விஜய்யால் திமுக சந்திக்க போகும் சவால்கள் என்னென்ன.. அடுத்த 4 மாதங்கள் மிக முக்கியம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் ஆரம்பித்துள்ள கட்சியின் முதல் பிரதான வியூகமே திமுக எதிர்ப்பு மட்டுமே. திமுகவை கடுமையாக எதிர்ப்பது மட்டுமே கொள்கையாக கொண்டு விஜய் செயல்படுகிறது. இதை எங்கேயோ கேள்வி பட்டிருப்பதாக நினைக்கிறார்களா.. நீங்கள் நினைப்பது உண்மை தான். அது ஜெயலலிதாவின் கொள்கை.. அதிமுகவின் முக்கியமான அரசியலே திமுக எதிர்ப்பு தான். அதனைத்தான் தீவிரமாக விஜய் கையில் எடுத்துள்ளார். இதனால் திமுக சந்திக்கப் போகும் சவால்கள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

திமுக எதிர்ப்பு ஒன்றையே ஆயுதமாக கொண்டு நடிகர் விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்ததில் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.. ஏனெனில் தற்போது திமுக தான் ஆளும் கட்சியாக இருக்கிறது. 2017ம் ஆண்டு தொடங்கி தொடர்ச்சி வென்று, வலுவான அரசியல் கட்சியாக இருக்கிறது. 2014ல் அதிமுக இருந்தது போன்ற ஒருநிலையில் திமுக இப்போது மிக வலுவாக இருக்கிறது. அதேநேரம் திமுகவை பிடிக்காதவர்களும் தமிழ்நாட்டில் பலர் உள்ளனர். அவர்களை தங்களுடைய கட்சியில் கொண்டு வர விஜய் விரும்புகிறார்.

What are the challenges that DMK will face due to tvk Vijay The next 4 months are very important


திமுக எதிர்ப்பு அரசியல்

அதிமுகவின் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் ஏற்பட்ட குழப்பம், அதன்பிறகு வரிசையாக அதிமுக சந்திக்கும் தோல்விகளை பார்த்து தான், விஜய் அரசியல் இயக்கத்திற்கு அச்சாணியே போட்டிருக்கிறார். சினிமாவில் உச்ச நட்சத்திரமான விஜய், 2000க்கு பிறகு பிறந்த பலருக்கும் மாஸ் ஹீரோவாக மனதில் இருக்கிறார். அவரது தவெகவில் பல லட்சம் பேர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். அத்துடன் அதிமுகவின் பாரம்பரிய வாக்குகளை கைப்பற்ற திட்டமிட்டு செயல்படுகிறார். இது எப்படி கைகொடுக்க போகிறது என்பது 2026 சட்டசபை தேர்தலில் தான் தெரியும்.

ஆளும் கட்சி எதிர்ப்பு ஓட்டுக்களை தவெக பிரிக்க வாய்ப்பு உள்ளததால் அதிமுகவில் இதில் தாக்கத்தை ஏற்படுத்தும்.. மறுபக்கம் விஜய்யின் அரசியல் பிரவேசம், திமுகவின் வாக்கு வங்கி, இளைஞர்கள் மீதான பிடிப்பு மற்றும் கூட்டணி வியூகம் ஆகியவற்றில் நேரடியாகத் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது.

இளைஞர் மற்றும் முதல் முறை வாக்காளர்களின் வாக்குகள் சிதறும் வாய்ப்பு உள்ளது

இளைஞர் மற்றும் முதல்முறை வாக்காளர்களின் வாக்குகள் சிதறும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. விஜய்க்கு தமிழ்நாட்டில் கோடிக்கணக்கான இளைஞர் ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இவர்கள் பெரும்பாலும் திமுக-வின் முக்கிய வாக்கு வங்கி என்ற கருத்தும் உள்ளது. விஜய் களமிறங்கும்போது, இந்த இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்களின் வாக்குகள் திமுக-விலிருந்து சிதறுவதற்கு மிக அதிக வாய்ப்பும் உள்ளது.

நடுநிலை வாக்காளர்கள்

நீண்டகாலமாக அதிமுக மற்றும் திமுக என்ற இரண்டு பிரதான திராவிடக் கட்சிகளுக்கு ஒரு மாற்று வேண்டும் என்று நினைக்கும் இளம் வாக்காளர்களுக்கு, விஜய் ஒரு புதிய, சினிமா கவர்ச்சி கொண்ட மாற்று முகமாகத் தெரிவது திமுகவுக்கு பாதகமாகவும் வாய்ப்பு உள்ளது.
விஜய் ஒரு திராவிடக் கட்சியின் சாயல் இல்லாமல் களம் இறங்கினால், அரசியல் வெறுப்பில் உள்ள நடுநிலை வாக்காளர்களை எளிதில் தன் பக்கம் ஈர்க்க முடியும் என்று நம்புகிறார். விஜய் கவர விரும்பும் வாக்காளர்கள் எல்லாருமே நடுநிலை வாக்காளர்கள் தான். இவர்கள் தான் பெரும்பாலும் திமுக கூட்டணியின் வெற்றியைத் தீர்மானிப்பவர்களாக இதுவரை இருந்தார்கள்.

விஜயகாந்த் பாணியில் சிக்கல்

தமிழகத்தின் தென் மாவட்டங்கள், வட மாவட்டங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் விஜய்க்கு இருக்கும் வலுவான அடித்தளம், அந்தப் பகுதிகளில் திமுகவிற்கு சற்று சவாலாக அமையலாம். அதேபோல் விஜய் தனித்துப் போட்டியிடுவதால், அதிமுகவின் வாக்குகளைப் பிரித்து, திமுக-வின் வெற்றி வாய்ப்பை மறைமுகமாக அதிகரிக்கக்கூடும் என்ற கருத்துக்கள் ஒரு பக்கம் இருந்தாலும், திமுகவிற்கும் கணிசமான வாக்குகள் வராமல் போகும் என்பதால், வெற்றிக்கான வாக்கு வித்தியாசம் குறைய வாய்ப்பு உள்ளது. 2006ல் விஜயகாந்த் வருகை தான், திமுக 96 இடங்களில் சுருங்கி மைனாரிட்டி ஆட்சியாக காரணமாக இருந்தது. அதேபோல் அமைந்துவிடவும் வாய்ப்பு உள்ளதாக அரசியல் நிபுணர்கள் ஒரு பார்வையை முன் வைக்கிறார்கள்.

திமுகவிற்கு அடுத்த நான்கு மாதங்கள் சவாலானது

விஜய் தனது திரைப்படங்கள் மூலமாகவும், மேடை பேச்சுகளில் தொடர்ந்து திமுக பார்தது ஊழல் மற்றும் ஆட்சி நிர்வாகச் சீர்கேடுகள் உள்ளதாக கடுமையாக விமர்சிக்கிறார். திமுகவின் ஆட்சியின் மீதான விமர்சனங்களைப் பூதாகரமாகக் கிளப்ப விஜய் வாய்ப்பு தேடி வருகிறார். அடுத்த 4 மாதங்கள் திமுகவிற்கு சவாலான மாதங்களாக இருக்கும்.


சமூக ஊடக விமர்சனங்கள்

தவெக தலைவர் விஜய் மற்றும் அவரது ரசிகர்கள் சமூக ஊடகங்களில் மிகவும் பவர்புல்லாக இருக்கிறார்கள். அவர்களின் வேகமான மற்றும் உணர்வுப்பூர்வமான பிரசாரம், திமுக-வின் பாரம்பரிய அரசியல் பிரசார யுக்திகளுக்கு நிச்சயம் கடும் சவாலாக இருக்கும். இளைஞர்களைக் கவரும் வகையில் விஜய் அறிவிக்கும் புதிய வாக்குறுதிகள், ஆளும் கட்சியான திமுக-வுக்கு, அதற்கு நிகரான அல்லது அதைவிடச் சிறந்த அறிவிப்புகளை வெளியிடும் நிர்பந்தத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது.

சுருக்கமாக சொல்வது என்றால், விஜய்யின் வருகை அதிமுகவை அதிகம் பாதிக்கும் என்றாலும், திமுகவையும் கணிசமாக நிச்சயம் பாதிக்கும் என்றே கூறப்படுகிறது. ஒருவேளை அதிமுக உடன் தவெக கூட்டு சேர்ந்தால், அது இன்னமும் திமுகவிற்கு கடும் சவாலாகவும் மாறவும் வாய்ப்பு உள்ளது. அடுத்த 4 மாதங்கள் வரை மேற்கொள்ளப்படும் அரசியலே அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கும் என்பதால், இனி ஒவ்வொரு நிமிடமும் அரசியல் களத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+