Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மோப்பம் பிடித்த உளவுத்துறை.. தொக்காக சிக்கும் "புள்ளிகள்".. ஸ்டாலினுக்கு பறந்த ரிப்போர்ட்.. செம கிலி

திமுக பிரமுகர்கள் விரைவில் களையெடுக்கப்படலாம் என்கிறார்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: உளவுத்துறையை மிக சரியாக பயன்படுத்தி வருகிறார் முதல்வர் முக ஸ்டாலின்.. திமுகவின் நல்லாட்சிக்கு இடையூறாக யார் இருந்தாலும், என்ன இருந்தாலும், அவர்கள் யாரென்று பார்த்து லிஸ்ட் எடுத்து வருவதை விடாமல் செய்து கொண்டிருக்கிறது உளவுத்துறை.. அந்த வகையில் இப்போதும் ஒரு புது தகவல் கசிந்து வருகிறது.

அதிமுகவை பொறுத்தவரை, "திமுகவின் பொய்யான வாக்குறுதி + பொங்கல் பரிசு தொகுப்பில் ஊழல்", என்ற 2 அஸ்திரங்களை தன்னுடைய பிரச்சாரங்களில் கையில் எடுத்தது.

எதிர்பார்த்ததுபோலவே, அவர்களுக்கு அவைகள் கை கொடுக்கவும் செய்தது.. எனவேதான், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தீவிரமாக பணிகளை செய்யும்படி ஏற்கனவே முதல்வர் ஸ்டாலின் திமுக கட்சியினருக்கு உத்தரவிட்டு இருந்தார்...

அதிமுக

அதிமுக

எனினும், துவக்க பிரச்சாரமே சற்று மந்தமாக இருப்பதாக உளவுத்துறை திமுக மேலிடத்துக்கு ரிப்போர்ட் ஒன்றினை அனுப்பியிருந்தது.. அந்த ரிப்போர்ட்டில் சில சீனியர் அமைச்சர்களும், எம்எல்ஏக்களும் பிரச்சாரத்திற்கு செல்லாமல் சுணக்கம் காட்டி வருவதாக கூறப்பட்டது. இந்த விஷயத்தை கேள்விப்பட்டு ஸ்டாலின் கொந்தளித்து, அனைவருக்கும் ஸ்டிரிக்ட் உத்தரவு அப்போது பிறப்பித்திருந்தார். இதற்கு பிறகுதான் களப்பணி தீவிரம் எடுத்தது.

 லிஸ்ட்கள் - ரிப்போர்ட்கள்

லிஸ்ட்கள் - ரிப்போர்ட்கள்

அப்போதும்கூட, உளவுத்துறை லேசில் விடவில்லை.. முதல்வருக்கு மீண்டும் ஒரு ரிப்போர்ட்டை தயாரித்து அனுப்பியது.. அந்த ரிப்போர்ட்டில், கடைசி கட்ட பிரச்சாரம் மெத்தனமாக இருந்ததாகவும், இதற்கு காரணம், ஆளும் கட்சி என்பதால் நாம் தான் ஜெயிப்போம் என்கிற நினைப்பு திமுகவினரிடம் இருந்தது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.. அதுமட்டுமல்ல, எதிர்க்கட்சி வேட்பாளர்களையும் எதிர்க்கட்சிக்கு ஆதரவான வாக்காளர்களையும் திமுகவினர் மிரட்டினர் என்கிற தகவலையும் உளவுத்துறை ஸ்டாலினிடம் தெரிவித்துள்ளது.

 மெத்தனம்

மெத்தனம்

இதையெல்லாம் அப்போதே அமைதியாக கேட்டுக் கொண்டாராம் ஸ்டாலின்.. ஆனால், திமுகவினர் எங்கெல்லாம் மெத்தனமாகவும் மமதையாகவும் இருந்தார்கள் என்பதை லிஸ்ட் எடுத்து தனியாக வைத்துவிட்டார்.. எனவே, விரைவில் களையெடுப்பு நடக்கும் என்ற எதிர்பார்ப்பு கடந்த சில தினங்களாகவே கட்சிக்குள் ஏற்பட்டு வருகிறது.. இப்படிப்பட்ட சூழலில்தான் இன்னொரு சிக்கலில் திமுக சிக்கி கொண்டு வருகிறது.. இதற்கு காரணமும் அதிமுகதான்..!

 எரிச்சல்

எரிச்சல்

இந்த முறை திமுக ஆட்சி அமைந்ததில் இருந்து அதிமுக தொடர் குற்றச்சாட்டுகளை கூறி வருகிறது.. குறிப்பாக, திமுக மீது ஊழல் புகார்களை எடப்பாடி பழனிசாமி, திமுக அரசின் சட்டம் ஒழுங்கு குறைபாடுகளை ஓபிஎஸ்ஸும் விடாமல் சொல்லி வருகிறார்கள்.. இருவருமே அவரவர் விஷயங்களில் இதுவரை உறுதியாக உள்ளனர்.. அந்த வகையில், ஓபிஎஸ், திமுகவின் சட்டம் ஒழுங்கு குறித்தும், பாலியல் மற்றும் குற்ற செயல்களில் ஈடுபடும் திமுகவினர் குறித்தும் கேள்விகளை எழுப்பி வருகிறார். இது திமுக மேலிட தரப்பில் எரிச்சலை கூட்டி வருகிறது..

 உளவுத்துறை

உளவுத்துறை

எனவேதான் மீண்டும் ஒரு ரிப்போர்ட்டை உளவுத்துறையிடம் கேட்டுள்ளாராம் முதல்வர் ஸ்டாலின்.. அதாவது, தமிழகம் முழுவதும், திமுகவினர் நடத்திய விரும்பத்தகாத சம்பவங்கள் எவை? யார் மீதெல்லாம் புகார் வந்திருக்கிறது? புகார் தரப்பட்டதில் எஃப்.ஐ.ஆர். போடப்பட்ட கேஸ்கள் எத்தனை? குற்றச்செயல்களில் ஈடுப்பட்டு தப்பித்தவர்கள் யார்? கட்சியில் அவர்களின் பதவி என்ன? அவர்களது குடும்ப பின்னணி என்ன? என்றெல்லாம் ஒரு ரிப்போர்ட் தயாரிக்க சொல்லி மாநில உளவுத்துறை தலைமைக்கு, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார்.

 களையெடுப்பு

களையெடுப்பு

அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள ஸ்டேஷன்களில் இருந்து இந்த தகவல்களை சேகரிக்க ஆரம்பித்து விட்டது உளவுத்துறை... இந்த விஷயத்தை கேள்விப்பட்ட திமுகவினர், எதற்காக இந்த தகவல்களை சேகரிக்கிறார்கள் என பதட்டத்தில் இருக்கிறார்களாம்.. ஏற்கனவே ஸ்டாலினிடம் ஒரு லிஸ்ட் கையில் உள்ள நிலையில், இன்னொரு லிஸ்ட்டும் சேர போவதால், சம்பந்தப்பட்ட திமுகவினருக்கு அடிவயிற்றில் கிலி கிளம்பி உள்ளதாம்..!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+