சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

முழு ஊரடங்கு.. அனைத்து கட்சி கூட்டத்தில் முதல்வர் பேசியது என்ன?.. எதிர்க்கட்சிகள் சொன்னது என்ன?

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்த முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அனைத்து கட்சி எம்எல்ஏக்கள் கூட்டத்தில் என்ன ஆலோசிக்கப்பட்டது என்பது குறித்து பார்ப்போம்.

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு வரும் 24 ஆம் தேதி முடிவுக்கு வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா குறைந்தாலும் அது கட்டுக்குள் இல்லை.

தமிழகத்தில் ஒரு வாரத்துக்கு மிக மிக தீவிரமான ஊரடங்கு அமலாகிறது.. விரைவில் அறிவிப்பு..?தமிழகத்தில் ஒரு வாரத்துக்கு மிக மிக தீவிரமான ஊரடங்கு அமலாகிறது.. விரைவில் அறிவிப்பு..?

கொரோனாவுக்கு மத்தியில் கருப்பு பூஞ்சை நோயும் பரவி வருகிறதால் இரு வாரங்களுக்கு முழு ஊரடங்கு தேவை என மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

அனைத்துக் கட்சி கூட்டம்

அனைத்துக் கட்சி கூட்டம்

இந்த நிலையில் அனைத்து கட்சி எம்எல்ஏக்கள் குழுவுடன் இன்றைய தினம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் சி விஜயபாஸ்கர், பாஜக சார்பில் நயினார் நாகேந்திரன், தவாக சார்பில் வேல்முருகன், மமக சார்பில் ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சிடி ஸ்கேன்

சிடி ஸ்கேன்

இந்த கூட்டத்தில் 5 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே அத்தியாவசிய கடைகளை திறக்க வேண்டும். சிடி ஸ்கேன் கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும். பால், காய்கறி, மருந்துக் கடைகளுக்கு மட்டுமே அனுமதி தர வேண்டும். சிடி ஸ்கேன் பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும்.

கொரோனா

கொரோனா

கொரோனா பரிசோதனை செய்தவுடன் 24 மணி நேரத்திற்குள் முடிவுகள் கிடைக்க வேண்டும். கிராமங்களில் கொரோனாவை குறைக்க வேண்டும். கட்டுப்பாடுகளற்ற முழு ஊரடங்கை அறிவிக்க வேண்டும் என அனைத்து கட்சிகளும் கோரிக்கை விடுத்துள்ளார்.

பள்ளி செல்ல முடியாமல்

பள்ளி செல்ல முடியாமல்

இந்த கூட்டத்தில் முதல்வர் பேசுகையில் பள்ளி மாணவர்கள் பள்ளி செல்ல முடியாமல் மன அழுத்தத்தில் உள்ளார்கள். அவர்களுக்கு எதிர்காலத்தையும் கல்வியையும் நாம் காலம் தாழ்த்தாமல் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். தமிழகத்தில் போலீஸார் அறிவுரையையும் மீறி ஏதோ பண்டிகை காலம் போல் பலர் ஊர் சுற்றுகிறார்கள். எனவே தளர்வுகளற்ற ஊரடங்கை அமல்படுத்த மருத்துவர்கள் குழு பரிந்துரைத்துள்ளனர் என முதல்வர் தெரிவித்தார்.

English summary
What are the discussions were going on in all party MLAs meeting?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X