பட்ஜெட்.. பிடிஆர் பேச ஆரம்பித்ததும் பட்டென எழுந்த எடப்பாடி! நிறுத்துங்க..நிறுத்துங்க.. சீறிய அப்பாவு
சென்னை: தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சட்டசபையில் பட்ஜெட் உரை வாசிக்கும் நேரத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு சட்டசபையில் 2022-2023-ம் ஆண்டுக்கான மாநில பட்ஜெட்டை நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்யும் முதல் முழு பட்ஜெட் இதுவாகும்.
இன்று பட்ஜெட் ஜார்ஜ் கோட்டையில் தாக்கல் செய்யப்பட்டது . இந்த முறையும் பேப்பர் இல்லாத பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

பட்ஜெட்
இன்று பட்ஜெட் தாக்கல் செய்ய நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் உள்ளே வந்தார். அப்போது சபாநாயகர் அப்பாவு, பிடிஆரை முன்னே வந்து பேசும்படி கூறினார். முன்னே நின்று பேசுங்கள் என்று அப்பாவு கூறினார். இதையடுத்து "பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம் அணியென்ப நாட்டிவ் வைந்து" என்ற குறளை மேற்கோள்காட்டி தனது பட்ஜெட் உரையை தொடங்கினார் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்.

பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்
ஆனால் பிடிஆர் பேச தொடங்கியதும் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி எழுந்து உரையாற்ற தொடங்கினார். அவர் எழுதி வைத்து இருந்த உரையை வாசிக்க தொடங்கினார். லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டுகள் பற்றி கடுமையாக அவர் பேச தொடங்கினார். இதையடுத்து சபாநாயகர் அப்பாவு.. உட்காருங்க.. உட்காருங்க.. நீங்க பேச கூடாது. சபை விதிகளை மீறாதீர்கள் என்று கூறினார்.

எடப்பாடி அமளி
ஆனால் எடப்பாடி தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தார். நிறுத்தாமல் தொடர்ந்து எடப்பாடி பேசிக்கொண்டே இருந்தார். இதையடுத்து அப்பாவு.. நீங்கள் பேசுவது தவறு. உங்கள் உரை எதுவும் அவை குறிப்பில் இடம்பெறாது. நீங்கள் பேசியது எதுவும் அவை குறிப்பில் இடம்பெறாது என்று கூறினார். அவை அனைத்தும் நடக்கும் போதும் பிடிஆர் தொடர்ந்து பேசிக்கொண்டு இருந்தார். அவர் உரையை நிறுத்தவில்லை.

அப்பாவு கோபம்
ஆனால் அதன்பின் அதிமுக எம்எல்ஏக்கள் பலர் மொத்தமாக எழுந்து நின்று அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவையில் பெரும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து அதிமுகவினர் அமளி காரணமாக பட்ஜெட் உரை வாசிப்பதை நிதியமைச்சர் நிறுத்தினார். அதிமுகவினர் சட்டசபை மரபை மீறக்கூடாது என சபாநாயகர் வலியுறுத்தினார். ஆனால் அதிமுகவினர் சபாநாயகர் சொன்னதை கேட்கவில்லை.

என்ன நடந்தது?
இதையடுத்து சபாநாயகர் அப்பாவு எழுந்து நின்று.. போதும்.. போதும் அமளியை நிறுத்துங்க.. நான் எழுந்து நிற்கிறேன்.. சபாநாயகர் எழுந்து நின்றால்.. உறுப்பினர்கள் உடனே உட்கார வேண்டும். இதுவே விதி. நீங்கள் பேச பின்னர் அனுமதிப்பேன். ஓபிஎஸ், இபிஎஸ் முதல்வராக இருந்தவர்கள். நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும் நாளில் யாரும் பேசக்கூடாது. இப்போது பட்ஜெட் தாக்கல் செய்ய விடுங்கள் என்று கூறினார். இதையடுத்து அதிமுகவினர் சபாநாயகர் சொன்னதை கேட்டு அமைதியாக அமர்ந்தனர்.

வெளிநடப்பு
ஆனால் அதன்பின் பிடிஆர் உரைக்கு அதிமுகவினர் மீண்டும் எதிர்ப்பு தெரிவித்தனர். எடப்பாடிக்கு சபாநாயகர் அப்பாவு பேச அனுமதிக்கவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். பட்ஜெட் உரையை புறக்கணித்து அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.












Click it and Unblock the Notifications