செங்கல்பட்டு அருகே அடிக்கடி வந்து போன சரவணன் யாரு.. கேள்வி எழுப்பிய மாமியார்.. அதிர வைத்த மருமகள்
சென்னை: செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அருகே ராஜசேகர் என்பவர் தனது மனைவி அமுல் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்தார். இவர்களுடன் ராஜசேகரின் அம்மா லட்சுமியும் வசித்து வந்தார். இந்நிலையில் ராஜசேகர் அடிக்கடி வெளியூருக்கு வேலைக்கு சென்று வந்த நிலையில் அவரது மனைவி அமுல் கள்ளக்காதலில் இறங்கியுள்ளார். இதற்கு தடையாக இருந்த மாமியாரை அவர் என்ன செய்தார் என்தை பார்ப்போம்.
திருமணத்தை மீறிய உறவு என்பது மிகவும் கூர்மையான ஆயுதம், இது பெரும்பாலும் அவர்களையே அழித்துவிடும். இல்லாவிட்டால் அவர்களுக்கு நெருக்கமானவர்களை அழித்துவிடும். திருமணத்தை மீறிய உறவு என்கிற நிலைக்கு பதில், விவாகரத்தை நாடி பிரிந்துவிடுவது நல்லது. பலர் விவகாரத்திற்கு பயந்து தவறான வழியில் செல்கிறார்கள். இதுதான் பலகுற்றங்களுக்கு காரணமாக இருக்கிறது. அப்படித்தான் செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பகுதியில் நடந்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த நெரும்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 42). இவரது மனைவி அமுல் (38). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். ராஜசேகரின் தாயார் லட்சுமி (58) தன்னுடைய மகன் ராஜசேகரனுடன் வசித்து வந்தார். ராஜசேகர் சொந்தமாக நெல் அறுவடை எந்திரம் வைத்துள்ளார். இந்த வேலைக்காக அவர் அடிக்கடி வெளி மாநிலங்களுக்கு சென்று மாத கணக்கில் தங்கி விட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.
இதனிடையே அமுலுக்கு அதே பகுதியை சேர்ந்த சரவணன் (42) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறி உள்ளதாம். ராஐசேகர் வீட்டில் இல்லாத நேரத்தில் அடிக்கடி சரவணன் அமுல் வீட்டுக்கு வந்து செல்வதையும் அவருடன் நெருக்கமாக பழகுவதும் நடந்திருக்கிறதாம். இதனால் மாமியார் லட்சுமி மருமகள அமுலை பலமுறை கண்டித்தாராம். இதனால் மாமியார், மருமகளுக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்ததாம்.
இந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை லட்சுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அந்த பகுதி மக்கள் திருக்கழுக்குன்றம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் லட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிரேத பரிசோதனை செய்ததில் லட்சுமியின் கழுத்தை நெரித்து தூக்கில் தொங்கவிட்டிருக்கலாம் என்றும் லட்சுமி உடலில் காயங்கள் மற்றும் கைரேகைகள் உள்ளதாகவும் தெரியவந்தது. இந்த அறிக்கையை அடிப்படையாக வைத்து போலீசார் அந்த பகுதியில் உள்ள அக்கம் பக்கத்தினரை விசாரித்தனர். அப்போது அமுலுக்கும் சரவணனுக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்தது போலீசாருக்கு தெரியவந்தது.
இந்த நிலையில் நேற்று காலை நெரும்பூர் கிராம நிர்வாக அலுவலர் மகேஷை சந்தித்த அமுல் மற்றும் அவரது தோழி பாரதி, கள்ளக்காதலன் சரவணன் ஆகியோர் சரணடைந்து தாங்கள் 3 பேரும் சேர்ந்துதான் கள்ளக்காதலை கண்டித்ததால் லட்சுமியை அடித்து கொலை செய்து தூக்கில் தொங்க விட்டதாக வாக்குமூலம் அளித்தனர். கொலையை மறைக்க தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடியதாகவும் கூறினார்கள்.
இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் மகேஷ் திருக்கழுக்குன்றம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். அதன் பேரில் நேரில் சென்ற போலீசார் 3 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர் விசாரணையில் கொலை செய்ததை ஒப்புக்கொண்டதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
-
இப்படியா நடக்கனும்.. பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 3 வயது சிறுமி! சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்! -
குமுறுது கும்மிடிப்பூண்டி.. 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை? முட்புதரில் வீசிச் சென்ற கொடூரன்கள்! -
லண்டனில் கேள்விக்குறியாகும் இந்தியர்களின் நிலை.. 26 வயது இளைஞருக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்! -
“முதல்வர் விஜய் கையில் இருக்கும் காவல்துறை.. கட்சிக்காரர்களுக்கு பயம் இல்லை” - எடப்பாடி பழனிசாமி -
அண்ணி மீதான மோகம்.. இளைஞரை எரித்து கொன்ற வழக்கில் பெரிய ட்விஸ்ட்! ஷாக் காரணம் -
நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம்.. 22 வயது காதலிக்கு, காதலன் கொடுத்த கொடூர தண்டனை.. உயிரே போச்சே -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர்












Click it and Unblock the Notifications