சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அவர் வந்து கேட்டா என்ன சொல்லுவீங்க? "ஜெ" கேட்ட அந்த கேள்வி.. திகைத்து நின்ற எடப்பாடி.. ஒரே கூத்து!

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுகவில் இரண்டு ராஜ்ய சபா எம்பி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில் கட்சிக்குள் கடுமையான பூசல் நிலவி வருவதாக ரத்தத்தின் ரத்தங்கள் தெரிவிக்கிறார்கள். அதிமுகவிற்குள் அப்படி என்னதான் நடக்கிறது என்று பார்க்கலாம் வாருங்கள்!

அதிமுக என்றால் வேகம் என்ற கருத்து ஒரு காலத்தில் நிலவி வந்தது. எந்த தேர்தல் அறிவிக்கப்பட்டாலும் முதல் ஆளாக ஜெயலலிதாதான் வேட்பாளர்களை அறிவிப்பார். அப்படி அதிமுக வேகமாக இருந்த காலம் எல்லாம் மலையேறிவிட்டது.

இந்த முறை ராஜ்ய சபா எம்பி தேர்தல் அறிவிக்கப்பட்டு கிட்டத்தட்ட ஒரு வாரம் கழித்துதான் அதிமுக தனது வேட்பாளர்களை அறிவித்தது. திமுக முதல் ஆளாக வேட்பாளர்களை அறிவிக்க.. அதிமுக நீண்ட நேரம் எடுத்துக்கொண்டது.

 உங்க தலைவரை போல எடப்பாடி கிடையாது! அமைச்சர் சக்கரபாணிக்கு, அதிமுக ஜெயக்குமார் பதிலடி உங்க தலைவரை போல எடப்பாடி கிடையாது! அமைச்சர் சக்கரபாணிக்கு, அதிமுக ஜெயக்குமார் பதிலடி

குழப்பம்

குழப்பம்

அதிமுகவில் ராஜ்ய சபா தேர்தலுக்கு பலரின் பெயர்கள் ஆலோசனை செய்யப்பட்டது. ராஜ் சத்யன் தொடங்கி கோகுல இந்திரா வரை பலரின் பெயர்கள் இந்த லிஸ்டில் இருந்தது. இதற்காக பலகட்ட ஆலோசனைகள் நடந்தன. அதன்பின்பே சிவி சண்முகம், தருமர் ஆகியோரின் பெயர்களை அதிமுக ராஜ்ய சபாவிற்கு தேர்வு செய்தது. வன்னியர் - முக்குலத்தோர்.. வடக்கு - தெற்கு.. இபிஎஸ் டீம் - ஓபிஎஸ் டீம் என்ற பார்முலாவை பின்பற்றி இந்த தேர்வை அதிமுக செய்துள்ளதாக கூறப்படுகிறது.

ஜெயக்குமார் ரேஸ்

ஜெயக்குமார் ரேஸ்

இந்த எம்பி தேர்தல் ரேஸில் முன்னிலையில் இருந்தது என்னவோ ஜெயக்குமார்தான். கடைசிவரை ஜெயக்குமார் எம்பி ஆக வாய்ப்பு இருப்பதாகவே கூறப்பட்டது. ஆனால் கடைசியில் இவருக்கு பதவி கொடுக்கப்படவில்லை. இதற்கு ஜெயக்குமார் தரப்பிடம் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு சொன்ன விளக்கம்தான் அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியதாம். அதன்படி.. உங்க மகன் ஜெயவர்த்தன் எப்படியும் எம்பி தேர்தலில் 2024ல் நிற்பாரே.. அவருக்கு சீட் வேண்டாம் என்றால் நீங்கள் இப்போது நிற்கலாம் என்று கூறியதாக தெரிகிறது.

எடப்பாடி விளக்கம்

எடப்பாடி விளக்கம்

அதோடு நீங்கள் எம்பி ஆக வேண்டும் என்றாலும் கூட ஓகே.. லோக்சபா தேர்தலில் நிற்கலாம்.. இப்போ சான்ஸ் இல்லை என்று கூறி இருக்கிறார்களாம். இதற்கு அதிமுக இரட்டை தலைமையிடம் ஜெயக்குமார் முக்கியமான பதில் ஒன்றை அளித்ததாகவும் கூறப்படுகிறது. சரி எனக்கு எம்பி பதவி வேண்டாம்.. ஆனால் நீங்கள் வேட்பாளராக தேர்வு செய்த ஒருவர் மீண்டும் வந்து எம்எல்ஏ தேர்தலின் போது சீட் கேட்டால் என்ன செய்வீர்கள்.. அவர் வந்து கேட்டா அப்போது எம்எல்ஏ சீட்டையும் கொடுப்பீர்களா என்று எம்பி வேட்பாளராக தேர்வாகி இருக்கும் "ஒருவரின்" பெயரை குறிப்பிட்டு ஜெயக்குமார் கேள்வி எழுப்பி இருக்கிறாராம்.

உருக்கமான கேள்வி

உருக்கமான கேள்வி

அதோடு நான் கட்சிக்காக ஜெயிலுக்கு எல்லாம் சென்றேன்.. வேறு யார் என்னை விட கட்சியில் தீவிரமாக உழைத்தது. தினமும் செய்தியாளர்களை சந்தித்தேன். எனக்கு என்ன செய்வீங்க என்றும் ஜெயக்குமார் தரப்பு உருக்கமாக கேட்டதாக தெரிகிறது. ராயபுரம் அதிமுக நிர்வாகிகளும் சென்னையில் இருந்து ஒரு எம்பி இருந்தால்தான் நன்றாக இருக்கும். இல்லை என்றால் சென்னையை திமுக முழு கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிடும் என்று அட்வைஸ் சொல்லி இருக்கிறார்களாம்.

 கட்சி என்ன செய்யும்?

கட்சி என்ன செய்யும்?

இந்த நிலையில்தான் ஜெயக்குமாரை கூல் செய்யும் விதமாக கட்சி பதவிகள்.. அல்லது முக்கிய பொறுப்பு ஏதாவது கொடுக்கப்படலாம் என்கிறார்கள். ஜெயக்குமாரை முன்னிறுத்தும் விதமாக முக்கிய பொறுப்பை அவருக்கு வழங்க இரட்டை தலைமை முடிவு செய்துள்ளதாம். ஆனால் இதை பார்த்து வாய்ப்பு கிடைக்காத மற்ற தலைவர்களும் பதவி கேட்க கூடாது என்றும் அதிமுக இரட்டை தலைமையை கையை பிசைந்து கொண்டு இருக்கிறதாம்.

English summary
What did Jeyakumar say as he could not get the Rajya Sabha ticket in AIADMK? அதிமுகவில் இரண்டு ராஜ்ய சபா எம்பி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில் கட்சிக்குள் கடுமையான பூசல் நிலவி வருவதாக ரத்தத்தின் ரத்தங்கள் தெரிவிக்கிறார்கள்.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X