ஆஹா.. என்னாச்சு? முக்கியமான "பாயிண்டை" சொல்லாத எடப்பாடி.. வியந்து போன ஓபிஎஸ்.. "கேம் ஓவர்"

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக பொதுக்குழுவிற்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில் நேற்று எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கறிஞர் முக்கியமான வாதம் ஒன்றை வைக்கவில்லை என்று ஓபிஎஸ் தரப்பு கூறியுள்ளது.

ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழு நடந்தது செல்லாது என்று கடந்த வாரம் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு செய்தார்.

இந்த வழக்கு நேற்று இரண்டு நீதிபதி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. நேற்று மொத்தம் 5 மணி நேரம் விசாரணை நடைபெற்றது.

இரண்டு தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில் வழக்கில் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இன்று எழுத்து பூர்வமான வாதங்கள் வைக்கப்பட உள்ளன.

என்ன சொன்னார்

என்ன சொன்னார்

நேற்று வழக்கில் எடப்பாடி பழனிசாமி முக்கியமான சில வாதங்களை வைத்தார். ஒன்றரை கோடி உறுப்பினர்களின் எண்ணத்தை 2 ஆயிரத்து 500 பொதுக்குழு உறுப்பினர்கள் பிரதிபலித்தார்களா என தனி நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளது யூகத்தின் அடிப்படையிலானது. அதிகாரம் பெற்றவர் பொதுக்குழுவை கூட்டவில்லை என தனி நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளது தவறானது. கட்சி விவகாரங்களில் தலையிடும் விதமாக தனி நீதிபதி தீர்ப்பளித்துள்ளதால், அதை ரத்து செய்ய வேண்டும். அதிமுகவில் ஒற்றை தலைமை கொண்டு வர வேண்டும் என பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் விரும்பியதால் தான், ஜூலை 11- ல் பொதுக்குழு கூட்டப்பட்டது. இதில் கட்சி விதிகள் ஏதும் மீறப்படவில்லை, என்று வாதம் வைத்தார்.

மிஸ்ஸான பாயிண்ட்

மிஸ்ஸான பாயிண்ட்

ஆனால் முக்கியமான ஒரு வாதத்தை எடப்பாடி தரப்பு வைக்கவில்லை. பொதுக்குழுவை எப்படி தலைமை கழக நிர்வாகிகள் கூட்டினார்கள் என்று வாதம் வைக்கவில்லை. அதாவது ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டதாக அவர்கள் வாதம் வைக்கவே இல்லை. இதற்கு முன் தனி நீதிபதி இந்த வாதத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. இதன் காரணமாக இந்த முறை இரட்டை நீதிபதிகள் முன் அந்த வாதத்தை எடப்பாடி வைக்கவே இல்லை.

கேள்வி

கேள்வி

இரண்டு பதவிகளும் காலாவதியானால் மட்டுமே தலைமை கழக நிர்வாகிகள் பொதுக்குழுவை கூட்ட முடியும். ஆனால் இரண்டு பதவிகளும் காலாவதியாகிவிட்டது என்று எடப்பாடி வாதம் வைக்கவே இல்லை. வழக்கில் இது முக்கியமான திருப்பமாக பார்க்கப்படுகிறது. வழக்கின் போக்கை இது மாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று ஏன் எடப்பாடி தரப்பு இதை பற்றி பேசவில்லை என்பது ஓபிஎஸ் தரப்பிற்கும் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது.

ஆச்சர்யம்

ஆச்சர்யம்

இது தொடர்பாக ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் அளித்த பேட்டியில், ஜூலை 11ம் தேதி பொதுக்குழு கூட வேண்டும் என்று தலைமை கழக உறுப்பினர்கள் மூலம் கொடுக்கப்பட்ட கடிதம் செல்லாது என்பதுதான் எங்களின் வாதம். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதி ஆனால் மட்டுமே இப்படி செய்திருக்க முடியும். ஆனால் எடப்பாடி பழனிசாமி தரப்பு செய்த வாதத்தில் இந்த இரண்டு பதவிகள் பற்றியும் பேசவில்லை. அதாவது ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டன என்று இவர்கள் வாதமே வைக்கவில்லை.

என்னாச்சு?

என்னாச்சு?

இது எங்களுக்கு சாதகமாக அமைந்து உள்ளது. எங்களுக்கு இது வலு சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது. தனி நீதிபதி உத்தரவு அதிமுகவை வலிமை அற்றதாக்கும் என்று எடப்பாடி தரப்பு வாதம் வைத்தது. ஆனால் தீர்ப்பில் அப்படி எதுவுமே இல்லை என்று நாங்கள் வாதம் வைத்தோம். தனி நீதிபதி உத்தரவு அதிமுகவை வலிமை அடையவே செய்யும் என்று கூறினோம். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இருவரும் சேர்ந்து பொதுக்குழுவை கூட்டலாம் என்று அவர் கூறினார்.

ஏன்?

ஏன்?

அது கட்சிக்கு வலு சேர்க்கும். இரண்டு பேரும் சேர்ந்து கட்சியை வழிநடத்தலாம். அதற்கு முன் இப்படித்தானே கட்சியை இரண்டு தரப்பும் வழி நடத்தினார்கள். அதனால் தனி நீதிபதி தீர்ப்பில் தவறு இல்லை. அவரின் தீர்ப்பு அதிமுகவிற்கு வலிமை சேர்க்கும். மாறாக கட்சியை வலிமை இழக்க செய்யாது என்று அழுத்தம் திருத்தமாக வாதம் வைத்தோம், என்று ஓ பன்னீர்செல்வம் வழக்கறிஞர் பேட்டி கொடுத்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+