குட்நியூஸ்! சென்னையில் வலம் வர போகும் நவீன பேருந்துகள்.. இவ்வளவு வசதிகளா! எப்படி இருக்கும் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பாக 242 நவீன பேருந்துகளும், 100 மின்சார பேருந்துகளும் வாங்கப்பட உள்ளன.

Recommended Video

    Kerala- வை போல தமிழ்நாட்டிலையும் எல்லா பள்ளிகளையும் CO-EDஆக மாற்றலாமா ? *VOX

    சென்னையில் தற்போது பேருந்துகள் தட்டுப்பாடு உள்ளது. மத்திய போக்குவரத்து துறை அறிவுரையின்படி ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு 60 பேருந்துகள் இருக்க வேண்டும் என்பது விதி.

    அதன்படி சென்னையின் மக்கள் தொகைக்கு தற்போது இருப்பதை விட 1000 பேருந்துகள் கூடுதலாக தேவை. சென்னையில் தற்போது 5900 பேருந்துகள் உள்ளன.

    எப்படி?

    எப்படி?

    ஆனால் இன்னும் 1000 பேருந்துகள் இருந்தால் சென்னையில் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க முடியும். மக்களும் எளிதாக பயணம் மேற்கொள்ள முடியும். அதே சமயம் சென்னையில் இருக்கும் பேருந்துகளில் 3400 பேருந்துகள் பழைய பேருந்துகள் ஆகும். இந்த வருட இறுதிக்குள் 1870 பேருந்துகள் போக்குவரத்து துறையால் கைவிடப்பட உள்ளன. பழைய பேருந்துகள் என்பதால் இவை மொத்தமாக கைவிடப்படும். இதற்காக புதிய பேருந்துகள் வாங்கப்பட உள்ளன.

     பேருந்துகள்

    பேருந்துகள்

    12 லட்சம் கிமீ தூரத்திற்கு அதிகமாக ஓடிய பேருந்துகள் கைவிடப்பட உள்ளன. இந்த நிலையில் சென்னையில் புதிதாக லோ டோர் கொண்ட பேருந்துகள் வாங்கப்பட உள்ளன. இவற்றில் வாசல் பகுதி மிக தாழ்வாக இருக்கும். இதனால் மாற்றுத்திறனாளிகள் எளிதாக இதில் ஏற முடியும். அதேபோல் மாற்றுத்திறனாளிகள் ஏறும் வகையில் லிப்ட் அமைக்கப்பட்டு இருக்கும். பெரிய கண்ணாடிகள் ஜன்னலாக அமைக்கப்பட்டு இருக்கும்.

    சென்னை

    சென்னை

    இதனால் மக்கள் வெளியே பார்க்க வசதியாக இருக்கும். ஏசி இல்லாத பேருந்துகள் முதல் கட்டமாக வாங்கப்பட உள்ளன. முதல் கட்டமாக 242 பேருந்துகள் இப்படி வாங்கப்பட உள்ளன. இந்த பேருந்துகளில் அமர்ந்து மற்றும் நின்று கொண்டு மொத்தம் 70 பேர் பயணிக்க முடியும். இதில் intelligent transport system (ITS) என்ற வசதி இருக்கும். இதில் டிஜிட்டல் போர்ட், மற்றும் ஸ்பீக்கர் மூலம் நிறுத்தங்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அறிவிக்கப்படும். இந்த பேருந்துகள் பெரும்பாலும் ஸ்டீல் நிறத்தில் பார்க்க வித்தியாசமான தோற்றத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மின்சார பேருந்துகள்

    மின்சார பேருந்துகள்

    இது போக முதற்கட்டமாக 500 மின்சார பேருந்துகள் தமிழ்நாடு முழுக்க கொண்டு வரப்பட உள்ளன. இதன்படி சென்னையில் முதல் கட்டமாக 100 மின்சார பேருந்துகள் களமிறக்கப்பட உள்ளன. இந்த பேருந்துகள் சென்னையில் பரீட்சார்த்த முறையில் இயங்கும். அதன்பின் தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் மற்ற 400 பேருந்துகள் களமிறக்கப்படும். மாநகர, நகர போக்குவரத்துகளில் இந்த மின்சார பேருந்துகள் பயன்படுத்தப்படும், என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+