பெண்ணை கட்டிப்போட்டுவிட்டு.. கொத்தனாரின் உச்சக்கட்ட வெறித்தனம்.. மிரண்டுபோன விருதாச்சலம்
மனைவியை கத்தியால் குத்தி கொன்ற கணவனை போலீஸார் கைது செய்துள்ளனர்
கடலூர்: மனைவியை கட்டிப்போட்டுவிட்டு, இப்படி ஒரு கொடுமையை செய்துள்ளார் நாகராஜன்.. இதை கேள்விப்பட்டு விருதாச்சலமே அதிர்ந்து போயுள்ளது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்துள்ள பகுதி கம்மாபுரம்.. இங்கு வசித்து வந்தவர் ராஜலட்சுமி.. 25 வயதாகிறது.. இவர் தொடக்கப்பள்ளியில் சமையலராக பணிபுரிந்து வருகிறார்.
இவரது கணவர் பெயர் நாகராஜன்.. 32 வயதாகிறது.. ஆவினங்குடி கிராமத்தை சேர்ந்தவர்.. கொத்தனாராக உள்ளார்.. இவர்களுக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிறது.. ஆனால், குழந்தை இல்லை.

விருதாச்சலம்
தம்பதி இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக, எப்போது பார்த்தாலும் சண்டை வந்து கொண்டே இருக்குமாம்.. அப்படித்தான் நேற்றும் இருவருக்கும் தகராறு வந்துள்ளது.. அந்த சண்டையில், ஆத்திரமடைந்த நாகராஜ், கத்தி எடுத்து வந்து, ராஜலட்சுமியின் தலை, கழுத்து பகுதிகளில் குத்தி கொடூரமாக கொலை செய்தார்.. பிறகு, கம்மாபுரம் போலீஸ் ஸ்டேஷனில், அதே கத்தியுடன் சென்று சரண் அடைந்தார்.

ராஜலட்சுமி
இதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த கம்மாபுரம் போலீசார், ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த ராஜலட்சுமியின் சடலத்தை மீட்டு, போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக, முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்... உடனடியாக விசாரணையையும் ஆரம்பித்தனர்.. அப்போதுதான், ராஜலட்சுமிக்கு ஏற்கனவே திருமணமான விஷயம் தெரியவந்துள்ளது.. நாகராஜை திருமணம் செய்வதற்கு முன்பே வேறொருவரை திருமணம் செய்துள்ளார். ஆனால், அவர் இறந்துவிட்டதால், இரண்டாவதாக நாகராஜை திருமணம் செய்துள்ளார்.

சந்தேகம்
நாகராஜுடன் திருமணமானதில் இருந்தே தகராறுதானாம்... இதற்கு காரணம், ராஜலட்சுமி மீது நாகராஜுக்கு சந்தேகம் இருந்து வந்துள்ளது.. ஒவ்வொரு முறை வீட்டில் சண்டை வரும்போதெல்லாம், அடிக்கடி ராஜலட்சுமி அவரது அம்மா வீட்டிற்கு கோபித்து கொண்டு சென்றுவிடுவாராம்.. பிறகு, மாமியார் வீட்டுக்கு செல்லும் நாகராஜ், ராஜலட்சுமியை சமாதானப்படுத்தி தன் வீட்டுக்கு அழைத்து செல்வாராம்.. சம்பவத்தன்றும், இப்படித்தான், அம்மா வீட்டில் கோபித்து கொண்டிருந்த ராஜலட்சுமியை சமாதானப்படுத்தி அழைத்து வந்துள்ளார் நாகராஜ்.

உச்சக்கட்ட டென்ஷன்
வீட்டுக்குள் நுழைந்ததுமே மறுபடியும் தகராறு வெடித்துள்ளது.. உச்சக்கட்ட டென்ஷன் அடைந்த நாகராஜ், மனைவியை கட்டிப்போட்டுவிட்டு, அதற்கு பிறகு கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்... இவர்களுக்குள் வரும் சண்டைகள் எல்லாமே, ராஜலட்சுமியின் நடத்தை மீது சந்தேகப்பட்டுதானாம்.. அப்போதெல்லாம், மிக கடுமையாக மனைவியை சித்ரவதை செய்வாராம் நாகராஜ்.. சந்தேகப்பட்டதுடன், மனைவியை கட்டிப்போட்டு கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
தஞ்சையில் கள்ளக்காதல்.. நள்ளிரவில் புருஷன்- சொந்த அக்காவை தீயில் கொளுத்திய அமுதா -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications