெரிதாக கட்டுப்படுத்தவில்லை, திமுகவின் வேகத்திற்கு பெரிதாக ஈடுகொடுக்கவில்லை, சில டாப் தரப்புடன் மோதல் உள்ளது என்றெல்லாம் கூறப்படுகிறது. அதனால்தான் தற்போது ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக சிவ்தாஸ் மீனா நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்கிறார்கள். ஆனாலும் அதிகாரபூர்வ காரணம் இன்னும் வெளியாகவில்லை.
புதிய தலைமை செயலாளர்: சிவ்தாஸ் மீனா நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில், புதிய தலைமைச் செயலாளராக முதலமைச்சரின் தனி செயலாளர் முருகானந்தம் ஐஏஎஸ் தலைமைச் செயலாளராக தேர்வாகி உள்ளார்..
முருகானந்தம் சென்னைக்காரர்.. ஸ்டாலினின் குட் புக்கில் இருப்பவர். இவர் சிறப்பாக செயல்படுவதாக சமீபத்தில் அமைச்சர் பிடிஆர் கூட பாராட்டி இருந்தார். முன்பு முதல்வரின் தனி செயலாளர் பொறுப்பில் உதயசந்திரன் இருந்தார்.. உதயசந்திரன் அதன்பின் நிதித்துறை செயலாளர் பொறுப்பிற்கு மாற்றப்பட்டு அவரின் இடத்திற்கு முருகானந்தம் ஐஏஎஸ்ஸை கொண்டு வந்தனர்.
முருகானந்தம் ஐஏஎஸ் 1991 பேட்ச் ஐஏஎஸ் அதிகாரி ஆவார். பிஜி கணினி அறிவியல், ஐஐஎம் லக்னோவில் எம்பிஏ படிப்புகளை இவர் படித்துள்ளார். தமிழ்நாட்டில் பல்வேறு துறைகளில் இவர் ஐஏஎஸ் அதிகாரியாக இருந்துள்ளார். அதோடு பிடிஆர் நிதி அமைச்சராக இருந்த போது அவருக்கு கீழ் இவர் செயலாளராக இருந்தார். கிட்டத்தட்ட இவர்தான் பிடிஆரின் ரைட் ஹேண்ட். பட்ஜெட்டை உருவாக்கியதில் கடந்த 2 வருடங்களில் இவரின் பங்கு முக்கியமாக கருதப்பட்டது.
உதயநிதி: பிடிஆரே இவரை அழைத்து பாராட்டும் அளவிற்கு இவரின் பணி சிறப்பாக இருந்தது. இந்த நிலையில் தற்போது முதல்வர் ஸ்டாலினின் தனி செயலாளர் ஆக உள்ளார். விரைவில் தலைமை செயலாளர் ஆக வாய்ப்பு உள்ளது. தமிழ்நாடு அமைச்சரவை மாற்றும், ஸ்டாலின் வெளிநாடு பயணம், உதயநிதி ப்ரோமோஷன் உள்ளிட்ட பல விஷயங்கள் கிசுகிசுக்கப்படுவதால்.. முருகானந்தன் சார்ஜ் எடுப்பது கவனம் பெற்றுள்ளது.
அசைன்மென்ட்: இவருக்கு முக்கியமான சில டாஸ்க்கை முதல்வர் ஸ்டாலின் கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
1. அதன்படி சில அதிகாரிகள் இப்போதும் முந்தைய ஆட்சிக்கு விசுவாசமாக இருப்பதாக கூறப்படுகிறது. அவர்களை கண்ட்ரோல் செய்யும் டாஸ்க் கொடுக்கப்பட்டு உள்ளதாம்.
2. நிர்வாக ரீதியாக தற்போது சில புகார்கள் உள்ளன. அதை சரி செய்ய வேண்டும் என்று டாஸ்க் கொடுக்கப்பட்டு உள்ளதாம்.
3. இன்னும் ஒன்றரை வருடங்களில் தேர்தல் உள்ளது. இதை மனதில் வைத்து நிர்வாக ரீதியாக பணிகளை சிறப்பாக மேற்கொள்ள முருகானந்தத்தை முதல்வர் களமிறக்கி உள்ளாராம்.
4. முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு செல்ல உள்ள நிலையில் ஆட்சி நிர்வாகத்தில் விசுவாசமான ஒருவர் தேவை என்பதால் முருகானந்தத்தை முதல்வர் களமிறக்கி உள்ளாராம்.
மாற்றம் ஏன்?: ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சிவ்தாஸ் மீனா தமிழ்நாட்டின் 49வது தலைமை செயலாளராக பணியாற்றி வந்தார். சிவ்தாஸ் மீனா ஒரு காலத்தில் ஜெயலலிதாவிற்கு மிகவும் நம்பிக்கைக்குரிய அதிகாரியாக பார்க்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 1989ஆம் ஆண்டு ஐஏஎஸ் பேட்ச்சை சேர்ந்த இவர் ஜெயலலிதாவிற்கு மிகவும் நெருக்கமாக இருந்தார். 2011ல் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பின் அவருக்கு மாஸ்டர்மைண்டாக இருந்த 4 செயலாளர்களில் ஒருவராக இவர் இருந்தவர்.
அதன்பின் எடப்பாடி முதல்வரான போதும் இவரை அதேபோல் செயலாளர் பொறுப்பில் நியமிக்க நினைத்தார். ஆனால் அதற்குள் இவரை டெல்லி மத்திய அரசு பணிக்கு அழைத்தது. ஆனால் இவரை தமிழ்நாட்டிலேயே வைத்துக்கொள்ள எடப்பாடி தீவிரமாக முயன்று வந்தார். சட்டமன்ற கூட்டத்திற்கு பின்னர் அனுப்பி வைப்பதாக கூட கூறி சில நாட்கள் கூடுதலாக தமிழ்நாட்டில் வைத்து இருந்தார்.
ஆனால் வேறு வழியின்றி சிவ்தாஸ் கடைசியில் மத்திய அரசு பணிக்கு மாற்றப்பட்டார். இடையில் பல முறை எடப்பாடி முயன்றும் சிவ்தாஸ் மீனாவை மாநில பணிக்கு அழைக்க முடியவில்லை. இதையடுத்து ஸ்டாலின் ஆட்சிக்கு வந்ததும் மீண்டும் சிவ்தாஸ் மீனாவை மாநில பணிக்கு அழைத்து வந்து.. தலைமை செயலாளர் ஆக்கினார். இந்த நிலையில் அவருக்கு இன்னும் 2 மாதங்கள் பதவிக்காலம் உள்ள நிலையில், தற்போது டிரான்ஸ்பர் செய்யப்பட்டுள்ளார்.
-
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
ஒரு பக்கம் கொளுத்தும் வெயில்.. இன்னொரு பக்கம் இடி, மின்னலுடன் மழை! தமிழகத்தின் நிலை இதுதான்! -
ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்படும் 234 வேட்பாளர்கள்! ஃபயர் மோடில் விஜய்! தயாரான தவெக! -
இன்னொரு ரவுண்டு மழை.. இந்த மாவட்டங்களுக்கு ஜில் அப்டேட்! குட் நியூஸ் சொன்ன வானிலை மையம் -
காஞ்சிபுரம் - பெரம்பலூர் உள்பட 4 மாவட்டங்களில் புதிய எஸ்பிக்கள் நியமனம்.. தேர்தல் ஆணையம் அதிரடி -
Summer Vacation: மாணவர்களுக்கு குட் நியூஸ்.. பள்ளிகளுக்கு 48 நாள் கோடை விடுமுறை! மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? -
மொட்டை கடுதாசி கொடுத்த விஜய்.. பொன்ராஜ் மீதான புகார் கடிதத்தை பாருங்க! இதெல்லாம் வேலைக்கே ஆகாது! -
சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்! நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம்! திமுகவால் புலம்பும் மதிமுக -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி












Click it and Unblock the Notifications