இந்தியாவே பார்த்த ஆளுநருக்கு எதிரான வழக்கு.. உச்ச நீதிமன்ற தீர்ப்பு தமிழக அரசுக்கு பின்னடைவு.. ஏன்
சென்னை: இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த ஆளுநருக்கு எதிரான தமிழக அரசின் வழக்கில், உச்ச நீதிமன்றம் முதலில் வழங்கிய தீர்ப்பிற்கும் தற்போதைய விளக்க உத்தரவிற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. ஏனெனில் உச்ச நீதிமன்த்தின்ற இந்த தீர்ப்பால், ஆளுநர்கள் மசோதாக்கள் மீது முடிவெடுக்கும் விவகாரத்தில் மத்திய அரசுக்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்துள்ளது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் தொடர்ந்து ஆளுநர்களால் பிரச்சனை எழுந்தாலும், அதில் மாநில அரசுகளே பெரும் பின்னடைவை சந்திப்பார்கள் எனபது உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பால் தெரியவந்துள்ளது.
தமிழக ஆளுநர் ரவி சில சர்ச்சைக்குரிய மசோதாக்களை தொடர்ந்து நீண்ட காலம் மசோதாக்களை கிடப்பில் போட்டு வைத்தநிலையில், நீண்ட தாமதத்திற்கு பிறகு அதனை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தார். அந்த மசோதாவை குடியரசுத் தலைவர் நிராகரித்துவிட்டார். அதேபோல் நீண்ட காலமாக சில மசோதக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் வைத்திருந்தார். அந்த மசோதாக்கள் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக அர்த்தம் என் உச்ச நீதிமன்றம் கடந்த உத்தரவில் கூறியிருந்தது.

உச்ச நீதிமன்றம் தலையிடாது
அதேபோல் மசோதாக்கள் மீது முடிவெடுக்கும் விவகாரத்தில் குடியரசுத் தலைவர், ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் காலக்கெடு விதித்தது. இதை எதிர்த்து குடியரசுத் தலைவர் 14 கேள்விகளுடன் விளக்கம் கேட்டிருந்தார். அதற்கு உச்ச நீதிமன்றம் விளக்கம் அளித்து இன்று தீர்ப்பளித்துள்ளது. கிட்டத்தட்ட உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மறுசீராய்வு மனுவை ஒன்ற ஒரு வழக்காவே இது பார்க்கப்படுகிறது. இந்த வழக்கின் தீர்ப்பு என்பது இந்திய அரசியலையே புரட்டிப்போடக்கூடியது ஆகும். மத்திய அரசின் அதிகாரங்களை உறுதி செய்துள்ளது. அதாவது மத்திய அரசின் பிரதிநிதிகளாக செயல்படும் ஆளுநர், குடியரசுத் தலைவர்களின் அதிகாரங்களில் உச்ச நீதிமன்றம் தலையிடாது என்றும் நீதிபதிகள் தீர்ப்பளித்தள்ளனர்.
தீர்ப்பின் அம்சங்கள்
ஏனெனில் தீர்ப்பின் முக்கிய அம்சங்களை பார்த்தால் அப்படித்தான் இருக்கிறது. மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஆளுநருக்கு காலக்கெடு எதையும் நீதிமன்றத்தால் விதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. அதேபோல் மசோதாக்களை ஆளுநர் நிறுத்தி வைக்கிறார் என்றால் அதற்கான காரணங்களை மாநில அரசுடன் கலந்து ஆலோசிக்க வேண்டும் என்று கூறியள்ளது. மேலும் தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் குடியரசுத் தலைவர், ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் கால வரம்பை நிர்ணயித்திருந்தது என்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.
உத்தரவிட முடியாது
அதேபோல் ஒரு மசோதா மீது காரணமே இல்லாமல் நீண்ட காலத்திற்கு ஆளுநர் எந்த முடிவும் எடுக்காமல் கிடப்பில் போட்டு வைத்திருந்தார் என்றால் சம்பந்தப்பட்ட மாநில அரசு உச்ச நீதிமன்றத்தை நாடலாம் என்று கூறிய நீதிபதிகள், இருப்பினும் ஆளுநருக்கு நீதிமன்றங்களால் எந்த உத்தரவையும் போட முடியாது என்றும் மசோதாக்கள் மீது முடிவெடுங்கள் என கேட்டுக் கொள்ளத்தான் முடியும் என்றும் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.
கைவிரித்த உச்ச நீதிமன்றம்
அதேநேரம் தீர்ப்பில் இன்னொரு பாயிண்டையும் நீதிபதிகள் தெளிவாக கூறியுள்ளனர். அதன்படி பார்த்தால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு தான் மாநிலத்தை முழுமையாக செலுத்தக்கூடிய அதிகார அமைப்பாக இருக்க வேண்டும் ஒரு மாநிலத்திற்கு இரண்டு அதிகார அமைப்புகள் செயல்படுவதை ஏற்க முடியாது என்று கூறியுள்ளனர். இந்த கடைசி பாயிண்டின் படி பார்த்தால், ஒருவர் தான் அதிகாரம் செலுத்த முடியும். மாநில அரசு தான் அதிகாரம் செலுத்தும் அமைப்பு என்பதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்த போதிலும், மசோதாக்கள் மீது முடிவெடுங்கள் என கேட்டுக் கொள்ளத்தான் முடியும் என்றும், கட்டாயமான உத்தரவை பிறக்க முடியாது என்றும், அவர்களுக்கு காலக்கெடு விதிக்க முடியாது என்றும் கைவிரித்துள்ளது.
மத்திய அரசின் அதிகாரங்களில் தலையிட முடியாது
உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பின் படி பார்த்தால், அரசியல் சாசன விதிகளின் படி சட்டங்களை இயற்றினாலும், மத்திய அரசின் அதிகாரங்களில் (ஆளுநரின் அதிகாரங்கள், மத்தியஅரசு சம்பந்தப்பட்ட துறைகளில் தலையிடுவது) கைவைக்கும் சட்டங்களை எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்கள் இயற்றினால், அதனை மத்திய அரசு ஒரு நாளும் ஏற்காது.
இணக்கமாக செல்ல வேண்டும்
அதேபோல் சில மசோதாக்கள் ஏன் நீண்ட காலமாக இருப்பது குறித்து ஆளுநரிடமும், மத்திய அரசிடமும் முறையிட்டு தான் தீர்வு பெற முடியும். இன்னும் தெளிவாக சொல்வது என்றால், மத்திய அரசுடன் முரண்பட்டு, சண்டை போட்டு நிற்காமல் இணக்கமாக சென்றால் தான் பிரச்சனை இல்லாமல் மாநில அரசுகள் இயங்க முடியும். மாறாக எதிர்த்து சண்டையிட்டால் பின்னடைவை தான் சந்திப்பார்கள் என்பது தான் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம் அறிய முடிகிறது. எனவே இந்த தீர்ப்பை ஆய்வு செய்தால் தமிழக அரசுக்கு பின்னடைவு என்று பார்க்கப்படுகிறது. மேலும் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications