"முக்குலத்தோர்".. நாளை இருக்கு பாருங்க கச்சேரி! எடப்பாடிக்கு அதிர்ச்சி தரும் ஓபிஎஸ்? பெரிய பிளானாம்!
சென்னை: அதிமுகவில் ஒற்றை தலைமை கோஷம் தீவிரம் அடைந்துள்ள நிலையில், நாளை ஒருங்கிணைப்பளார் ஓ பன்னீர்செல்வம் முக்கியமான நடவடிக்கைகள் இரண்டை எடுக்க போவதாக அதிமுக வட்டாரத்தினர் தெரிவிக்கின்றனர்.
Recommended Video
23ம் தேதி அதிமுகவில் செயற்குழு, பொதுக்குழு நடக்க உள்ள நிலையில் நேற்று முதல்நாள் இதை பற்றி விவாதிக்க அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. ஆனால் இந்த கூட்டத்தில் பொதுக்குழு, செயற்குழு பற்றி விவாதிக்கப்படாமல், ஒற்றை தலைமை குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.
மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கிட்டத்தட்ட 20 நிர்வாகிகள் ஒற்றை தலைமை குறித்து பேசினார். பெரும்பாலானோர் எடப்பாடிக்கு ஆதரவாக பேசினார். முதலில் மாதவரம் மூர்த்திதான் ஒற்றை தலைமை பற்றி பேசி இருக்கிறார். அதன்பின் எம்ஆர் விஜயபாஸ்கர், சிவி சண்முகம், குறி கிருஷ்ணமூர்த்தி, திருத்தணி ஹரி, அருள்மொழி தேவர், சி விஜயபாஸ்கர், கோகுல் இந்திரா, வளர்மதி, ராஜன் செல்லப்பா, ஆர்பி உதயகுமார் ஆகியோர் பேசி உள்ளனர்.

எடப்பாடி ஆதரவு
இந்த கூட்டம் காரணமாக ஓ பன்னீர்செல்வம் தரப்பு கடும் அப்செட் என்று கூறப்படுகிறது. இந்த அதிமுக கூட்டம் முடிந்ததில் இருந்தே ஓ பன்னீர்செல்வத்தை சமாதானம் செய்ய எடப்பாடி ஆதரவாளர்கள் முயன்று வருகிறார்கள். எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து அவருக்கு நெருக்கமான சில தலைகள் சென்று ஓபிஎஸ்ஸிடம் பேசி வருகிறார்கள். எடப்பாடிக்கு பொதுச்செயலாளர் பதவியை விட்டுக்கொடுங்கள். உங்களுக்கு அவைத்தலைவர் உள்ளிட்ட பதவியை கொடுக்கிறோம். உங்கள் மகனுக்கு எல்லா தேர்தலிலும் எம்பி சீட் கிடைக்கும்.

சமாதானம்
நாம் ஆட்சிக்கு வந்தால் உங்களின் இன்னொரு மகனுக்கும் அமைச்சர் சீட் ரெடி பண்ணலாம் என்று கூறி அவருக்கு சமாதானம் செய்து வருகிறார்களாம். ஆனால் இருப்பதை விட்டுவிட்டு பறக்க ஆசை பட முடியாது. ஏற்கனவே நிறைய இழந்துவிட்டேன். இனியும் இழக்க முடியாது. கட்சியை விட்டுத்தர நான் தயாராக இல்லை. எப்போதும் நான்தானே விட்டுத்தருகிறேன். இப்போது எடப்பாடி விட்டுத்தரட்டும் என்று பன்னீர்செல்வம் உறுதியாக சொல்லிவிட்டாராம்.

ஓபிஎஸ் உறுதி
இந்த நிலையில்தான் நாளை எடப்பாடி கேம்பிற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஓபிஎஸ் நாளை இரண்டு பெரிய விஷயங்களை செய்ய போகிறாராம். ஒன்று நாளை தமிழ்நாடு முழுக்க தனக்கு ஆதரவாக போஸ்டர்களை ஓட்ட ஏற்பாடு செய்து இருக்கிறாராம். அதிமுக தொண்டர்கள், மாவட்ட செயலாளர்கள் மனதில்தான் தான்தான் ஒற்றை தலைமை என்பதை நிரூபிக்கும் விதமாக போஸ்டர் ஓட்ட போகிறாராம்.

போஸ்டர்
இதற்கும், இதுவரை ஒட்டப்பட்ட போஸ்டருக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது. இதில் என்ன ஷாக் இருக்க போகிறது என்று கேட்கலாம். ஆனால் ஓபிஎஸ் நாளை ஓட்ட போகும் போஸ்டரில் சிலரை நேரடியாகவும், மறைமுகமாகவும் தாக்கி வாசகங்கள் இருக்குமாம். அதோடு ஜெயலலிதா குறித்தும் வலுவான வாசகங்கள் இருக்கும் என்கிறார்கள் ஓபிஎஸ்ஸுக்கு நெருக்கம் ஆனவர்கள். இதற்கான உத்தரவு ஏற்கனவே சென்றுவிட்டதாம்.

என்ன ஷாக்
ஏற்கனவே சென்னையில் ஓபிஎஸ் மகன் விபி ஜெயபிரதீப் முன்னெடுப்பில் நேற்று அதிகாலை பல இடங்களில் போஸ்டர் ஒட்டப்பட்டது. அதேபோல் இன்று இரவும் அதிரடி போஸ்டர்களை ஓட்ட இருக்கிறார்களாம். எடப்பாடிக்கு ஆதரவாக மாவட்ட செயலாளர்கள் யாரும் தீர்மானம் நிறைவேற்றும் முன் தனக்கு ஆதரவாக மாவட்ட செயலாளர்களை தீர்மானம் நிறைவேற்ற சொல்ல போகிறாராம். இதற்காக தனக்கு ஆதரவாக உள்ள மாவட்ட செயலாளர்களை ஓபிஎஸ் தரப்பு அணுகி வருகிறதாம்.

தீர்மானம்
அதிலும் முக்குலத்தோர் சமூக பிரிவை சேர்ந்தவர்களை ஓபிஎஸ் தரப்பு அணுகி வருகிறதாம். தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் சீக்கிரம் தீர்மானங்களை நிறைவேற்றுங்கள், என்று உத்தரவிட இருக்கிறாராம். நாளையே தீர்மானம் நிறைவேற்றப்படலாம் என்றும் கூறுகிறார்கள். இதை தெரிந்து கொண்டே எடப்பாடி பழனிசாமி அதிமுகவில் உள்ள முக்குலத்தோர் தலைவர் ஆர்பி உதயகுமார், காமராஜ், நத்தம் விசுவநாதன் ஆகியோருடன் தீவிரமாக பேசி வருகிறாராம்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications