விமானத்தில் பயணிக்க போகிறீர்களா? வரப்போகிறது புத்தம் புதிய ரூல்.. பயணிகளுக்கு முக்கிய செய்தி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விமான பயணிகளுக்கு முக்கியமான செய்தி ஒன்றை இந்திய விமான போக்குவரத்து துறை வெளியிட்டு உள்ளது.

கொரோனாவிற்கு பின் இந்தியாவில் விமான போக்குவரத்து அதிகரித்து உள்ளது. சமீபத்தில் சென்னை வந்த பிரதமர் மோடி சென்னை விமான நிலையத்தில் இருக்கும் ஒருங்கிணைந்த புதிய டெர்மினல் 1 ஐ திறந்து வைத்தார்.

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் ரூ.1260 கோடியில் அமைக்கப்பட்டுள்ள புதிய ஒருங்கிணைந்த முனையம் கட்டுமானத்திற்கு பின் மக்கள் பயன்பாட்டிற்கு வருகிறது. சென்னைக்கு வரும் பயணிகள் எண்ணிக்கையை 23 மில்லியன் பயணிகள் என்ற அளவில் இருந்து 30 மில்லியன் பயணிகளாக உயர்த்தும்.

What are the new rules for passengers travelling in Indian airports?

இந்த முனையம் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளது. ஏற்கனவே இருக்கும் பழைய முனையத்தை இடிக்கும் பணிகள் இங்கே தொடங்கி உள்ளதால் புதிய முனையம் விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில்தான் விமான பயணிகளுக்கு முக்கியமான செய்தி ஒன்றை இந்திய விமான போக்குவரத்து துறை வெளியிட்டு உள்ளது.

அதன்படி தற்போது விமானத்தில் நாம் பயணம் செய்கிறோம் என்றால் விமான நிலையத்தில் சோதனையின் போது தனியாக உடை பரிசோதனை நடக்கும். இன்னொரு பக்கம் தனியாக மின்னணு சாதனங்கள் சோதனை நடக்கும்.

அதேபோல் இன்னொரு ட்ரேயில் நாம் இரும்பு சார்ந்த பொருட்களை வைக்க வேண்டும். நாம் சோதனை வாயிலை தாண்டும் போது உடலில் எந்த விதமான இரும்பு சார்ந்த பொருட்களும் இருக்க கூடாது. அதேபோல் மின்னணு பொருட்களும் இருக்க கூடாது என்பதே விதி.

இந்த விதி காரணமாக பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். அதிலும் இதனால் நீண்ட நேரம் போர்டிங் செய்ய டைம் எடுக்கிறது. மக்கள் பலர் நீண்ட வரிசையில் நிற்க வேண்டிய கட்டாயமும் இதனால் ஏற்படுகிறது.

What are the new rules for passengers travelling in Indian airports?

லேப்டாப், சார்ஜர்கள், இயர்போன்கள், பெல்ட், வாலட், மொபைல் என்று எல்லாத்தையும் கழற்ற வேண்டிய நிலை இதனால் ஏற்படுகிறது.

இந்த நிலையில்தான் இந்தியாவில் இதற்காக 3டி சோதனை வர உள்ளது. 3d computed tomography சோதனை முறையை இந்திய விமான நிலையங்களில் கொண்டு வர உள்ளனர். 50 லட்சத்திற்கும் அதிகமான பயணிகளை ஒரு வருடத்தில் கொண்டு இருக்கும் விமான நிலையங்களில் 3d computed tomography சாதனம் கொண்டு வரப்பட உள்ளது.

3d computed tomography மூலம் நாம் மின்னணு சாதனங்களை தனியாக வைக்க வேண்டியது இல்லை. இந்த 3d computed tomography தானாக மின்னனு சாதனங்களை டிடெக்ட் செய்து கண்டுபிடித்துவிடும். இந்த வருட இறுதிக்குள் இந்திய விமான நிலையங்களில் இந்த வசதி வர உள்ளது.

இன்னொரு பக்கம் உடல் பரிசோதனைக்கான full body scanner கொண்டு வர முடிவு செய்யப்பட்டு உள்ளது. . 1 கோடிக்கும் அதிகமான பயணிகளை கொண்டு இருக்கும் விமான நிலையங்களில் 3d computed tomography மற்றும் full body scanner சாதனம் கொண்டு வரப்பட உள்ளது. இந்த வருட இறுதிக்குள் இந்திய விமான நிலையங்களில் இந்த வசதி வர உள்ளது.

இதனால் விமான பயணிகளின் பயணம் வரும் நாட்களில் இன்னும் எளிதாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+