அந்த 30 நிமிடம் பேசியது என்ன? விசாரியுங்கள்! உதயநிதி செய்த சம்பவம்.. உளவுத்துறையை அனுப்பிய விஜய்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக எம்.எல்.ஏ.மார்கண்டேயனின் ஜாமீன் வழக்கு நேற்று விசாரணை செய்யப்பட்டது. இதில் அவருக்கு ஜாமீன் கிடைத்துவிட வேண்டும் என்கிற எதிர்பார்ப்பில் திமுக தலைவர் ஸ்டாலின் இருக்கிறார். இது குறித்து வழக்கறிஞர் வில்சனிடம் ஸ்டாலின் பேசியபோது, ''ஜாமீன் கிடைத்துவிடும் தலைவரே ! மறுப்பதற்கு எந்த பாயிண்டுகளும் அரசு தரப்பில் இல்லை'' என்று நம்பிக்கைக் கொடுத்து ள்ளார்.

நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் மார்க்கண்டேயன் சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜராகி வாதிட்டார்.

Udhayanidhi Stalin DMK

விசாரணையில் என்ன நடந்தது?

விசாரணைக்கு ஆஜராகுமாறு முறையான நோட்டீஸ் எதுவுமின்றி மனுதாரர் நேரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார் என்று சுட்டிக்காட்டிய அவர், இது உச்ச நீதிமன்ற வழிகாட்டு நெறிமுறைகளுக்கு முற்றிலும் எதிரானது என்றார். எனவே, மனுதாரரை நீதிமன்றக் காவலில் வைக்கப் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்து, அவருக்கு உடனடியாக ஜாமீன் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைப்பு

மேலும், மனுதாரர் எந்தவொரு குற்றச் செயலிலும் ஈடுபடவில்லை என்றும், பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் எதுவும் பேசவில்லை என்றும் குறிப்பிட்ட வழக்கறிஞர், எந்தவொரு தகுந்த காரணமுமின்றி நீதித்துறை நடுவர் மிகவும் இயந்திரத்தனமாகக் கைது உத்தரவைப் பிறப்பித்துள்ளார் என்று குற்றம் சாட்டினார். இந்த வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், நெல்லை பாளையங்கோட்டை சிறையில் இருக்கும் மார்க்கண்டேயனை, சிறையில் சந்தித்துப்பேசினார் உதயநிதி. சுமார் 30 நிமிடங்கள் இந்த சந்திப்பு நடந்தது. இந்த சந்திப்பில் அவர்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்பதை கவனிக்க வேண்டும் என உளவுத்துறையிலிருந்து சிறைத் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதனால், மார்க் கண்டேயனை உதயநிதி சந்தித்துப்பேசிய போது, அருகில் சிறைத்துறையை சேர்ந்த வார்டன் ஒருவர் இருந்துள்ளார்.

உளவுத்துறையிலிருந்து சிறைத் துறை அதிகாரிகளுக் தகவல்

சந்திப்பில் என்ன நடந்ததது என விசாரித்தபோது, ''மார்க்கண்டேயனின் உடல் நலம் குறித்து விசாரித்தார் உதயநிதி. சிறையில் ஏதேனும் அசௌ கரியம் இருக்கிறதா? எனவும் கேட்டார். அதற்கு மார்க்கண்டேயன், நல்ல இருக்கேன் சின்னவர். எந்த அசௌகரியமும் இல்லை. நமக்கு சிறைசாலையும் சாதராணமானதுதானே ! நம் தலைவர் கலைஞரும் ஸ்டாலினும் சிறையில் அனுபவிக்காத கொடுமைகளையா நான் அனுபவித்துவிடப் போகிறேன்? எதுவும் இல்லை. ஆனால், ரிமாண்ட் செய்யும் அளவுக்கான குற்றத்தை நான் செய்யவில்லையே என சொல்லியிருக்கிறார் மார்க்கண்டேயன்.

குற்றத்தை நான் செய்யவில்லையே

அதற்கு உதயநிதியும், சட்டப்பேரவைங்கிறது முதல்வரின் சொந்த சொத்து கிடையாதே. அதனை மூடிவிட வேண்டும் என முதல்வர் சொன்னதற்குத் தானே நீங்கள் பதில் சொன்னீங்க. அதனால, கவலைப்படாம இருங்க. ஜாமீனில் வெளியே வந்துவிடலாம். தலைவர் கலைஞர், இதே சிறையில் தான் அடைக்கப்பட்டிருந்தார். நீங்களும் இதே சிறையில் அடைக்கப்பட்டிருப்பது பெருமைதான் என தட்டிக்கொடுத்துள்ளார் உதயநிதி'' என்கிறார்கள் திமுக இளைஞரணியினர்.

பாளையங்கோட்டையிலிருந்து புறப்பட்ட உதயநிதி, அவதூறு பேச்சுக்கு சிறை எனில் தவெககாரர்கள் பேசிய பேச்சுகளுக்கு பல பேர் சிறைக்கு போயிருக்க வேண்டும். நாம் தான் பெருந்தன்மையாக விட்டுவிட்டோம் என்று தன்னுடன் இருந்தவர்களிடம் கமெண்ட் அடித்திருக்கிறார்.

- சிறப்பு நிருபர் எழில்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+