21 சட்ட மசோதாக்களில் 6க்கு ஆளுநர் ஒப்புதல்- அரசிதழில் வெளியீடு- 'துணைவேந்தர்' மசோதாவுக்கு என்ன நிலை?
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டு நிலுவையில் இருந்த 21 மசோதாக்களில் 6 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்த 6 மசோதாக்கள் விவரம் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக கடந்த மே மாதம் வரை 21 மசோதாக்கள் நிலுவையில் இருப்பதாக அரசு தெரிவித்திருந்தது.

சட்ட மசோதாக்கள்
சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் ஆளுநரின் ஒப்புதலுக்குப் பின் சட்டமாக்கப்படும். தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு தமிழக ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட பல்வேறு மசோதாக்கள் ஆளுநரிடம் நிலுவையில் உள்ளன. பல்கலைக் கழகங்களுக்கு முதல்வரே துணைவேந்தராகச் செயல்படுவது உள்ளிட்ட மசோதாக்கள் உட்பட கடந்த 2020 முதல் 2020 மே 30-ம் தேதி வரை 21 சட்ட மசோதாக்கள் நிலுவையில் உள்ளன.

முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை
கடந்த ஜூன் மாதம் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியைச் சந்தித்து, அவரது ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ள கூட்டுறவுச் சங்கங்கள் திருத்த மசோதா, தமிழ்நாடு அடுக்குமாடிக் குடியிருப்பு உரிமை சட்ட மசோதா, பல்கலைக்கழக சட்ட மசோதா உள்ளிட்ட 21 சட்ட மசோதாக்களுக்கு விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.

ஆளுநர் ஒப்புதல்
இந்நிலையில், தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு கடந்த 2 ஆண்டுகளில் அனுப்பி வைக்கப்பட்ட 21 மசோதாக்களில் 6 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தற்போது ஒப்புதல் அளித்துள்ளார். 6 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கியுள்ள விவரம் தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

6 மசோதாக்கள்
தமிழ்நாடு மதிப்புக் கூட்டப்பட்ட வரி சட்ட மசோதா, சம்பளம் வழங்குதல் திருத்த மசோதா, கூட்டுறவு சங்கங்களின் 4-வது திருத்த மசோதா, கூட்டுறவு சங்கங்களின் 3-வது திருத்த மசோதா, உள்கட்டமைப்பு மேம்பாட்டு திருத்த மசோதா, தடுப்புச் சட்டத்தில் திருத்த மசோதா (தங்கள் நெருங்கிய உறவினர்களின் மரணத்தில் கலந்து கொள்வதற்காக அவர்களைத் தற்காலிகமாக விடுவிப்பது தொடர்பாக மாவட்ட அளவில் உள்ள ஒரு அதிகாரிக்கு அரசாங்கத்தின் அதிகாரத்தை வழங்குதல்) ஆகிய 6 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கியுள்ளார்.

மற்றவை நிலுவையில்
பல்கலைக்கழக வேந்தர்களை தமிழ்நாடு அரசே நியமிக்கும் வகையிலான மசோதா, சித்த மருத்துவப் பல்கலைக்கழக மசோதா, கூட்டுறவுச் சங்கங்கள் பதவிக் காலத்தைக் குறைக்கும் சட்ட மசோதா, அடுக்குமாடி குடியிருப்பு உரிமை மசோதா, உள்ளிட்ட மசோதாக்கள் இன்னும் நிலுவையில் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த மசோதாக்கள் குறித்து அரசுக்கு ஆளுநர் கேள்வி எழுப்புவார் என்றும் கூறப்படுகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications